ஆரோக்கிய குறிப்புகள் : குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நீங்கள் அன்றாடம் கொடுக்க வேண்டிய உணவுகள் என்னவென்று பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஆரோக்கிய குறிப்புகள் : குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நீங்கள் அன்றாடம் கொடுக்க வேண்டிய உணவுகள் என்னவென்று பாருங்கள்!

ஆரோக்கிய குறிப்புகள் : குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நீங்கள் அன்றாடம் கொடுக்க வேண்டிய உணவுகள் என்னவென்று பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Published May 12, 2025 10:58 AM IST

குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க நீங்கள் அன்றாடம் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய உணவுகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஆரோக்கிய குறிப்புகள் : குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நீங்கள் அன்றாடம் கொடுக்க வேண்டிய உணவுகள் என்னவென்று பாருங்கள்!
ஆரோக்கிய குறிப்புகள் : குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நீங்கள் அன்றாடம் கொடுக்க வேண்டிய உணவுகள் என்னவென்று பாருங்கள்!

நட்ஸ்கள் மற்றும் விதைகள்

பாதாம், வால்நட்ஸ்கள், ஃப்ளாக்ஸ் விதைகள் மற்றும் சியா விதைகள் போன்ற நட்ஸ்களில் வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்துள்ளது. அது குழந்தைகளின் மூளை செல்களை பாதுகாத்து மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

பெரிகள்

பெரிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. பெரிகள் மூளையின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இது நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. ப்ளூபெரிகள், ஸ்ட்ராபெரிகள் மற்றும் ப்ளாக் பெரிகள் என அனைத்து வகை பெரிகளையும் நீங்கள் யோகர்ட்டில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது ஸ்மூத்தியில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது காலையில் சாப்பிடலாம்.

ஃபேட்டி ஃபிஷ்

மீன்களில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் அதிகம் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. ஒட்டுமொத்த மூளையின் செயல்பாடுகளுக்கும் உதவுகிறது.

அவகேடோ

அவகேடோக்களில் ஆரோக்கியமான மோனோ சாச்சுரேடட் கொழுப்புக்கள் நிறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும், மூளையின் இயக்கத்துக்கும் உதவுகிறது. இதை நீங்கள் சாலட்களில் சேர்த்து சாப்பிடலாம். முழுதானிய பிரட்களுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

பருப்பு வகைகள்

கொண்டைக்கடலை, அனைத்து வகை பருப்புகள் உள்ளிட்டவற்றில் தாவர புரதம் அதிகம் உள்ளது. இதில் நார்ச்சத்துக்களும், எண்ணற்ற கார்போஹைட்ரேட்களும் உள்ளன. இது உங்கள் மூளையின் இயக்கத்தை அதிகரிக்கும். உங்களுக்கு அதிக ஆற்றலைக் கொடுக்கும்.

முழு தானியங்கள்

ஓட்ஸ், பிரவுன் அரிசி, முழு தானிய பிரட் வகைகள் என உங்கள் மூளைக்கு தொடர்ந்து குளுக்கோஸ் கொடுக்கும் உணவுகள் ஏராளம் உள்ளது. இது கவனிக்கும் திறனை அதிகரிக்கிறது. நாள் முழூவதும் ஆற்றலைத் தக்கவைக்கிறது.

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, நெல்லி மற்றும் ஆப்பிள் போன்ற சிட்ரஸ் பழங்கள் உங்கள் மூளையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவுகிறது. இது உங்கள் மூளை வளர்ச்சியை மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கும் உதவுகிறது. சிட்ரஸ் பழங்கள், செரோட்டினின் போன்ற நியூரோட்ரான்ஸ்மிட்டர்களை உற்பத்தி செய்கிறது. இது உங்கள் மனதுக்கு நல்லது. நினைவாற்றல் மற்றும் கவனத்தை அதிகரிக்க உதவுகிறது.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் மூளையின் திறனை மேம்படுத்தவும், வளர்ச்சிக்கும் உதவுகிறது. இது உங்கள் மனநிலையையும் மாற்றுகிறது. இதை நீங்கள் எப்போதாவது மிதமான அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும். சாப்பாடு சாப்பிட்ட பின்னர் சிறிது எடுத்துக்கொள்ளலாம்.

ப்ராக்கோலி

ப்ரோக்கோலியில் வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சோலைன்கள் உள்ளது. இது உங்கள் மூளை ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. மூளையின் வளர்ச்சியை தக்கவைக்கிறது. ப்ரோகோலியை வேகவைத்து, வறுத்து அல்லது கிரேவி செய்து சாப்பிடலாம். உங்களுக்கு எந்த சுவையில் பிடிக்குமோ அந்த சுவையில் சாப்பிட்டு மகிழலாம்.

முட்டைகள்

முட்டைகளில் கோலைன்கள், ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. முட்டைகள் நினைவாற்றல் மற்றும் மனதை அமைதிப்படுத்த மிகவும் ஏற்றது. இதை நீங்கள் வேகவைத்தும், பொரித்தும், வறுத்தும் சாப்பிடலாம். இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காலை உணவின் அங்கமாகும்.