Health Tips : உடலில் வியாதிகளை அடித்து விரட்டும் வழி! சாப்பாட்டுடன் சேர்த்து இந்த ஒரு பொடியை தினமும் எடுத்தால் போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Health Tips : உடலில் வியாதிகளை அடித்து விரட்டும் வழி! சாப்பாட்டுடன் சேர்த்து இந்த ஒரு பொடியை தினமும் எடுத்தால் போதும்!

Health Tips : உடலில் வியாதிகளை அடித்து விரட்டும் வழி! சாப்பாட்டுடன் சேர்த்து இந்த ஒரு பொடியை தினமும் எடுத்தால் போதும்!

Priyadarshini R HT Tamil
Jan 31, 2024 10:27 AM IST

Health Tips : உடலில் வியாதிகளை அடித்து விரட்டும் வழி! சப்பாட்டுடன் சேர்த்து இந்த ஒரு பொடியை தினமும் எடுத்தால் போதும்!

Health Tips : உடலில் வியாதிகளை அடித்து விரட்டும் வழி! சப்பாட்டுடன் சேர்த்து இந்த ஒரு பொடியை தினமும் எடுத்தால் போதும்!
Health Tips : உடலில் வியாதிகளை அடித்து விரட்டும் வழி! சப்பாட்டுடன் சேர்த்து இந்த ஒரு பொடியை தினமும் எடுத்தால் போதும்!

சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் ஆற்றலை வழங்கக்கூடியது.

தேவையான பொருட்கள்

முருங்கைக்கீரை – ஒரு கட்டு

மற்ற கீரைகளைவிட முருங்கைக்கீரையில் அதிகளவில் உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளது. இதில் 9 அமினோ அமிலங்கள் உள்ளது. மற்ற கீரைகளை விட 25 மடங்கு இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.

நாம் செயற்கையாக மாத்திரைகள் மூலம் எடுத்துக்கொள்ளும் இரும்புச்சத்தைவிட முருங்கைக்கீரையில் அமைந்துள்ள இயற்கையான இரும்புச்சத்து உடலுக்கு நன்மை பயக்கும்.

வளரிளம் பெண்கள், சின்ன குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என யார்வேண்டுமானாலும் இதனை எடுத்துக்கொள்ளலாம். ஆஸ்துமா, வறட்டு இருமல், தலைவலி, மூட்டு வலி, மலட்டுத்தன்மை என அனைத்தையும் நீக்கக்கூடிய தன்மை இந்த முருங்கைக்கீரைக்கு உள்ளது.

நமது நாட்டில் இந்த கீரை இதன் மருத்துவ குணங்களுக்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை பவுடராக்கியும் பயன்படுத்துகின்றனர்.

கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்

வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்

வர மிளகாய் – 10

மல்லிவிதை – 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

எள்ளு – ஒரு டேபிள் ஸ்பூன் (கருப்பு எள் அல்லது வெள்ளை எள் என எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்)

இது பொடிக்கு சுவையை கொடுப்பதுடன், எள்ளில் அதிகளவில் கால்சியம் சத்துக்களும் உள்ளது.

புளி – சிறிய துண்டு

கல் உப்பு – தேவையான அளவு

பெருங்காயத்தூள் – ஒரு ஸ்பூன்

(கட்டியாக எடுத்தால் ஒரு சிறிய கட்டியை சிறிது நேரம் வறுத்துவிட்டு, பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்)

எண்ணெய் -ஒரு ஸ்பூன்

செய்முறை

முருங்கைக்கீரையை சுத்தம் செய்து நன்றாக அலசி காயவைக்க வேண்டும். வெயிலில் உலர்த்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. நிழலிலே ஒரு துணியில்போட்டு ஈரப்பதம் முற்றிலும் போகுமளவுக்கு காயவைக்க வேண்டும். ஒரு துளி ஈரம் கூட இருக்கக்கூடாது.

ஒரு கடாயில் அனைத்து பருப்புகள், எள், மிளகாய், மல்லி, சீரகம் என அனைத்தையும் சேர்த்து நன்றான பொன்னிறமாகும் வரை அடுப்பை குறைவான தீயில் வைத்து வறுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை ட்ரையாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

கடைசியாக புளி, கல் உப்பு, பெருங்காயப்பொடி என அனைத்தையும் சேர்த்து வறுத்து இறக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சூடாக்கி, அதில் முருங்கைக்கீரையை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். நிறம் மாறாமல் அதே நேரத்தில் கிரிஸ்பியாகும் வரை வறுக்க வேண்டும். ஈரத்தன்மை போகவேண்டும். அடுப்பை குறைவாக வைத்துதான் அனைத்தையும் வறுக்க வேண்டும்.

முதலில் வறுத்த பருப்புக்களை சேர்த்து காய்ந்த மிக்ஸி ஜாரில் கொர கொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வறுத்த முருங்கைக்கீரையை சேர்த்து மீண்டும் கொரகொரப்பாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

இதை ஈரமில்லாத காற்றுப்புகாத ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை வெளியில் வைத்து பயன்படுத்தினால் ஒரு 10 நாட்கள் வைத்துக்கொள்ளலாம் அல்லது ஃபிரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை வைத்துக்கொள்ள முடியும்.

இதை வாரத்துக்கு ஒருமுறை ஃபிரஷ்ஷாக பயன்படுத்திக்கொள்ளலாம். இதை தினமும் பயன்படுத்தலாம். அனைத்து வயதினரும் பயன்படுத்தலாம். சூடான சாதத்தில் சேர்த்து நெய் அல்லது நல்லெண்ணெயுடன் பிசைந்து சாப்பிடலாம்.

இட்லி, தோசைக்குக்கும் தொட்டுகொண்டு சாப்பிட சுவை அள்ளும். உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுத்து, உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது.

இன்றைய வாழ்வியல் மாற்றங்களால் பல்வேறு பிரச்னைகளால் அவதியுறுவோருக்கு இது சிறப்பான தீர்வு கொடுக்கிறது. உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை வழங்கி, உடல் சோர்வு, மூட்டு வலி, கை-கால் வலியை சரிசெய்து, உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை சரிசெய்யும். பல நோய்களை விரட்டியடிக்கும்.

பொறுப்பு துறப்பு - இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு உங்களுக்கு உதவவில்லையென்றால் மருத்துவரின் பரிந்துரைதான் சிறந்தது. இவையனைத்தும் கிடைத்த தகவல்களின்பேரில் கூறப்பட்டவை. இதன் உறுதித்தன்மையை ஹெச்டி தமிழ் ஆராயவில்லை. எனவே இங்கு பகிரப்படும் மருத்துவக்குறிப்புகளை பின்பற்றி ஆரோக்கியமாக வாழலாம். ஆனால், தீவிரமான நிலைகளுக்கு மருத்துவர்களின் ஆலோசனைகளே மேலானது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.