Health Tips : 80 வயதிலும் 20 வயதுபோல் ஜொலிக்க வேண்டுமா? இளமையை தக்க வைக்கும் வழிகள்!
Health Tips : 80 வயதிலும் 20 வயதுபோல் ஜொலிக்க வேண்டுமா? இளமையை தக்க வைக்கும் வழிகள்!

அழகுடனும், இளமையுடனும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவரின் விருப்பம். அதற்கு உடலின் வெளிப்புறத்தோற்றத்தையும் பராமரிக்க வேண்டும். நல்ல உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் சில அழகுகு குறிப்புகளையும் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் நீங்கள் முதுமை காலத்திலும் இளமையுடன் இருக்க முடியும்.
உங்கள் மீது அக்கறை கொள்ள வேண்டும்
நீங்கள் பார்ப்பதில் உங்களின் அன்றாட பழக்கவழக்கங்கள் பல வேறுபாடுகளை தரும். சில பழக்கவழக்கங்களை கடைபிடித்தால் அது உங்களை உங்களின் உண்மை வயதைவிட இளமையாக காட்டும்.
உங்கள் கைகளை பராமரியுங்கள்
நாம் நமது கரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம். ஆனால் மற்றவர்கள் அடிக்கடி அதை பார்க்கிறார்கள். எனவே உங்கள் கரங்களை எப்போது பளபளப்பாக வைத்திருங்கள். அது மற்றவர்களை கவரும் வகையில் இருக்கவேண்டும்.
உங்கள் புருவங்களை நன்றாக வடிவமைத்துக்கொள்ளுங்கள்
உங்கள் புருவங்களை நன்றாக டிரிம் செய்து அழகிய வடிவத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நல்ல ஷேப்பான புருங்கள் உங்கள் முகத்தை அழகாக காட்டும்.
உங்களின் அழகு சாதன பொருட்களை ஸ்மார்ட்டாக தேர்ந்தெடுங்கள்
உங்களுக்கான அழகு சாதன பொருட்களை நீங்கள் தேர்ந்தெடுங்கள். உங்கள் நண்பர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று எடுக்காதீர்கள். உங்கள் சருமம், கூந்தல் என அதற்கு பொருந்தும் அழகுசாதன பொருட்களை பயன்படுத்துங்கள்.
பவுண்டேசன் குறைவாக பயன்படுத்துங்கள்
இளமை தோற்றத்துடன் தெரியவேண்டும் என்றால், பவுண்டேசன் குறைவாக பயன்படுத்த வேண்டும். அதிகம் பயன்படுத்தினீர்கள் என்றால், அது உங்கள் சருமத்திற்கு விரைவில் சுருக்கங்களை கொடுக்கும்.
ப்ளஷ்
கிரீம் ப்ளஷ் பயன்படுத்துங்கள். அது உங்களின் சருமத்துக்கும், நிறத்துக்கும் உகந்ததாக இருக்க வேண்டும். அது உங்களுக்கு இளமை தோற்றத்தை கொடுக்கும்.
ரோஸ் வாட்டர் பயன்படுத்துங்கள்
உங்களின் முகத்தை ரோஸ் வாட்டர் பொலிவுடன் வைத்திருக்க உதவும். எனவே, ரோஸ் வாட்டரை உங்கள் முகத்தில் தினமும் பயன்படுத்துங்கள். அதை பஞ்சுவைத்து, துடைத்துவிடுங்கள்.
உங்கள் கண்களில் கருவளையம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
தினமும் உங்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம், உங்கள் கண்களை வயதானதுபோல் காட்டும், எனவே ஈர தேநீர் பைகளை வைத்து உங்கள் கண்களை நன்றாக ரிலாக்ஸ் செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் உங்கள் கண்களில் சுருக்கங்களை தவிர்க்கலாம்.
முக யோகா
இது உங்களுக்கு விளையாட்டு போல் இருக்கும். ஆனால், இது உங்கள் முகத்தில் உள்ள தசைப்பகுதிகளை நல்ல முறையில் பராமரிக்க உதவுகிறது.
உங்கள் உதடுகளை பராமரியுங்கள்
நீங்கள் மேக்-அப் இல்லாமல் செல்ல நினைத்தால் கூட, உங்கள் உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருங்கள். இதனால் நீங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க முடியும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்