ஜந்தரை பெட்டியில் மட்டுமல்ல, சமையலறை தோட்டத்திலும் ஆரோக்கியம் கிடைக்கும்! எப்படி தெரியுமா?
சமையலறை தோட்டத்தில் என்ன செடி வளர்க்கலாம்?

உங்கள் வீட்டின் சிறிய சமையலறை தோட்டத்திலே இந்தச் செடிகளை வளர்க்கலாம். இந்த 8 மூலிகைகள் மற்றும் செடிகளை நீங்கள், உங்கள் சிறிய சமையலறை தோட்டத்தில் வளர்க்கலாம். சமையலறையில் வளர்க்க ஏதுவான மூலிகைச் செடிகள் என்ன தெரியுமா? உங்கள் சமையலறை தோட்டத்திலே நீங்கள் எண்ணற்ற செடிகளை வளர்த்துள்ளீர்கள், அது உங்களுக்கு ஆரோக்கியத்தையும் தரும் என்றால், உங்களுக்கு அது எத்தனை மகிழ்ச்சி தரும் உணர்வாகும். நீங்கள் புதினா, எலுமிச்சை புற்கள் உள்ளிட்ட செடிகளை சமையலறை தோட்டத்திலே வளர்க்கலாம். இது உங்களுக்கு முழு ஆரோக்கியத்தை தரும். நீங்கள் சிறிய சமையலறை தோட்டத்திலே வளர்க்க ஏதுவான 8 தாவரங்கள் இங்கு கொடுக்கப்ட்டுள்ளன. இவற்றை வளர்த்து பலன்பெறுங்கள்.
புதினா
புதினாவை நீங்கள் எளிதாக சமையலறை தோட்டத்திலே வளர்த்துவிடலாம். இதற்கு நல்ல மண் நிறைந்த தொட்டி மற்றும் தண்ணீர் தேவை. இது உங்கள் வீட்டில் சிறப்பான மணத்தை வீசும். அதுமட்டுமின்றி நீங்கள் பிரியாணி உள்ளிட்டவை செய்வதற்கு தோட்டத்தில் இருந்தே இலைகளை பறித்துக்கொள்ளலாம். அதிகம் இருந்தால் அருகில் உள்ள வீட்டினருக்கும் கொடுத்து நட்பை வளர்க்கலாம்.
மல்லித்தழை
நமது அன்றாட பயன்பாட்டுக்கு அதிகம் தேவைப்படுவது, மல்லித்தழைகள். இதற்கும் நல்ல மண் மற்றும் தண்ணீர் கொடுத்து எளிதாக தொட்டியிலே உங்கள் சமையலறை தோட்டத்தில் வளர்த்துவிட முடியும். இந்திய சமையலறையில் மல்லித்தழைக்கு முக்கிய இடம் உண்டு, எனவே இதையும் நீங்கள் வீட்டிலே வளர்ப்பது உங்களுக்கு நல்லது.