தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Health Tips Threats Of Recent Studies In Medicine Interesting

Health Tips : மருத்துவத்துறையில் சமீப ஆய்வுகளின் அச்சுறுத்தலும்; சுவாரஸ்யங்களும்!

Priyadarshini R HT Tamil
Jan 14, 2024 12:00 PM IST

Health Tips : அறிவியலின் வளர்ச்சி காரணமாக பல புது மருத்துவ செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்திய மருத்துவ செய்திகளை மக்கள் தெரிந்துகொண்டால், அது பயனுள்ளதாக அமையும்.

Health Tips : மருத்துவத்துறையில் சமீப ஆய்வுகளின் அச்சுறுத்தலும்; சுவாரஸ்யங்களும்!
Health Tips : மருத்துவத்துறையில் சமீப ஆய்வுகளின் அச்சுறுத்தலும்; சுவாரஸ்யங்களும்!

ட்ரெண்டிங் செய்திகள்

மனித உடலில் கொழுப்பு 2 முக்கிய பாகங்களில் உள்ளன.

தோலுக்கடியில் (SAT-Subcutaneous Adipose tissue)

வயிற்றுப் பகுதியில் பல உறுப்புகளை சுற்றி கொழுப்பு இருப்பது (VAT-Visceral Adipose Tissue)

இதில் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகமாக இருப்பதை எளிதில் பெல்ட் அல்லது அரை ஞாண் கயிறுகொண்டு எளிதில் அளக்க முடியும்.

இதன் மூலம் நோய் பாதிப்பை (சர்க்கரைநோய், ரத்தக்கொதிப்பு, மூளை பாதிப்பு (Stroke), மாரடைப்பு பாதிப்பிற்கு அதிகம் உள்ளாகும் வாய்ப்பு) எளிதில் கண்டறிய முடியும்.

இடை/இடுப்பளவு - Waist-Hip ratio

ஆண்களுக்கு - 0.9,

பெண்களுக்கு -0.8 அளவிற்கு அதிகம் இருந்தால் மேற்சொன்ன பாதிப்பு வரும் வாய்ப்பு அதிகமாகும்.

ஆண்களுக்கு பெல்ட் அளவு 90 செ.மீ,

பெண்களுக்கு-80 செ.மீ,

அதிகமாக இடையளவு

ட்ரைகிலிசரைட் (Triglycerides) அதிகமாக இருந்தால், அவர்களுக்கு சர்க்கரை மற்றும் இதய நோய்கள் அதிகம் வருவது ஆய்வில் (Journal of American College of Cardiology, Volume 78,2021) உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகம் சேர்வதால், (VAT), அடிப்போகைன்ஸ் (Adipokines) வேதிப்பொருள் அதிகமாகி, அழற்சியை ஏற்படுத்தி சர்க்கரை நோய் - 2 வரும் வாய்ப்பு அதிகமாகிறது. (இன்சுலின் ஹார்மோன் சுரந்தும் செயல்பட முடியாமல் போவது - Insulin Resistance ஏற்படுவதால்)

புற்றுநோய் 

Lancet மருத்துவ ஆய்வு பத்திரிக்கையில், புற்றுநோய் நோயாளிகளுக்கு மருந்தின் மூலம் (Chemotherapy) சிகிச்சையின்போது ஏற்படும் முக்கிய பின்விளைவான வாந்தி, வாந்திஉணர்வை கட்டுப்படுத்த மனநலசிகிச்சையில் பயன்படுத்தப்பட்டு வந்த ஓலான்சிபின் (Olanzapine) 10 மி.கி. என்ற அளவில் பயன்படுத்தும்போது ஏற்படும் அசதி, பகல் நேரத்தில் அதிக தூக்கம் போன்ற பிரச்னைகள், தற்போது குறைந்த அளவில் (2.5 மி.கி.) ஓலான்சபின் பயன்படுத்தப்பட்டாலே, வாந்தி மற்றும் வாந்தி உணர்வு (Nausea) தடுக்கப்படுவதுடன், அசதி மற்றும் அதிக பகல் தூக்கம் போன்றவையும் பெருமளவு ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

கொரோனா

கொரோனா பாதிப்பிற்குப் பின் உருவாகும் நீண்ட நாள் பாதிப்பு - (Long Covid) 10.1 சதவீதம் பேருக்கு, 3 மாதத்தில் ஏற்படுவதாக கேரள ஆய்வு உறுதிபடுத்தியதில், அதில் தசைத் தளர்வு முக்கிய அறிகுறியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கு காரணமாக, உடம்பின் நோய் எதிர்ப்புத் திறனில் மாற்றம் ஏற்பட்டு (தடுப்பூசி போட்டவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது) தசை செல்களுக்கு மைட்டோகாண்ட்ரியா மூலம் கிடைக்கும் ஆற்றல் கிடைக்காமல் போவது காரணமாக இருப்பது Amsterdam ஆய்வில் கண்டறியப்பட்டு அது Nature Communications ஆய்வு பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது.

குறைப் பிரசவத்திற்கான காரணம் 

கர்ப்ப காலத்தில் வளரும் குழந்தையின் செல்களும், தாயின் செல்களும் பேசிக்கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. Decidua basalis, Decidua parietalis தான் தாய்-சேய்க்கான இணைப்பு புள்ளி.

தாயின் T செல்களிலிருந்து வரும் சமிக்ஞை வளரும் குழந்தையின் T செல்களுக்கு போய், அந்த வளரும் குழந்தையின் T செல்களின் செயல்பாடு காரணமாக குறைப்பிரசவம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சமிக்ஞைகளை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் குறைப்பிரசவ வாய்ப்பை ஆரம்பத்தில் கண்டறிந்து தக்க தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

காற்று மாசு

போகியின்போது ஏற்படும் காற்று மாசுப்பாடும் கொரோனா அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

மணலியில் காற்றின் தரக் குறியீடு 179 (14.1.24) என மோசமாக உள்ளது. PM 2.5 துகள்கள் அளவு-370 மைக்ரோகிராம்/கன மீட்டர், PM 10 துகள்களின் அளவு-432 மைக்ரோகிராம்/கன மீட்டர் என மிக அதிகமாக உள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக, குறைந்த வெப்பமும், காற்றின் வேகம் இல்லாமல் இருப்பதும் காராணமாக கூறுப்பட்டாலும், தற்போதைய காற்று நிலவரம் எண்ணூரிலிருந்து (அமோனியா கசிசை நினைவில் கொள்க) காற்று மாசுப்பாடு பாதிப்பை சென்னை நகருக்குள் கொண்டு வரும் என செய்திகள் வெளியாகும்போது அதிகரிக்க வாய்ப்புள்ளது. மருத்துவ குறிப்புகளில் அறிவியல் நம்மை வழிநடத்தட்டும்.

நன்றி - மருத்துவர் புகழேந்தி. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்