தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Health Tips 10 Days Solution To Nervousness Problems This One Drink Is Enough

Health Tips : நரம்பு தளர்ச்சி பிரச்னைகளுக்கு 10 நாளில் தீர்வு! இந்த ஒரு பானம் மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
Mar 03, 2024 12:08 PM IST

Health Tips : நரம்பு தளர்ச்சி பிரச்னைகளுக்கு 10 நாளில் தீர்வு! இந்த ஒரு பானம் மட்டும் போதும்!

Health Tips : நரம்பு தளர்ச்சி பிரச்னைகளுக்கு 10 நாளில் தீர்வு! இந்த ஒரு பானம் மட்டும் போதும்!
Health Tips : நரம்பு தளர்ச்சி பிரச்னைகளுக்கு 10 நாளில் தீர்வு! இந்த ஒரு பானம் மட்டும் போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

நியூரான்கள், நரம்பு திசுக்களை பாதிக்க துவங்கும்போது, நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படுகிறது. நரம்பு தளர்ச்சி நோய் உள்ளது என்பதை எளிதாக கண்டுபிடிக்க வேண்டும். இது நபருக்கு நபர் மாறுபடும். சிலருக்கு கை, கால், தாடைகளில் நடுக்கம் ஏற்படும்.

அன்றாட வாழ்க்கையில் சுறுசுறுப்பாக இருக்க முடியாது. வேகமாக எதையும் செய்ய முடியாது. வேகமாக நடக்க முடியாது. நடக்கும்போது தள்ளாட்டம் ஏற்படும். சிலருக்கு ஒரு விரல் ஆடும். அதிகளவில் நடுக்கம். தூங்கி எழும்போதோ அல்லது சேரில் இருந்து எழும்போதோ அவர்களால் சட்டென்று நேராக நிற்க முடியாது. கால் தரையில் படாமல் இருக்கும்.

தொடர்ந்து நடக்கும்போதுதான் பாதம் தரையில் படுவதையே அவர்களால் உணர முடியும். முகத்தில் உணர்வு இருக்காது. கை-கால் வலி, வீக்கம் இருக்கும். அவர்களால் ஒரு செயலை சரியாக செய்ய முடியாது. இவை நரம்பு தளர்ச்சியின் அறிகுறிகள்

தேவையான பொருட்கள்

மிளகு – ஒரு ஸ்பூன்

திப்பிலி – ஒரு ஸ்பூன்

சுக்குப்பொடி -ஒரு ஸ்பூன்

செய்முறை

மிளகு, திப்பிலி இரண்டையும் நுணுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அப்படியே பருகலாம்.

தேன் அல்லது நாட்டுச்சர்க்களை கலந்தும் பருகலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள், அவற்றை தவிர்ப்பது நல்லது.

காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்பளர் தண்ணீர் பருகிய பின்னர் இதை பருகலாம். இதை வழக்கமாக சாப்பிட வேண்டும். 10 நாளில் மாற்றம் தெரியும்.

நரம்பு தளர்ச்சியின் அறிகுறிகள் படிபடிப்படியாக குறைவதை காணலாம். இதை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

இதில் உள்ள 3 பொருட்களும் நரம்பு மண்டலத்தை நன்றாக வலுப்பெறச்செய்யும். நரம்பு பிரச்னைகளை சரிசெய்து, நரம்பு தளர்ச்சி நோயை முற்றிலும் சரிசெய்யும். அனைவரும் பருகலாம். நரம்பு தளர்ச்சியால் அவதிப்பெறுபவர்களுக்கு சிறந்த பலனைத்தரும்.

இந்த மூன்று பொருட்களும் இயற்கையானதுதான் என்பதால், இது எவ்வித பக்கவிளைவையும் தராது. 

எப்போதும் நமது உடல் உபாதைகளுக்கு முதலில் இதுபோன்ற இயற்கை நிவாரணங்களை தேடிச்செல்லவேண்டும். அது பலனளிக்கவில்லையென்றால் மட்டுமே மருத்துவரை அணுகுவது சிறந்தது. துவக்கத்திலே மாத்திரைகளை எடுத்து அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு ஆளாகக்கூடாது. 

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத வகையில், உரிய விளக்கங்களுடன் கொடுக்கப்படுகிறது.

இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம். எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்