தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Health Tips : ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரு பானத்தை ஒரு வாரம் பருகினாலே போதும்!

Health Tips : ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரு பானத்தை ஒரு வாரம் பருகினாலே போதும்!

Priyadarshini R HT Tamil
Feb 12, 2024 12:12 PM IST

Health Tips : ஹீமோகுளேபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரு பானத்தை ஒரு வாரம் பருகினாலே போதும்!

Health Tips : ஹீமோகுளேபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரு பானத்தை ஒரு வாரம் பருகினாலே போதும்!
Health Tips : ஹீமோகுளேபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரு பானத்தை ஒரு வாரம் பருகினாலே போதும்!

தேவையான பொருட்கள்

பீட்ரூட் – அரை கப் (பொடியாக நறுக்கியது)

கேரட் – அரை கப் (பொடியாக நறுக்கியது)

மாதுளை முத்துக்கள் – அரை கப்

துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

ட்ரெண்டிங் செய்திகள்

பேரிச்சை பழம் – 6 (விதைகளை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்)

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய பீட்ரூட், கேரட், உதிர்த்த மாதுளை முத்துக்கள், துருவிய தேங்காய், விதை நீக்கிய பேரிச்சை பழங்கள் என அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ள வேண்டும். அதை அப்படியே வடிகட்டாமல் டம்ளரில் சேர்த்து பருகவேண்டும்.

உடலில் ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட்டால் இந்த பானத்தை காலை அல்லது மதிய உணவுக்குப்பின் ஒரு மணி நேரம் கழித்து பருகவேண்டும். ஒரு வாரம் பருகினாலே போதும் நல்ல பலனைக்கொடுக்கும்.

உங்கள் உடலில் ஹீமோகுளோபின் குறைந்தால் என்ன நடக்கும்?

உங்கள் உடலின் ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதம்தான் ஹீமோகுளோபின். ரத்த சிவப்பணுக்கள் உங்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை சுமந்து செல்கின்றன.

உங்கள் உடலில் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாவதில் சிக்கல் ஏற்பட்டால், உங்கள் ஹீமோகுளோபின் அளவு பாதிக்கப்படும். இதனால் புற்றுநோய் மற்றும் அனீமியா ஆகிய நோய்கள் ஏற்படுகிறது.

இந்த ரத்தச்சிவப்பணுக்கள் உடலில் கடத்தும் ஆக்ஸிஜன்கள்தான் உங்கள் உடலின் மற்ற செல்களுக்கு ஆற்றலை அளிக்கிறது. ஹீமோகுளோபின் அளவு குறைந்தால், உங்களுக்கு அனீமியா மற்றும் புற்றுநோய் ஆகியவை ஏற்படுகிறது.

நமது உடலில் ஹீமோகுளோபினின் பொதுவான அளவு என்ன?

ஆண்கள் உடலில் பொதுவாக 14 முதல் 17.5 வரை ஹீமோகுளோபின் அளவு இருக்க வேண்டும். பெண்களுக்கு 12.3 முதல் 15.3 வரை இருக்க வேண்டும். 13.5க்கு கீழ் குறைந்தால் ஆண்களுக்கு ஆபத்து. 12க்கு கீழ் குறைந்தால் பெண்களுக்கு ஆபத்து.

எதனால் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது?

உங்கள் உடலால் போதிய அளவு ரத்தச்சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய முடியாவிட்டால் உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. உங்கள் உடல் எலும்பு மஜ்ஜைகளில் இருந்து உங்கள் உடல் ரத்த சிவப்பணுக்களையும், வெள்ளை அணுக்களையும் உற்பத்தி செய்கிறது.

சில நேரங்களில் உங்கள் எலும்பு மஜ்ஜைகள், போதிய ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கு உதவ முடியாமல்போனால் உங்கள் உடலில் ரத்த சிவப்பணுக்கள் குறைகிறது.

உங்கள் உடல் தேவையான அளவு ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. ஆனால், அது அழிந்துவிடுகிறது. மீண்டும் உற்பத்தி செய்வதற்கு இணையாக அது உடலில் இருக்க முடியாமல் போவதால் ரத்த சிவப்பணுக்கள் குறைகிறது.

விபத்து உள்ளிட்ட காரணங்களில் உடலில் அதிக ரத்த இழப்பு ஏற்படுவதால், ரத்தம் இழக்கும்போது, உங்கள் உடலில் இரும்புச்சத்தும் குறைகிறது. பெண்களுக்கு மாதவிடால் காலங்களில் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைகிறது.

உடலுக்குள் ரத்தப்போக்கு ஏற்பட்டாலும், உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. இதனால் ரத்த அல்சர் ஏற்படுகிறது.

உங்கள் உடல் இரும்புச்சத்தை உறிஞ்ச முடியாது. இதனால், உங்கள் உடலில் ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய முடியாது.

வைட்டமின் பி12, பி9 மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உங்கள் உடலுக்கு கிடைக்காவிட்டாலும் உடலில் ரத்தசிவப்பணுக்கள் குறையும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9