Health Tips : வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இந்த தண்ணீர் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்! உற்சாகம் அதிகரக்கும்! பலன்கள் பல!
Health Tips : வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இந்த தண்ணீர் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்! பலன்கள் பல கிட்டும்!
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் மட்டும் இதை சேர்த்து கொதிக்க வைத்து, வாரத்தில் 3 முறை மட்டும் குடித்து வந்தால் போதும், அஜீரண கோளாறு, வாயுத்தொல்லை, மலச்சிக்கல், உடல் சோர்வு, மூட்டு வலி, சளி, பித்தம், வாந்தி, மயக்கம், சைனஸ், இருமல், கை-கால் குத்தல், குடைச்சல், கால் மரத்துப்போதல், சரும அழற்சி, அரிப்பு, தைராய்டு, உடல் எடை அதிகரிப்பு என அனைத்தையும் முழுவதுமாக தீர்க்கும்.
தேவையான பொருட்கள்
வர கொத்த மல்லி விதை – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தண்ணீர் – ஒரு டம்ளர்
செய்முறை
இரண்டையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதை ஓரிவு தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை பருகினால் போதும் இதன் மருத்துவ குணங்கள் இரட்டிப்பாகும்.
நன்றாக 5 நிமிடங்கள் கொதித்தவுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை இலையை சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு, மூடி வைத்துவிடவேண்டும்.
பின்னர் சிறிது நேரம் கழித்து இதை வடிகட்டி அப்படியே பருகலாம் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம். தேன், நாட்டுச்சர்க்கரை, வெல்லம் சேர்த்தும் பருகலாம். வெள்ளை சர்க்கரை தவிர எதை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.
உப்பும் சேர்த்துக்கொள்ளலாம். வாயுத்தொல்லை, அஜீரண கோளாறு உள்ளவர்கள் கொதிக்கும்போதே இதனுடன் சோம்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகலாம். சுக்குப்பொடியையும் சேர்த்து கொதிக்க வைத்துக்கொள்ளலாம்.
இதை காலையில் தேநீருக்கு பதில் பருகலாம். இதில் அதிகளவில் கால்சியம், இரும்பு மற்றும் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளது. இந்த 3 சத்துக்களும் எலும்புக்கு நல்லது.
எலும்புக்கு உறுதியை தரும். எலும்பு தொடர்பான பிரச்னைகளை தீர்க்கும். உடலை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்துக்கொள்ளும். சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்ள உதவும்.
தைராய்ட் பிரச்னைகளால் ஏற்படக்கூடிய உடல் எடை அதிகரிப்பை குறைக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும். மலச்சிக்கல் பிரச்னை இருக்காது. வாயுத்தொல்லை இருக்காது.
சிலருக்கு கணினி பயன்பாட்டால் கண் சிவத்தல், கண் எரிச்சல், கண் வீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அவர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகளை சரிசெய்ய உதவும்.
கறிவேப்பிலை சேர்க்காமல் இந்த தண்ணீரை சேர்த்து முகத்தை கழுவினால், கண் உபாதைகளை குணமாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
பித்தம், பித்தத்தால் ஏற்படக்கூடிய நரை போன்றவற்றை சரிசெய்ய உதவும். உடலில் பித்தம் அதிகரித்தால், தரை நரைத்தல், வாந்தி, தலை சுற்றல், இளநரை, உடல் சோர்வு, அசதி போன்ற பிரச்னைகள் ஏற்படும். அவையனைத்தையும் சரிசெய்யும். குறிப்பாக மூட்டுவலிக்கு சிறந்த மருந்து. கை-கால் வலி, கை-கால் குத்தல், பாத எரிச்சல் என அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்யும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து, ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்