Health Tips : இந்த தண்ணீர் மட்டும் தினமும் ஒரு டம்ளர் குடித்தால் போதும்! எத்தனை பிரச்னைகளுக்கு தீர்வு பாருங்கள்!
Health Tips : இந்த தண்ணீர் மட்டும் தினமும் ஒரு டம்ளர் குடித்தால் போதும்! எத்தனை பிரச்னைகளுக்கு தீர்வு பாருங்கள்!
தினமும் சீரகத்தண்ணீரை குடித்து வரும்போது, நமது உடலில் உள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது. சமீப ஆய்வு ஒன்றும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
ரத்தம் உடலில் சுத்தமாக இருக்க வேண்டும். உடலில் ரத்தம் மட்டும் சுத்தமாக இல்லாவிட்டால் அனைத்துவிதமான வியாதிகளும் நமது உடலை வந்து சேரும்.
நாம் சீரகத்தண்ணீரை வழக்கமாக குடித்து வந்தால் போதும், அது ரத்தத்தை சுத்தம் செய்கிறது. ரத்தத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றுகிறது.
இதில் உள்ள வைட்டமின் சி சத்து, உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது. இதன்மூலம் நோய் வராமல் தடுக்கிறது.
பொதுவாக பலருக்கு ஏற்படும் ஹீமோகுளோபின் பிரச்னைக்கு நாம் பல்வேறு உணவை தேடித் செல்ல வேண்டியதில்லை. அதற்கு சீரகத்தண்ணீரை பருகினாலே போதும்.
அதில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்துக்கள் ரத்தத்தை சுத்தமாக்கி, புதிய ரத்தமும், ஹீமோகுளோபினும் அதிகரிக்க காரணமாகிறது.
ரக்க அழுத்தத்தை சீராக்குகிறது. இதில் அதிகப்படியான நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், மெக்னீசியம், தாமிர சத்துக்கள் உள்ளது.
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி, வாந்தி, மயக்கம் போன்ற பிரச்னைகளுக்கு சீரகத் தண்ணீரை தொடர்ந்து பருகுவது தீர்வு கொடுக்கிறது.
அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ள வயிறு தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாகிறது. குடலில் உள்ள நச்சுக்களை கரைத்து வெளியேற்றுகிறது. மலச்சிக்கல் பிரச்னையை முற்றிலும் சரியாக்குகிறது.
செரிமான கோளாறு, அஜீரணம், வாயுத்தொல்லை போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு குடலில் அதிகளவில் வாயுக்கள் சேரும். சீரகத்தண்ணீரை வழக்கமாக எடுத்துக்கொள்ளும்போது, இரவில் ஏற்படும் வயிறு உப்புச பிரச்னையை குணப்படுத்தும்.
சீர் மற்றும் அகம், அகத்தை சீராக்கும் மருந்து என்பதால் இது உடல் முழுமைக்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
சீரகத்தண்ணீரை பயன்படுத்தி தலை குளித்தால், முடி உதிர்வு மற்றும் கூந்தல் வறட்சியாவதை தடுக்கிறது. தலையில் ஏற்படும் அரிப்பு, பொடுகு போன்ற பிரச்னைகளை சரிசெய்யும்.
இரவில் உறக்கம் வராமல் சிலர் அவதிப்படுவார்கள், அவர்களுக்கு ஆழ்ந்த உறக்கம் சீரகத்தண்ணீரை பருகும்போது ஏற்படுகிறது.
நீங்கள் தினமும் குடிக்கும் தண்ணீரில், சீரகத்தை கலந்து வைத்து விடவேண்டும். பொதுவாக இதை இரவிலே செய்து வைத்துவிட்டால் நல்லது. பின்னர் அடுத்த நாள் முழுவதும் நீங்கள் தண்ணீர் பருகும்போது, அந்த தண்ணீரையே குடித்துக்கொள்ளலாம்.
தொடர்ந்து சீரகத்தண்ணீரை பருகும்போது, அது தாகத்தை தீர்க்கிறது. உடலை குளிர்ச்சியாக்குகிறது. சீரகத்தின் முழுமையான நன்மைகளையும் உடலுக்கு அளிக்கிறது.
தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சீரகத்தை சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்க வைத்து, அதை வடிகட்டி அந்த தண்ணீரையும் பருகலாம். அந்த சீரகத்தை மென்று சாப்பிடலாம்.
இந்த தண்ணீரை அப்படியே பருகலாம். இதில் வேறு எதுவும் கலக்கக்கூடாது. இதை எப்போது வேண்டுமானாலும் பருகலாம். மிதமான சூட்டில் பருகும்போது இது கூடுதல் நன்மையை கொடுக்கிறது.
இதை குடித்துவிட்டு, எந்த உணவு வேண்டுமானாலும், டீ, காபி என எதுவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்