Health Issues : பற்கள் சிதைவடைவதற்கு காரணம்; ஆர்.ஓ. குடிநீர் கொண்டுவரும் ஆபத்து! – அதிரிச்சி ஆய்வு முடிவுகள்!
நீக்கப்படும் உப்புச்சத்துகள் ஹார்மோன், நொதிபுரதங்களின் (Enzymes) ஒரு பகுதியாக செயல்படுவதால் உடம்பின் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, நோய்கள் உண்டாகிறது.

ஆய்வாளர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன் அயர்லாந்தில் 2 பற்களில் உள்ள கிருமிகளை ஆராய்ந்தபோது, வாயில் உள்ள கிருமிகளில், வெண்கல காலத்தில் இருந்து தற்போது வரை உள்ள வேறுபாட்டை கண்டறிந்துள்ளனர்.
ஈறுகளை பாதித்து நோயை உண்டாக்கும் கிருமிகள் பல இருந்தும், பற்சிதைவு ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது Streptococcus mutans எனும் கிருமியே என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்டிரப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் கிருமி (Streptococcus mutans) அமிலத்தை அதிகம் உற்பத்தி செய்யும் தன்மை கொண்டதால், பற்சிதைவு ஏற்படுவதற்கும், மூலக்கூறு பாதிப்படைவதற்கும் (DNA damage), பற்காரைகள் (Dental Plaques) இறுகுவதை தடுக்கும் பணியும் நடப்பதால், பற்களில் குழி (Dental Cavities) ஏற்பட்டு பாதிப்படைவதால், இனிப்புமிக்க உணவுகளை தவிர்த்தல் அல்லது குறைத்தல், பற்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கும்.
RO குடிநீரின் ஆபத்தும், மாற்றும்-
எதிர்திசை சவ்வூடுபரவல் செய்யப்பட்ட RO குடிநீரில் சத்துகள் குறைந்திருப்பது, நாள்பட அத்தகைய குடிநீரை குடித்தால் பெரும் சுகாதாரக் கேடுகள் ஏற்படும் என "Effects of human health due to consumption of RO water" எனும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அத்தகைய RO குடிநீரை தொடர்ந்து குடித்தால்,
எலும்பு பலவீனம், (Osteoporosis)
மூட்டுத் தேய்மானம் (Arthritis)
மன அழுத்தம் (Depression),
திடீர் எண்ண மாற்றங்கள் (Mood swings),
எளிதில் உணர்ச்சிவசப்படுதல் (Irritability),
முடி உதிர்வு
போன்றவை எளிதில் ஏற்படும் என ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
RO செய்யப்பட்ட குடிநீரில் திட உப்புகளின் அளவு (Total Dissolved Solids) 200-250 மில்லிகிராம்/லிட்டர் என இருக்க வேண்டும். அப்போது தான் தேவையான கால்சியம், மெக்னீசியம், பிற உப்புகள் உடம்பிற்குக் கிடைக்கும்.
ஆனால் RO குடிநீரில் உடம்பிற்குத் தேவையான கால்சியம், மெக்னீசியம் போன்ற முக்கிய சத்துகளும் நீக்கப்படுகின்றன.
உலக சுகாதார நிலையம் ஒரு லிட்டர் குடிநீரில், 30 மில்லிகிராம் கால்சியம், 30 மில்லிகிராம் பைகார்பனேட், 20 மில்லிகிராம் மெக்னீசியம் நிச்சயம் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
உடம்பிற்குத் தேவையான உப்புச்சத்துகள் RO மூலம் நீக்கப்படுவதால், அத்தகைய நீரை தொடர்ந்து குடித்தால், சோர்வு (Tiredness), நோய் எதிப்புசக்தி குறைதல் போன்ற பிரசனைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நீக்கப்படும் உப்புச்சத்துகள் ஹார்மோன், நொதிபுரதங்களின் (Enzymes) ஒரு பகுதியாக செயல்படுவதால் உடம்பின் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, நோய்கள் உண்டாகிறது.
செக்கோஸ்லோவாகியா, ஸ்லோவாகியா நாடுகளில், RO குடிநீர் கட்டாயமாக்கப்பட்டு 5 ஆண்டுகளில், பெருவாரியான மக்கள் மத்தியில் தசைப்பிடிப்பு/தளர்வு, உடம்பு வலி, ஞாபக மறதி போன்ற பிரச்னைகள் அதிகமானதை ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன.
மேற்சொன்ன பிரச்னைக்கு முறையான தீர்வு காண்பது கடினம் என்றாலும், பருத்தி துணியால் குடிநீரை வடிகட்டிய பின்,20 நிமிடம் காய்ச்சி, பின்னர் குடிப்பது ஓரளவு பயனைத் தரும்.
2022ம் ஆண்டு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, RO குடிநீர் உற்பத்தி செய்யும்போது, 500 மில்லிகிராமுக்கு கீழ் குடிநீரில், மொத்த திட உப்புகள் (Total Dissolved Solids) இருக்குமாறு வடிப்பான்களை (Filters) உற்பத்தி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற உத்தரவிற்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேற்சொன்ன 2 பிரச்னைகளிலும், மக்கள் தான் விழிப்புடன் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும்.
நன்றி – மருத்துவர் . புகழேந்தி.

டாபிக்ஸ்