Health Tips : தொடை இடுக்குகளில் அரிப்பா? நடக்க முடியாமல் சிரமமா? இதோ எளிய வீட்டு மருத்துவங்கள்!
Health Tips : தொடை இடுக்குகளில் அரிப்பா? நடக்க முடியாமல் சிரமமா? இதோ எளிய வீட்டு மருத்துவங்கள்!
இறுக்கமான உள்ளாடை, சுகாதாரமின்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தொடையிடுக்குகளில் கட்டி மற்றும் அதனால் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் உங்களால் வெளியிடங்களுக்கு செல்ல முடியாது. இது இந்த இடத்தில் ஈரமிருப்பதாலும் ஏற்படுகிறது. இது சருமத்திலே பரவவும் செய்கிறது.
இதனால் பாக்டீரியா, பூஞ்ஜை கூட வளரலாம். நறுமணம் வீசும் பொருட்களால் இந்த அரிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடும் வேதிப்பொருட்கள், சரும எரிச்சல் ஆகியவற்றால் ஏற்படும். இரு தொடைகள் உராயும்போது தடிப்புகள் ஏற்படலாம். இறுக்கமான உடை அணிந்து நடந்துகொண்டே இருப்பவர்களுக்கு இது ஏற்படுகிறது. தொடை ஈரப்பதமாக இருக்கும்போதும் இந்த எரிச்சல் ஏற்படுகிறது. தொற்றுகளுக்கும் வழிவகுக்கிறது.
மிருதுவான சருமத்திலும், அரிப்புகள் ஏற்படலாம். கால நிலை மாற்றமும் காரணமாகிறது. இதனால், சருமத்தில் எரிச்சல் ஏற்படலாம். மிருதுவான சருமம் உள்ளவர்களுக்கு அடிக்கடி அரிப்பு ஏற்படும். சருமத்தில் உள்ள ரோமங்களை அகற்றுவதற்கு அழுக்கான ரேசர்களை பயன்படுத்தினாலும் சருமத்தில் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இறுக்கமான உடைகள் அணியும்போதும் அது சருமத்தில் அரிப்பு, தடிப்பு ஆகியவற்றை ஏற்படுத்திகிறது. பாலியஸ்டர், நைலான் மற்றும் செயற்கை இழை ஆடைகளும் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தகிறது. எனவே தளர்வான பருத்தி ஆடைகள்தான் உடலுக்கு நல்லது. எனினும் இதுபோன்ற தடிப்பு ஏற்பட்டால், எப்படி அதில் இருந்து விடுபடலாம். எளிய முறை வீட்டு வைத்தியங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லில் பாக்டீரியா மற்றும் அலர்ஜிக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளது. இதனால் தடிப்புகள் ஏற்படுத்தும் அரிப்புகள் மற்றும் எரிச்சலுக்கு ஆறுதல் கொடுக்கிறது. இது சருமத்தின் அசௌகர்யங்களை போக்கி, சருமம் குணமடைய உதவுகிறது.
தேங்காய் எண்ணெய்
இதில் ஆன்டி செப்டிக் மற்றும் ஈரப்பதத்தை ஏற்படுத்தும் உட்பொருட்கள் உள்ளன. தேங்காய் எண்ணெய் அரிப்பு மற்றும் எரிச்சலை போக்கும். எனவே தடிப்புகள் இருக்கும் இடத்தில் கொஞ்சம் தேங்காய் எண்ணெயை எடுத்து தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை தண்ணீருடன் கலந்து ஒரு பேஸ்ட் போல் உருவாக்கி தடிப்புகள் உள்ள இடத்தில் தடவவேண்டும். இதன் ஆன்டி-பாக்டீரியல் உட்பொருட்கள், அழற்சி மற்றும் எரிச்சலை குணமாக்கும். பேக்கிங் சோடா கலந்த தண்ணீரிலும் குளிக்கலாம். அது உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கும் மற்றும் தடிப்பை போக்கும்.
டீ ட்ரி எண்ணெய்
தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் டீ ட்ரி எண்ணெயை அரிப்பு உள்ள இடத்தில் தடவவேண்டும். டீ ட்ரி எண்ணெயில் நுண்ணுயிர்களுக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளது. அது எரிச்சல் மற்றும் அழற்சி, தடிப்புகளை சரிசெய்யக்கூடியது.
ஓட்ஸ் குளியல்
ஓட்ஸில், அழற்சிக்கு எதிரான குணங்கள் உள்ளது. அது எரிச்சலான சருமத்தை சரிசெய்து, எரிச்சலை போக்கும். அதை பயன்படுத்துவதற்கு, ஓட்ஸை சூடான தண்ணீரில் கலந்து, ஊறவைத்து குளிக்க வேண்டும்.
ஐஸ் கட்டிகள் ஒத்தடம் கொடுக்கலாம்.
அதிக நீர் பருகி உடலை நீர்ச்சத்து நிறைந்ததாக வைத்துக்கொள்வது நல்லது. இதன் மூலம் சருமம் வறண்டு எரிச்சல் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
பாதிக்கப்பட்டஇடங்களில் மிருதுவான சோப் வைத்து கழுவவேண்டும். பின்னர் சுத்தமான பருத்தி துண்டால் துவட்ட வேண்டும்.
தளர்வான பருத்தி ஆடைகளை மட்டும் உடுத்த வேண்டும். உங்கள் உடல் சிறிது காற்றோட்டத்துடன் இருந்தால் எரிச்சல் குறையும்.
குளித்தவுடன் பவுடர் அல்லது கார்ன் பவுடரை பயன்படுத்தினால் நல்லது. அது ஈரத்தை உறிஞ்சி, உராய்வை தடுக்கும்.
மணமான சோப்களும், சில துணிகளும் தடிப்புகளை ஏற்படுத்தும்.
எரிச்சல் மற்றும் அரிப்புக்கு கொடுக்கப்படும் மருந்துகளையும் தடவலாம்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத வகையில், உரிய விளக்கங்களுடன் கொடுக்கப்படுகிறது.
இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம். எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்