Health Tips : இந்த 5 பொடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் போதும்! ஆரோக்கியம் 100 சதவீதம் உறுதி!
நமது வீட்டில் கட்டாயம் இருக்கவேண்டிய 5 பொடிகள் என்னவென்று பாருங்கள்.

மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். மேலும் இன்றைய மாசுபாட்டால் நமக்கு சரும தொற்றுகள் முதல் புற்றுநோய்கள் வரை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. முடி உதிர்வு என நம் அழகையும் பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன. அதற்கும் வீட்டிலிருந்தே நாம் சில தீர்வுகளை பின்பற்ற முடியும். எனவே நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும், அழகையும் பராமரிக்க சில மருத்துவகுறிப்புக்களையும் அழகு குறிப்புக்களையும் தெரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
திரிபலா சூரணம்
குடல் சார்ந்த உபாதைகளை சரிசெய்யவும், உடலின் பொதுவான இயக்கத்துக்கும், வயிறு, உணவுக்குழாய், குடல் பகுதியை சுத்தம் செய்வது என்பது இதன் முக்கியத்துவம் ஆகும். இது நீரிழிவு நோயைத் தடுக்கக்கூடியது.
திரிகடுக சூரணம்
வயதுக்கு ஏற்ப அளவுகளில் சூடான தண்ணீர் அல்லது தேன் கலந்து எடுத்துக்கொள்ளவேண்டும். இதை தினமும் எடுத்துக்கொள்ளும்போது, சளி, இருமல், தும்மல், காய்ச்சல் போன்ற சுவாச மண்டல பிரச்னைகளில் இருந்து விடுபட முடியும்.
அமுக்கரா சூரணம்
பெண்கள் மற்றும் நரம்பு சார்ந்த கோளாறுகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. காபி அல்லது டீ சாப்பிடுவதை வழக்கமாகக்கொண்டவர்கள் அல்லது ஊட்டச்சத்து பானங்களை சாப்பிடுபவர்கள் அமுக்கரா சூரணத்தை சாப்பிடலாம்.
பூனைக்காலி விதை சூரணம்
பூனைக்காலி விதை சூரணத்தை கடையில்தான் வாங்கவேண்டும். வீட்டில் செய்யக்கூடாது. அதை செய்யும் விதம் மிகவும் முக்கியமானது. எனவே சிறிய தவறு நேரிட்டாலும், பின்விளைவுகள் ஏற்படும். இதை தேறாத குழந்தைகள் தேறுவதற்கு இந்த பூனைக்காலி விதைகள் பயன்படும். ஒல்லியான குழந்தைகளின் எடையை அதிகரிக்கும். ஜிம்மில் வொர்க்அவுட் செய்து தசைகளை அதிகரிக்க விரும்புவர்களுக்கு, புரோட்டின் பவுடர்களுக்கு மாற்றாக இந்த பூனைக்காலி விதை சூரணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
நிலாவாரை சூரணம் வைத்துக்கொள்ளவேண்டும்.
நிலவேம்புப்பொடி
நாம் வீட்டில் எப்போதும் வைத்துக்கொள்ளவேண்டும். நிலவேம்பு பொடியை அப்படியே சாப்பிடக்கூடாது. அதை தொடர்ந்து தனியாக எடுத்துக்கொண்டால், சிறுநீரக பாதிப்புக்கள் ஏற்படும். நில வேம்பு மிகவும் சூடானது. எனவே நிலவேம்பு, வெட்டிவேர், கோரைக்கிழங்கு, பற்படாகம், சுக்கு, மிளகு, சந்தன சிராய், பேக்குடல் என இத்தனைப் பொருட்களை சேர்த்துதான் பயன்படுத்தவேண்டும். காய்ச்சல் நேரத்தில் இதை நீங்கள் சாப்பிடும்போது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்