Health Drink : காலை உணவுக்கு பதில் இந்த ஒரு பானம் மட்டும் போதும்! உடலில் உள்ள அனைத்து வியாதிகளையும் போக்கும்!
Health Drink : காலை உணவுக்கு பதில் இந்த ஒரு பானம் மட்டும் போதும்! உடலில் உள்ள அனைத்து வியாதிகளையும் போக்கும்!

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.
இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
நட்ஸ் மற்றும் சீட்ஸ்கள்
நட்ஸ் மற்றும் சீட்ஸ் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருபவை என்பதால் அதுகுறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது. அவற்றின் புழக்கமும் அதிகரித்து விட்டது. முந்தைய காலத்தைவிட நட்ஸ்கள் மற்றும் விதைகளின் நுகர்வு அதிகரித்துவிட்டது.
முன்பெல்லாம் முந்திரி பருப்பு என்பது பாயாசத்துக்கு சேர்க்கும் உட்பொருளாக இருந்தது. ஆனால் இப்போது நட்ஸ்கள் தினசரி பயன்பாட்டுக்கே வந்துவிட்டன.
முந்திரி பருப்பு மட்டுமின்றி அவற்றுடன் அனைத்து வகை நட்ஸ்கள் மற்றும் சீட்ஸ்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவை அவற்றின் ஆரோக்கிய நன்மைகளுக்காக தனித்துவமாகத் தெரிகின்றன.
இவற்றை வைத்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உங்கள் உடலில் நோய்கள் சேராமல் அடித்து விரட்டவும் என்ன செய்யவேண்டும் என்று தெரிந்துகொள்ளங்கள் .
தேவையான பொருட்கள்
பாதாம் – 6 (ஊறவைத்து தோல் நீக்கியது)
கடலை – ஒரு கைப்பிடியளவு
முந்திரி – 6
பிஸ்தா – 6
வால்நட் – 1
தர்ப்பூசணி விதைகள் – ஒரு ஸ்பூன்
பரங்கிக்காய் விதைகள் – ஒரு ஸ்பூன்
அத்திப்பழம் – 2
பேரிச்சை பழம் – 2
பால் – ஒரு டம்ளர்
வாழைப்பழம்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் முந்திரி, பாதாம், பிஸ்தா, கடலை, வால்நட், தர்ப்பூசணி விதைகள், பரங்கிக்காள் விதைகள், அத்திப்பழம், பேரிச்சை பழம் என அனைத்தையும் சேர்த்து அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து முதல் நாள் இரவே ஊறவைத்துவிடவேண்டும்.
பின்னர் அடுத்த நாள் காலை அதை அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டும். அதனுடன் வாழைப்பழத்தை உரிந்து நறுக்கியும், பாலும் சேர்த்துக்கொண்டு மிக்ஸியில் நன்றாக அடிக்கவேண்டும். சூப்பர் சுவையான ஸ்மூத்தி தயார்.
இதை காலையில் ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு பதில் பருகிவந்தால், உங்கள் உடலில் எந்த நோய்களையும் சேரவிடாமல் அடித்து விரட்டும். இதில் சேர்க்கப்படும் நட்ஸ்கள் உடலுக்கு தேவையான நன்மைகளைக் கொடுக்கிறது.
விதைகள் உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களை சமப்படுத்துகிறது. இதனால் உங்களுக்கு நோய் என்ற ஒன்றே ஏற்படாமல் காக்கிறது. இது உச்சி முதல் பாதம் வரை உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது.
இந்த ஸ்மூத்தியை பருகுவதால் உங்களுக்க வயிறு நிறைந்த உணவு தரும். அதனால் உங்களுக்கு மதியம் வரை பசி ஏற்படாது. எனவே நீங்கள் அடிக்கடி ஏற்படும் பசிக்கு அவ்வப்போது இடையில் ஸ்னாக்ஸ் சாப்பிட்டு, உங்கள் உடல் எடையை அதிகரிக்க தேவையில்லை.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்