தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Healthy Benefits Of Eating Coriander

Coriander Benefits: பல நோய்களை விரட்டி அடிக்கும் மருத்துவ குணம் கொண்ட கொத்தமல்லி!

Karthikeyan S HT Tamil
Jan 17, 2024 08:16 PM IST

Coriander Benefits: கொத்தமல்லியின் மருத்துவ குணத்தை பற்றி தெரிந்திருந்த நம் முன்னோர்கள் சமையலில் தவறாது கொத்தமல்லி இலைகலளை சேர்த்து வந்துள்ளனர்.

கொத்தமல்லி
கொத்தமல்லி

ட்ரெண்டிங் செய்திகள்

மருத்துவ குணங்களை கொண்ட கொத்தமல்லி இலைகளை நாம் அன்றாடம் சமையலுக்கும் பயன்படுத்தி வருகிறோம். இதில் நார்ச்சத்துக்கள், இரும்புச் சத்து, மாங்கனீஸ், கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு வைட்டமின்கள், கனிமச் சத்துக்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. கொத்தமல்லியின் விதை, காரம், கசப்பு, துவப்பு, இனிப்பு என 4 விதமான சுவைகளை கொண்டது.

கொத்தமல்லி தாவரத்தின் தண்டு, இலை மற்றும் வேர் என அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டவை. இந்த கட்டுரையில் கொத்தமல்லி இலைகளின் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

 • கொத்தமல்லி இலைகளில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இவை உடலின் செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணம் ஆகச் செய்ய உதவுகிறது.
 • புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் இது சரி செய்கிறது.
 • இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது
 • வாய்ப்புண்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது
 • ஆரோக்கியமான கண் பார்வைக்கு கொத்தமல்லி இலைகள் சிறந்தது. கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும்.
 • கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து கொத்தமல்லியைச் சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும்
 • உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் சி சத்து இரத்த வெள்ளை அணுக்களை திறம்பட செயல்பட வைக்க உதவுகிறது. இரும்புச் சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
 • கொத்தமல்லி இலைகளில் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய கால்சியம், மாங்கனீஸ், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிகளவு காணப்படுகிறது.
 • வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, குடல் பிடிப்பு, வாயு அல்லது குமட்டல் போன்ற பல்வேறு செரிமான பிரச்னைகளுக்கு கொத்தமல்லி சிறந்த மூலிகையாக செயல்படுகிறது.
 • கொத்தமல்லி இலைகளை வழக்கமாக உட்கொள்வது எல். டி. எல் போன்ற கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பயன்படுகிறது. நல்ல கொழுப்பை மேம்படுத்த உதவுகிறது.
 • ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது. இன்சுலின் சுரப்பை தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை கொண்டது.

தினமும் நாம் உண்ணும் உணவில் ஏதோ ஒரு விதத்தில் கொத்தமல்லியை சேர்த்து வந்தால் நோயற்ற ஆரோகியமான வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்