ஆரோக்கிய குறிப்புகள் : தனிப்பட்ட வகையில் எதையும் எடுத்துக்கொள்ளாமல் வாழ்வில் மகிழ்ந்திருப்பது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஆரோக்கிய குறிப்புகள் : தனிப்பட்ட வகையில் எதையும் எடுத்துக்கொள்ளாமல் வாழ்வில் மகிழ்ந்திருப்பது எப்படி?

ஆரோக்கிய குறிப்புகள் : தனிப்பட்ட வகையில் எதையும் எடுத்துக்கொள்ளாமல் வாழ்வில் மகிழ்ந்திருப்பது எப்படி?

Priyadarshini R HT Tamil
Published May 12, 2025 12:13 PM IST

நீங்கள் உங்களுக்கு மட்டுமானது என்று தனிப்பட்ட முறையில் எதையும் எடுத்துக்கொள்ளாமல், மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வது எப்படி என்று பாருங்கள்.

ஆரோக்கிய குறிப்புகள் : தனிப்பட்ட வகையில் எதையும் எடுத்துக்கொள்ளாமல் வாழ்வில் மகிழ்ந்திருப்பது எப்படி?
ஆரோக்கிய குறிப்புகள் : தனிப்பட்ட வகையில் எதையும் எடுத்துக்கொள்ளாமல் வாழ்வில் மகிழ்ந்திருப்பது எப்படி?

எதையும் தனிப்பட்ட முறையில் உங்களுக்கானது என்று எடுத்துக்கொள்ளாதீர்கள்

மற்றவர்கள், அடுத்தவர்கள் அல்லது மற்ற சூழல்களுக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறார்களோ அது அவர்களின் உள் சிந்தனைகள் மற்றும் உணர்வுகளின் வெளிப்பாடாகும். அவர்கள் உங்களுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக, அவ்வாறு நடக்கிறார்கள். இதை நீங்கள் புரிந்துகொள்ளும்போது, அது மற்றவர்களிடம் இருந்து உங்களை விடுவிக்கிறது. உங்களின் உள் அமைதிக்கு வழிவகுக்கிறது.

சுய இரக்கம் கொள்ளுங்கள்

உங்கள் நெருங்கிய நண்பர்களிடம் நீங்கள் எவ்வாறு அன்புடன் நடந்துகொள்கிறீர்களோ அதே அளவுக்கு அன்புடன் உங்களுடனும் நடந்துகொள்ளுங்கள். நீங்கள் குழப்பிக்கொண்டாலோ அல்லது தாக்கப்பட்டதாக எண்ணினாலோ உங்கள் உள் விமர்சனத்தை நிறுத்திவிடுங்கள். இது உங்களை பிரச்னைகளில் இருந்து மீண்டு வரவும், மகிழ்ச்சியாக இருக்கவும் உதவும்.

பதில் கொடுங்கள், எதிர்வினையாற்றாதீர்கள்

விமர்சனங்களைப் பாருங்கள், ஆனால் உங்களை நோக்கி வரும் அனைத்து விமர்சனங்களுக்கும் செவி கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தேவையான விமர்சனங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இது பிரச்னைகளுக்கு பதில் கொடுக்க உதவும், அவற்றை நீங்கள் தனிப்பட்ட கருத்துக்களாக எடுத்துக்கொண்டு எதிர்வினையாற்றிக்கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை.

உங்களுக்கு கடும் எல்லைகளை வகுத்துக்கொள்ளுங்கள்

உடல் மற்றும் மனம் ரீதியாக எந்த இடம் வரை நீங்கள் உங்களை வதைக்கவேண்டும் என எல்லை வகுத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களை எந்த எல்லை வரை வரவிடவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். இது உங்களின் ஆற்றல் மற்றும் மனதின் அமைதியை பாதுகாக்க உதவும்.

வெளிப்புற மதிப்புகளில் இருந்து விலகியிருங்கள்

நீங்கள் அனைவருக்கும் நல்லவராக நடந்துகொள்ள முடியாது. அப்படி நீங்கள் செய்யும்போது, அது மனரீதியாக உங்களை எரிச்சலடையச் செய்யும். எனவே நீங்களாக இருப்பது குறித்து நம்பிக்கைகொண்டு, உங்களின் வழியில் உங்களின் வாழ்க்கை ரசித்து வாழுங்கள். இது உங்களுக்கு உள்புற மகிழ்ச்சியைத் தரும்.

உங்களுக்கும், உங்களின் மதிப்புகளுக்கும் உண்மையாக இருங்கள்

நீங்கள் உங்களின் மதிப்புகள் குறைத்து தெளிவாக இருக்கும்போது, உங்களை மற்றவர்களால் அதிகம் அசைக்க முடியாது. மற்றவர்களின் கருத்துக்கள் உங்களை தாக்காது. உங்களுக்கு உண்மையாக இருங்கள். அது உங்களை சவாலான நேரங்களில் உங்களை வழிநடத்தும். இது நீங்கள் மீண்டு வர உதவும். வாழ்வில் பெரும் லட்சியங்களை நீங்கள் எட்டுவதற்கு கவனத்துடன் செயல்படவும் உதவும்.

நிராகரிப்புக்களை ஏற்றுக்கொள்ளுங்கள், வாழ்வில் தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்

நிராகரிப்புகள் என்பது வாழ்வின் ஒரு அங்கமாகும். ஆனால் அதை நீங்கள் நிராகரிப்பாக பார்க்காமல், அவற்றை வேறு திசையாகக் கொள்ளவேண்டும். இந்த பார்வை மாற்றம் உங்களை உணர்வு ரீதியாக வலுவானவர்களாக மாற்றும்.

உங்களுக்கு ஆதரவானவர்கள் சூழ வாழுங்கள்

உங்களை முன்னேற்றும் நபர்களை உங்களை சூழ வைத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு உகந்த நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் வழிகாட்டுபவர்கள், உங்கள் வாழ்வில் எதிர்மறை எண்ணங்களை நீக்க உதவுவார்கள். உங்களை வளரவும், வலுவானவர்களாக மாற்றவும் உதவுவார்கள்.

எதிர்வினையாற்றும் முன் அமைதி

உங்களை யாராவது தூண்டிவிட்டால், நீங்கள் அவர்களுக்கு பதில் கொடுக்கும் முன்னர், கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள். இந்த இடைவெளி உங்களுக்கு அமைதியைக் கொடுக்கும். உங்களின் எதிர்வினையோ அல்லது பதிலோ அது கொந்தளிப்பின்றி இருக்க உதவும்.

வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள், சரியானதாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை

தவறுகள், விமர்சனங்கள், தோல்விகள் உங்கள் வளர்ச்சியின் அங்மாகும். எனவே அவற்றை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு, நீங்கள் சோர்வாக உணராமல், தவறில் இருந்து கற்க முயற்சியுங்கள். உங்கள் இலக்குகளை நோக்கி பயணிக்க கற்றுக்கொள்ளுங்கள்.