Health Tip: மாம்பழங்களை தண்ணீரில் ஊறவைப்பதால் உண்டாகும் நன்மைகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Health Tip: மாம்பழங்களை தண்ணீரில் ஊறவைப்பதால் உண்டாகும் நன்மைகள்

Health Tip: மாம்பழங்களை தண்ணீரில் ஊறவைப்பதால் உண்டாகும் நன்மைகள்

I Jayachandran HT Tamil
Apr 24, 2023 07:30 PM IST

health benefits of soaked mango: ஊறவைத்த மாம்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள், மாம்பழத்தை தண்ணீரில் ஊறவைத்தல் நன்மைகள், மாம்பழத்தை தண்ணீரில் ஊறவைத்தல்

மாம்பழங்கள்
மாம்பழங்கள்

கோடை காலத்துடன் சேர்ந்து மாம்பழ சீசனும் வந்து விட்டது. சுவையான, சத்தான இப்பழத்தை பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள். மாம்பழம் சாப்பிடுவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, செரிமான அமைப்பு மற்றும் குடல்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. இது தவிர, மாம்பழம் கண்கள், முடி மற்றும் சருமத்திற்கும் நன்மை தருவதாகும்.

மாம்பழம் சாப்பிட சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்துக்கும் நல்லது. ஆனால் மாம்பழம் சாப்பிடுவதற்கான சரியான முறையை அறிந்து கொள்ள வேண்டும்.

மாம்பழம் சாப்பிடுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன் ஊறவைக்க வேண்டும் என்பது மிக முக்கியமான முறை ஆகும். மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன் சில மணி நேரம் தண்ணீரில் ஊறவைப்பது ஏன் என்பதை பற்றிய தகவலை ஆயுர்வேத நிபுணர் டாக்டர் கீதாஞ்சலி பகிர்ந்துள்ளார்.

மாம்பழங்களை ருசிப்பதற்கு முன், நீங்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். அதாவது, மாம்பழங்களை சாப்பிடுவதற்கு முன் 1-2 மணி நேரம் ஊறவைக்க வேண்டியது அவசியம். அவசர தேவையாக இருந்தால் 25-30 நிமிடம் ஊறவைப்பதும் நல்லது.

மாம்பழங்களை ஊறவைப்பது ஏன் அவசியம் ஆகிறது?

மாம்பழங்களை ஊறவைப்பதால் அவற்றில் உள்ள கூடுதல் பைடிக் அமிலம் நீங்கி விடுகிறது. இதனால் உடல் இதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களை நன்றாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இரும்பு, ஜிங்க், கால்சியம் மற்றும் பிற தாதுக்களை போன்ற சத்துக்களை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கும் ஒரு ஊட்டச்சத்து தான் பைடிக் அமிலம், இதனால் இது உடலில் தாதுப் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. மேலும், பைடிக் அமிலம் உடலில் வெப்பத்தை உண்டாக்குகிறது, ஆனால் மாம்பழத்தை தண்ணீரில் சில மணி நேரம் ஊறவைப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கலாம்.

உடல் வெப்பநிலை கட்டுக்குள் இருக்கும்

மாம்பழத்தில் தெர்மோஜெனிக் பண்புகள் உள்ளன, இது உடல் வெப்பநிலையை அதிகரிக்கிறது. மாம்பழத்தை தண்ணீரில் ஊறவைக்கும் போது அது வெப்ப நிலையை குறைக்க உதவுகிறது, இதன் விளைவாக, முகப்பரு மற்றும் தேமல் போன்ற தோல் பிரச்னைகள், தலைவலி, மலச்சிக்கல் மற்றும் பிற குடல் பிரச்னைகளைத் தடுக்க உதவுகிறது.

மாம்பழத்தின் சூட்டு தன்மையின் விளைவினால், உடலில் வெப்பத்தை உண்டாக்குகிறது. இதை அதிகமாக உட்கொள்வதால் வாதம் , பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்று தோஷங்களில், பித்தத்தில் மட்டும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, பித்த பிரச்னை உள்ளவர்களிடம் சில கோளாறுகள் உருவாகும். பதற்றம், முகத்தில் படை, எரிச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும். அதனால்தான் மாம்பழத்தை உண்ணும் முன் தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அனைத்து ரசாயனங்களும் அகற்றப்படுகின்றன

மாம்பழத்தை தண்ணீரில் ஊறவைப்பதால் அனைத்து பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயனங்கள் அகற்றப்படுகின்றன. இதுதவிர மாம்பழங்களில் படிந்துள்ள அழுக்கு, தூசி, மண் போன்றவையும் முழுமையாக அகற்றப்படுகிறது. இதனால் பல நோய்கள் தடுக்கப்படுகிறது.

மற்ற நன்மைகள்

மாம்பழத்தை தண்ணீரில் போடும் போதே, மாம்பழம் இயற்கையாக பழுத்திருக்கிறதா இல்லையா என்பதை அறியலாம். மாம்பழங்களை ஒரு வாளித் தண்ணீரில் போட்டு வைக்கவும், அதில் எவை மூழ்குகின்றன, எவை மிதக்கின்றன என்று பாருங்கள். தண்ணீரில் மூழ்கும் மாம்பழங்கள் இயற்கையாகவே பழுத்தவை. மேலே மிதப்பது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டவை என்று அர்த்தம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.