தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Health Tips Even At 100 Years Of Age Health Will Not Decrease Only These 4 Items Are Enough For That

Health Tips : 100 வயதானலும் ஆரோக்கியம் குறையாமல் இருக்கும்! அதுக்கு இந்த 4 பொருள் மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
Mar 03, 2024 01:18 PM IST

Health Tips : 100 வயதானலும் ஆரோக்கியம் குறையாமல் இருக்கும்! அதுக்கு இந்த 4 பொருள் மட்டும் போதும்!

Health Tips : 100 வயதானலும் ஆரோக்கியம் குறையாமல் இருக்கும்! அதுக்கு இந்த 4 பொருள் மட்டும் போதும்!
Health Tips : 100 வயதானலும் ஆரோக்கியம் குறையாமல் இருக்கும்! அதுக்கு இந்த 4 பொருள் மட்டும் போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை

சீந்தில் கொடி அல்லது சீந்தில் பட்டை பொடி – சிறிதளவு

(அதிகளவில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள நச்சுக்களை கரைத்து வெளியேற்றும். உடலில் உள்ள வீக்கம், வலி என அனைத்தையும் குறைக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும், கல்லீரலை சுத்தம் செய்யும். நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்து. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். இதயத்துக்கு பலத்தை கொடுக்கும். இதை பயன்படுத்தும்போது புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு கிடையாது. புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடக்கூடிய தன்மை உள்ளது)

ஒரு பாத்திரத்தில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் 2 துண்டு பட்டை சேர்க்க வேண்டும். (பட்டை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். நரம்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. நரம்புகளில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்யும். ரத்த சர்க்கரை அளவை குறைக்கும்)

மிளகு – 10

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

(ரத்தத்தை சுத்திகரிக்கும், உடலில் உள்ள கொழுப்பை கரைத்து வெளியேற்றும். கல்லீரலில் உள்ள வீக்கத்தை சரிசெய்யும்)

கொதிக்கும் தண்ணீரில் மிளகு, மஞ்சள் தூள், சீந்தில் பட்டை பொடி சேர்த்து கொதிக்க விடவேண்டும். நன்றாக சிறிது நேரம் கொதித்தவும், வடிகட்டி பருகவேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் தவிர மற்றவர்கள் இதனுடன் தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம், அதாவது வெள்ளை சர்க்கரை தவிர மற்றவற்றை சேர்த்து பயன்படுத்தலாம்.

இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பருகலாம். ஒரு நாளில் ஒருவேளை மட்டுமே பருக வேண்டும். இதை தொடர்ந்து 5 நாட்கள் பருகிவரவேண்டும். ரத்தத்தை சுத்தம் செய்து, நச்சுக்களை வெளியேற்றி, ரத்தம் உடலில் சீராக பாய்வதற்கு வழிவகுக்கும். உடலில் உள்ள ஹீமோகுளோபின் குறைபாட்டை சரிசெய்து, ஹீமோகுளோபின் அளவை சரிசெய்யும்.

மூட்டுவலி, முழங்கால் வலி போன்ற பிரச்னைகள் எதுவும் இருக்காது. வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படாது. 5 நாட்கள் தொடர்ந்து பருகிவிட்டு, வாரம் ஒருமுறை எடுத்துக்கொள்வது நல்லது. எனவே கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத வகையில், உரிய விளக்கங்களுடன் கொடுக்கப்படுகிறது.

இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம். எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்