Healthy Drink : தொப்பையை குறைக்க, நீரிழிவை கட்டுப்படுத்த என உடலில் மாயம் செய்யும் பானங்கள் இவைதான்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Healthy Drink : தொப்பையை குறைக்க, நீரிழிவை கட்டுப்படுத்த என உடலில் மாயம் செய்யும் பானங்கள் இவைதான்!

Healthy Drink : தொப்பையை குறைக்க, நீரிழிவை கட்டுப்படுத்த என உடலில் மாயம் செய்யும் பானங்கள் இவைதான்!

Priyadarshini R HT Tamil
Updated Jul 22, 2024 03:15 PM IST

Healthy Drink : தொப்பையை குறைக்க, நீரிழிவை கட்டுப்படுத்த என உடலின் பல்வேறு பிரச்னைகளுக்கும் நீங்கள் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பருகும் இந்த பானங்கள் உதவும். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Healthy Drink : தொப்பையை குறைக்க, நீரிழிவை கட்டுப்படுத்த என உடலில் மாயம் செய்யும் பானங்கள் இவைதான்!
Healthy Drink : தொப்பையை குறைக்க, நீரிழிவை கட்டுப்படுத்த என உடலில் மாயம் செய்யும் பானங்கள் இவைதான்!

இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

நீங்கள் எளிதாக குறைக்கலாம் எடையை, ஈசியாக தள்ளலாம் தொப்பையை உள்ளே. அது மட்டுமின்றி நீங்கள் இதை செய்வதன் மூலம் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளும் கிடைக்கின்றன.

உடல் எடையை குறைக்க சீரகத்தண்ணீர்

ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கொதிக்கவைத்து அல்லது கொதித்த தண்ணீரில் சீரகத்தை மூடிவைத்து அல்லது ஓரிரவு சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து என எப்படி வேண்டுமானாலும், சீரகத்தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும்.

நீரிழிவு கட்டுப்பாட்டுக்கு வெந்தய தண்ணீர்

வெந்தயத்தை ஓரிரவு ஊறவைத்து அந்த தண்ணீரை அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் பருகினால், சர்க்கரை நோய் குணமாகும். இன்ஸ்டன்ட்டாக தண்ணீருடன் வெந்தயத்தை கொதிக்க வைத்து, சிட்டிகை கல்லுப்பு அல்லது இந்துப்பு சேர்த்தும் பருகலாம். ஊறவைத்து பருகும்போது நன்மைகள் பன்மடங்கு கிட்டும்.

தைராய்ட்டை தடுக்கும் வரமல்லி தண்ணீர்

தைராய்ட் பிரச்னையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், ஒரு டம்ளர் தண்ணீரில் ஓரிரவு வரமல்லி விதைகளை ஊறவைத்து, காலையில் எழுந்தவுடன் வடிகட்டி அதை பருகவேண்டும். உடனடி பானமாக தண்ணீரில் சுக்குடன் கொதிக்கவைத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்தும் பருகலாம். ஆனால், ஊறவைத்து பருவதில்தான் ஆற்றல் அதிகம்.

பிசிஓஎஸ் பிரச்னைகளுக்கு பட்டை தண்ணீர்

லவங்கப்பட்டையை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து வடிகட்டி, இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பருகிவந்தால் உங்களுக்கு ஏற்படும் பிசிஓஎஸ் பிரச்னைகள் குணமாகி கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

மாதவிடாய் பிரச்னைகளுக்கு சோம்பு தண்ணீர்

ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். பின்னர் அதை வடிகட்டி அதில் தேன் கலந்து பருகினால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகள் குறையும்.

கொழுப்பை கரைக்கும் பூண்டு தண்ணீர்

கால் லிட்டர் தண்ணீரில் 10 பல் பூண்டை தட்டிப்போட்டு, அது பாதியாக கொதிக்கும் வரை காத்திருக்கவேண்டும். பின்னர் வடிகட்டி அதில் எலுமிச்சை பழச்சாறு மற்றும் தேன் கலந்து பருகினால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்தோடும்.

முகப்பருக்களை முற்றிலும் நீக்கும் மஞ்சள் தண்ணீர்

தண்ணீரை சூடாக்கி அதில் மஞ்சள் தூளை கலந்து பருகினால், அது உங்கள் முகத்தில் உள்ள பருக்களை முற்றிலும் நீக்கும்.

ஒற்றைத்தலைவலியைப் போக்கும் இந்துப்பு தண்ணீர்

சூடான தண்ணீரில் பிங்க் நிற இந்துப்பை கலந்து பருகினால், அது உங்களின் ஒற்றைத்தலைவலியைப்போக்கும். அதனுடன் உடலில் தேங்கியுள்ள மலத்தையும் உடனடியாக வெளியேற்றி மலச்சிக்கலையும் போக்கும்.

இத்தனை தண்ணீரையும் காலையில் வெறும் வயிற்றில் பருகுவது எப்படி என்று குழம்பவேண்டாம். ஒவ்வொன்றையும் ஒவ்வொரு மாதம் என ஒரு குறிபிட்ட இடைவெளிவிட்டு பின்பற்றி வர பலன் தரும் அல்லது உங்களுக்கு பிரச்னைகள் இருக்கும் காலத்தில் அந்தந்த பிரச்னைகளுக்கு உதவும் தண்ணீரை பருகலாம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.