Benefits of Almond: நீண்ட ஆயுளை அதிகரிக்க பாதாம் எவ்வாறு பயன்படுத்தலாம்? ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிட வேண்டும்!
Benefits of Almond: பாதாம் ஆரோக்கியமானது. பல மருத்துவர்கள் ஒவ்வொரு நாளும் அவற்றை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். ஆரோக்கியத்திற்கு ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிட வேண்டும்? அவை நம் வாழ்நாளை அதிகரிக்குமா? என இங்கு பார்ப்போம்.

பாதாம் ஆரோக்கியமான மற்றும் மிகவும் சத்தான பருப்பு வகைகளில் ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பாதாம் பருப்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்கவும், மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, ரிபோஃப்ளேவின், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் செலினியம் போன்ற அத்தியாவசிய ஆக்ஸிஜனேற்றங்கள் பாதாமில் நிறைந்துள்ளன. இது ஆரோக்கியமானது. எடை இழப்புக்கு பாதாம் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எடை குறைக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு பாதாம் பால் ஒரு நல்ல தேர்வாகும். பாதாமில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. எடை குறைக்க உதவுகிறது.
மூளை ஆரோக்கியம்
பாதாம் நினைவாற்றலை மேம்படுத்தவும், கற்றல் திறனை மேம்படுத்தவும், ஆரோக்கியமான மூளை செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவுகிறது. பாதாமில் உள்ள இரண்டு முக்கியமான சத்துக்கள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவும் ரிபோஃப்ளேவின் மற்றும் எல்-கார்னைடைன்.
நோய் எதிர்ப்பு சக்தி
பாதாம் நோய் எதிர்ப்பு சக்திக்கு பலம் தரும். காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் போன்ற வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை பாதாம் அதிகரிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. பாதாமில் உள்ள கலவைகள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.