Health Dept. : சுகாதார துறையில் மக்கள் நலனுக்காக என்ன செய்ய வேண்டும்? பட்ஜெட்டுக்குப் பின் ஓர் அலசல்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Health Dept. : சுகாதார துறையில் மக்கள் நலனுக்காக என்ன செய்ய வேண்டும்? பட்ஜெட்டுக்குப் பின் ஓர் அலசல்!

Health Dept. : சுகாதார துறையில் மக்கள் நலனுக்காக என்ன செய்ய வேண்டும்? பட்ஜெட்டுக்குப் பின் ஓர் அலசல்!

Priyadarshini R HT Tamil
Updated Jul 27, 2024 03:50 PM IST

Health Dept. : சுகாதார துறையில் மக்கள் நலனுக்காக என்ன செய்ய வேண்டும்? ஆனால் பட்ஜெட்டில் என்ன செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அலசவேண்டும்.

Health Dept. : சுகாதார துறையில் மக்கள் நலனுக்காக என்ன செய்ய வேண்டும்? பட்ஜெடுக்குப்பின் ஓர் அலசல்!
Health Dept. : சுகாதார துறையில் மக்கள் நலனுக்காக என்ன செய்ய வேண்டும்? பட்ஜெடுக்குப்பின் ஓர் அலசல்!

ஆண்டுகளின் பண வீக்கத்தை கணக்கில்கொண்டால், அது உண்மையில் மிகக்குறைவு மட்டுமன்றி, ஒதுக்கீடு உண்மையில் நிதி கீழாக (Negative) இருப்பதே வேதனையான உண்மை என மருத்துவர். சரித்குமார் ரௌட் (Professor of Health Economics and Financing-Indian Institute of Public Health-Bhubaneshwar) தெரிவித்துள்ளார்.

மொத்த GDPயில் 2.5 சதவீதம் சுகாதாரத் துறைக்கு ஒதுக்க வேண்டும் என இந்திய அரசு ஏற்றுக்கொண்டாலும், அது 1.2-1.3 சதவீதம் என்ற அளவில் மட்டுமே உள்ளது. இதிலிருந்து மத்திய அரசு சுகாதாரத்துறை மீது போதிய அக்கறை கொள்ளவில்லை என்பது தெரிகிறது.

பட்ஜெட் 

உலக சுகாதார நிறுவனத்தின் விதிகளின்படி குறைந்தது 5 சதவீதம் GDP சுகாதாரத்திற்கு ஒதுக்க வேண்டும். 2024-25 பட்ஜெட்டில் தொகை 2 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. அந்த தொகை நிச்சயம் போதுமானதல்ல என்பது துறை சார்ந்த நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

ASHA திட்டம், அங்கன்வாடி பணியாளர்களை PMJAY காப்பீடு திட்டத்தில் இணைப்பது குறித்து தற்போதைய பட்ஜெட்டில் அதிகம் பேசப்படாதது கவலை அளிக்கிறது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி குறித்து அதிகம் பேசப்படவில்லை.

தமிழகத்தில் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, புதிதாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் 10,000 பேருக்கும் குறைவாக இருக்கும்போது தமிழகத்தில் அனைத்து 9-14 வயது பெண்களுக்கு HPV தடுப்பூசி போடாமல் இருப்பதே நல்லது. சுத்தம், சுகாதாரம், நோய் எதிர்ப்புத்திறன் மேம்பாடு மூலம் HPV தடுப்பூசிக்கு பதிலாக கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கட்டுப்படுத்த முயல்வது சிறந்தது.

Budget Estimate - இந்த ஆண்டை, கடந்த ஆண்டு Revised Estimate (உண்மையில் செலவழிக்கப்பட்டத் தொகை) ஒப்பிட்டால் அது 12 சதவீதம் அதிகமாகத் தெரிந்தாலும், பணவீக்கத்தை கணக்கில்கொண்டால், ஒதுக்கப்பட்ட நிதி உண்மையில் குறைந்துள்ளதை காண முடியும்.

BE-2023-24 மற்றும் 2024-25 ஒப்பிட்டால், சுகாதாரத்துறைக்கான நிதி வெறும் 1.98 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான சுகாதாரத் திட்டங்களை வழிநடத்தும் National Health Mission திட்ட நிதி வெறும் 1.16 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

Pradhan Mantri Jan Arogya Yojana திட்டத்திற்கான நிதி வெறும் 1.4 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. நாட்டின் Ayushman Bharat திட்டத்திற்கான நிதிஒதுக்கீடு உயர்வு நிச்சயம் போதுமானதல்ல.

பிரச்னை

National Health Mission திட்டத்திற்கான நிதியை தேவையான அளவிற்கு அதிகப்படுத்தாமல், இந்தியா அல்லது தமிழகத்தில் அதிகமாகும் காசநோயை 2025க்குள் ஒழிக்கும் திட்டம், தொற்றாநோய்களை ஒழிக்கும் திட்டம் (அதனால் தமிழகத்தில் அல்லது இந்தியாவில் ஏற்படும் இறப்பு விகிதம் - 60-70 சதவீதம் என்ற அளவில் அதிகமாக உள்ளது) முற்றிலும் சாத்தியமில்லை என்பதை மத்திய அரசு உணர்ந்தும் நிதியை அதிகப்படுத்தாதது மிகுந்த கவலை அளிக்கும் ஒன்றாக உள்ளது.

சுகாதாரத்துறை நிதியை அதிகப்படுத்தாமல், PMJAY திட்டத்தின் கீழ் 2030க்குள் அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார சேவை அளிப்பது - Universal Health Coverage – சாத்தியமில்லை.

70 வயது மேற்பட்ட அனைவருக்கும் சுகாதாரக் காப்பீடு என்பது பட்ஜெட்டில் அதிகம் பேசப்படவில்லை. மேலும் நிதியை அதிகரிக்காமல் அது சாத்தியமில்லை. புதிதாக மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்த அறிவிப்புகள் இருந்தாலும், அது நிறைவேற்றப்படுவதில்லை. அதனால் தேவையான சுகாதாரப் பணியாளர்களை நியமிப்பது குறித்து அறிவிப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பது வேதனையே.

மேலும் நிரந்தர பணியாளர்கள் இல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் சுகாதாரப் பணியாளர்களை நியமிப்பது எந்த பலனையும் பெரிதாக அளிக்காது.

(அரசாணை பிறபித்தும் தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு இல்லாமல், நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை மக்கள் கருத்தில்கொள்ள வேண்டும்)

புற்றுநோய் சிகிச்சையில் 3 மருந்துகளின் விலை குறைபாடு வரவேற்கத்தக்கது. மக்கள் அதிகம் பாதிக்கப்படும் தொற்று, தொற்றா நோய்கள், வலி குறைப்பான்கள், சத்து மாத்திரைகளின் விலையையும் நிச்சயம் குறைக்க வேண்டும். அப்படி செய்யாமல் இருப்பது அரசு மக்களின் மீது அக்கறை கொள்ளாமல், மருந்து நிறுவனங்களின் (கார்ப்பரேட்) வளர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதை மக்கள் துளியும் ஏற்க முடியாது.

கூட்டாக மருந்து நிறுவனங்கள், அரசு அல்லது தனியார் துறையில் மருந்து அல்லது மாத்திரைகளை வாங்கும்போது அவற்றின் விலை கணிசமாகக் குறைந்து (Pooled Procurement), அவற்றின் பலன்கள் மக்களை சென்றடைவதைக் குறித்து பட்ஜெட்டில் செய்திகள் ஏதும் இல்லை.

வேளாண் துறையில் இயற்கை வேளாண்மைக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து நீர், பூச்சிக்கொல்லிகள், வேதி உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து பசுமைக்குடி வாயுக்களின் பயன்பாட்டை குறைப்பதால், பருவநிலை மாற்றம் காரணமாக நிகழும் சுகாதார சீர்கேடுகளை (Heat stroke, டெங்கு (பருவம் தவறிய மழையால் நீர் தேங்குவதால்), Zika வைரஸ், காடழிப்பு காரணமாக நிகழும் Zoonosis நோய்களை (Nipah virus உட்பட) கட்டுப்படுத்துவது குறைத்தும் பட்ஜெட்டில் ஏதும் பெரிதாக இல்லாமல் இருப்பதும் ஏமாற்றமே.

சுருக்கமாக, அரசின் சட்டரீதியான கடமையான மக்கள் நலன்களை காக்கும் பட்ஜெட்டாக 2024 மத்திய சுகாதார பட்ஜெட் இல்லை என்பது பெருத்த ஏமாற்றமே.

நன்றி – மருத்துவர்- புகழேந்தி.