Health Tips : 5 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த ஒரு டிப்ஸ் மட்டும் போதும்!
Health Tips : 5 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த ஒரு டிப்ஸ் மட்டும் போதும்!
பொதுவாக உடலில் எடை அதிகம் இருந்தால், அது உடலுக்கு பல்வேறு பிரச்னைகளை கொண்டுவரும். எந்த பகுதியையும் விட, உடலில் வயிற்றுப்பகுதியில் தங்கும் கொழுப்பு உடலுக்கு பல்வேறு தீங்குகளை விளைவிக்கக்கூடியவை.
உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் வயிற்றுப்பகுதி ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் போதும், உடலில் எவ்வித பிரச்னைகளும் ஏற்படாது. எனவே உடல் எடை அதிகரிப்பில் தொப்பையை நாம் விழவிடக்கூடாது. தொப்பை வர துவங்கிவிட்டாலே நாம் போதிய பயிற்சிகள் மற்றும் உணவு முறைகளை பின்பற்றி அதை குறைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
5 நாளில் 5 கிலோ வரை எடை குறைக்க உதவும். குறிப்பாக தொப்பையில் உள்ள கொழுப்பை குறைத்து, தொப்பையின் சுற்றளவைக் குறைக்க உதவுகிறது.
இதை முயன்று பலனளிக்கவில்லையென்றால், இதனுடன் சில உடற்பயிற்சிகள் மற்றும் சில டிப்ஸ்களை பின்பற்ற வேண்டும். இதை ஆண்கள், பெண்கள் இருவரும் செய்யலாம். 5 நாள் முயற்சி செய்து பாருங்கள். இதை தொடர்ந்து எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஏனெனில் இது முற்றிலும் இயற்கையாக செய்யக்கூடியது என்பதால் எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.
தேவையான பொருட்கள்
சீரகம் – 2 ஸ்பூன்
தண்ணீர் – ஒரு டம்ளர்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
செய்முறை
கடாயில் சீரகத்தை சேர்த்து நல்ல வெடித்து வருமளவு வாசம் வரும் வரை வறுக்க வேண்டும். வறுபட்டவுடன் இதில் தண்ணீரை சேர்த்து அடுப்பை அணைத்துவிடவேண்டும்.
இந்த கலவையை நன்றா மூடி வைத்துவிட்டு, ஆறவைக்க வேண்டும். நிறைய தண்ணீர் இருப்பதுபோல் உணர்ந்தால் அந்த கொஞ்சம் தண்ணீரை வடிகட்டி தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
எஞ்சிய சீரகத்தையும் தண்ணீரையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து, அரைத்து, ஒரு டம்ளரில் சேர்த்துக்கொள்ளுங்கள். மிக்ஸியை அலசிய தண்ணீரையும் சேர்த்து, அதனுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் தேவைப்பட்டால், தேன் மற்றும் இந்துப்பு சேர்த்து பருகலாம். ஆனால் இந்த தண்ணீரை அப்படியே பருகுவது மிகவும் நல்லது.
காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை பருகவேண்டும். காலையில் பல் துலக்கியவுடன், ஒரு டம்ளர் சாதாரண தண்ணீர் பருகிய பின்னர் இந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.
இதை வடிகட்டாமல் பருகவேண்டும். இந்த முறையில் 5 நாள் சீரகத்தண்ணீர் பருகும்போது, உங்களுக்கு நல்ல பலன் தரும்.
இதனுடன் மைதா உணவுகளான பரோட்டா, பப்ஸ் உள்ளிட்ட பேக்கரி உணவுகளை சேர்த்துக்கொள்ளக்கூடாது. கீரை மற்றும் வாழைத்தண்டு அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதை எடுத்துக்கொள்ளும்போது எவ்வித பக்கவிளைகளையும் ஏற்படுத்தாது. இதனுடன், போதிய உடற்பயிற்சி, குறிப்பாக வயிற்றுப்பகுதி கொழுப்பை குறைக்கக் கூடிய உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து, ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்