ஆரோக்கிய குறிப்புகள் : இதயத்துக்கு ‘Good, Bad, Ugly’ உணவுகள் என்னவென்று தெரியணுமா? அப்போ டாக்டர் சொல்றத கேளுங்க!
தனது அண்மை வீடியோவில் இதயத்துக்கு குட், பேட், அக்லி உணவுகள் குறித்து தெரிவித்துள்ளார். அண்மையில் குட், பேட், அக்லி படம் வெளியாகியுள்ளது. அதையே தனது வீடியோவுக்கு தலைப்பாக்கிவிட்டார் டாக்டர் பிள்ளை. அவர் அதில் என்ன கூறியுள்ளார் என்று பார்க்கலாம்.

இதயத்துக்கு நல்லது செய்யக்கூடிய உணவுகள் குட், இதயத்துக்கு கெட்டது செய்யக்கூடிய உணவுகள் பேட், இதயத்துக்கு படு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய உணவுகள் அக்லி என இதயத்துக்கான ‘குட், பேட், அக்லி’ உணவுகள் என்னவென்று பாருங்கள்.
மருத்துவர் பிள்ளை தனது சமூக வலைதள பக்கங்களில் மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். அதில் மக்களுக்கு தேவையான, எளிய குறிப்புக்களை பகிர்ந்து வருகிறார். இந்த எளிய குறிப்புக்களை பயன்படுத்தி மக்கள் பலன்பெறமுடியும். அவர் தனது அண்மை வீடியோவில் இதயத்துக்கு குட், பேட், அக்லி உணவுகள் குறித்து தெரிவித்துள்ளார். அண்மையில் குட், பேட், அக்லி படம் வெளியாகியுள்ளது. அதையே தனது வீடியோவுக்கு தலைப்பாக்கிவிட்டார் டாக்டர் பிள்ளை. அவர் அதில் என்ன கூறியுள்ளார் என்று பார்க்கலாம்.
இதுகுறித்து டாக்டர் பிள்ளை கூறியதாவது
இதயத்துக்கு ‘குட்’ உணவுகள்
இதயத்துக்கு குட் உணவுகள் அதாவது நல்லது தரும் உணவுகளில் முதலில் இடம்பிடித்திருப்பது மீன், மீனில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. சூரை மீன், பாறை மீன், நெத்திலி மீன், அயிரை மீன் இந்த மீன்களை அனைவரும் அதிகம் சாப்பிடவேண்டும். அடுத்து பழங்கள், காய்கறிகள், கீரைகள், நட்ஸ்கள் மற்றும் விதைகள், டார்க் சாக்லேட் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளும்போது அது இதயத்துக்கு இதமளிக்கிறது.
இதயத்துக்கு ‘பேட்’ உணவுகள்
ப்ராசசஸ்ட் மீட், பீஃப், மட்டன் என பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. பேக்கரி உணவுகள், டீப்பாக வறுத்து செய்யப்படும் அனைத்து உணவுகளும் இதயத்துக்கு இதம் தராதவை. சிக்கன், மட்டன் அல்லது பக்கோடா வறுவல் என அனைத்தும் நல்லதல்ல. கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளும் இதயத்துக்கு நல்லது கிடையாது. இட்லி, தோசையும் இதயத்துக்கு நல்லது கிடையாது. இதற்கான மாவை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தும்போது அது இதயத்துக்கு தீங்கு விளைவிக்கிறது.
இதயத்துக்கு ‘அக்லி’ உணவுகள்
பாக்கெட்டில் வரும் சிப்ஸ் வகைகள், கார்பனேடட் பானங்கள், டின்களில் அடைத்து வரும் உணவுகள், ஃப்ரைட் உணவுகள், ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், இவை ஏற்கனவே சமைத்த சாதத்தில் எண்ணெய்களை ஊற்றி தயாரித்து தரும் உணவுகள், இதன் சுவை நன்றாக இருக்கும். ஆனால் இதயத்துக்கு கேடு விளைவிக்க கூடியதாகும். பீட்சா, பர்கர், கேஎப்சி உணவுகளும் இதயத்துக்கு நல்லதல்ல.
எனவே இதில் உங்கள் இதயத்துக்கு எது நல்லது என்று தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். எப்போதாவது சுவைக்காக உணவும், எப்போதும் ஆரோக்கியத்துக்காக உணவும் சாப்பிடுவது நல்லது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
