Health Benefits of Makhana: ’மக்கானா எனப்படும் தாமரை விதைகளை அனைவரும் சாப்பிடலாமா?’ மக்கானாவின் சிறப்புகள் இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Health Benefits Of Makhana: ’மக்கானா எனப்படும் தாமரை விதைகளை அனைவரும் சாப்பிடலாமா?’ மக்கானாவின் சிறப்புகள் இதோ!

Health Benefits of Makhana: ’மக்கானா எனப்படும் தாமரை விதைகளை அனைவரும் சாப்பிடலாமா?’ மக்கானாவின் சிறப்புகள் இதோ!

Kathiravan V HT Tamil
May 13, 2024 06:30 AM IST

“மக்கானா கீர், மக்கானா கேக் கபாப், மக்கானா ஆலு டிக்கி உள்ளிட்ட ஏராளமான உணவுப்பொருட்கள் வட இந்தியாவில் மக்கானா எனப்படும் தாமரை விதைகளை மூலப்பொருட்களாக கொண்டு செய்யப்படுகின்றன”

’மக்கானா எனப்படும் தாமரை விதைகளை அனைவரும் சாப்பிடலாமா?’ மக்கானாவின் சிறப்புகள் இதோ!
’மக்கானா எனப்படும் தாமரை விதைகளை அனைவரும் சாப்பிடலாமா?’ மக்கானாவின் சிறப்புகள் இதோ!

புரத சத்துக்கள் நிறைந்த மக்கானா

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த மக்கானா, குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவுகள் ஆகும். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் ஒரு நல்ல தேர்வாக அமைகிறது. காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் இருக்கும் போது அவை உங்களை நிறைவாக வைத்திருப்பதோடு, பசியின் வேதனையைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

வட இந்தியாவில் பிரதான உணவான மக்கானா

வட இந்தியாவில் மக்கள் மேற்கொள்ளும் விரதங்களின் போது விரதம் இருப்பவர்கள் உப்பு, கோதுமை, அரிசி, வெங்காயம், பூண்டு மற்றும் அசைவ உணவுகளைத் தவிர்பவர்கள் மக்கானா சாப்பிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். 

மக்கான கீர், மக்கானா கேக் கபாப், மக்கானா ஆலு டிக்கி உள்ளிட்ட ஏராளமான உணவுப்பொருட்கள் வட இந்தியாவில் மக்கானாவை மூலப்பொருட்களாக கொண்டு செய்யப்படுகின்றன. 

மக்கானாவுக்கும் தாமரைக்கும் என்ன தொடர்பு?

மக்கானா எனப்படும் உணவுப்பொருளானது பொதுவாக தாமரை விதைகளில் இருந்து வருவதாக நினைத்தாலும், அது நாம் நினைக்கும் தாமரையில் இருந்து வரவில்லை. Prickly Water Lily எனப்படும் தாமரைக்கு தொடர்புடைய தாவரத்தில் இருந்து இது எடுக்கப்படுகிறது. இதனை FOX NUTS என்றும் அழைக்கின்றனர். 

ஆதிமனிதன் சாப்பிட்ட மக்கானா

மனிதன் விவசாயம் தொடங்குவதற்கு முன்பில் இருந்தே இந்த விதைகளை ஆதி மனிதன் உணவுக்காக சாப்பிட்டதற்கான சான்றுகள் உள்ளன. சீனா மற்றும் வட இந்தியாவில் இந்த வகை தாவரங்கள் நீர்நிலைகளில் அதிகம் காணப்படுகின்றன. 

100 கிராம் மக்கானாவில் 347 கலோரிகள் உள்ளது. அதில் 76 கிராம் கார்போ ஹைட்ரேட், 9.5 கிராம் புரதம், 15 கிராம் புரதம் உள்ளது. இதில் கொழுப்பு சத்து பெரியதாக இல்லை. மக்கானாவில் அரிசியை விட மாவுச்சத்து குறைவாக உள்ளது. 

சிறுதானியங்களுக்கு நிகரான மாவுச்சத்தையும், அதைவிட கூடுதலான புரதச்சத்தையும் மக்கானா கொடுக்கிறது. 

நாம் வழக்கமாக சாப்பிடும் அரிசி பொரியை விட 10 சதவீதம் குறைவான மாவுச்சத்துக்களும், சற்று கூடுதலான புரதமும் இதில் கிடைக்கும் என மருத்துவர் அருண் குமார் கூறுகிறார். 

நொறுக்கு தீனியும் மக்கானாவும்!

முறுக்கு, கேக், மிக்ஸர் உள்ளிட்ட நொறுக்கு தீனிகள் உடன் ஒப்பிடும் போது உடல் பருமனுக்கு நல்ல நொறுக்குத்தீனியாக  மக்கானா உள்ளது.

வேர்கடலை, பாதம் உள்ளிட்ட விதைகள் எண்ணெய் சார்ந்த விதைகளாக உள்ளதால் சர்க்கரை அளவுகளை குறைக்கிறது. ஆனால் மாவுச்சத்து அதிகமாகவும், புரத சத்து போதுமானதாகவும், கொழுப்பு இல்லாமலும் இருக்கும் மக்கானா அரிசி, சிறுதானியங்களுக்கு நிகரான உணவு என மருத்துவர் அருண் குமார் கூறுகிறார். 

மக்கானா உற்பத்தியில் சாதிக்கும் பீகார்!

உலகின் ஒட்டுமொத்த மக்கானா உற்பத்தியில் 90 சதவீத பங்கை இந்தியாவின் பீகார் மாநிலம் கொண்டு உள்ளது. அந்த ஊரில் பிரதானமான உணவில் பயன்படுத்தப்படும் உணவாகவும் மக்கானா உள்ளது. 

இந்த மக்கானாவில் ”Kaempferol” என்ற ஆண்டி இன்பிளமேட்ரி ப்ராப்பர்ட்டி உள்ளது. இதில் நிறைய ஆண்டி ஆக்ஸிலின்கள் காணப்படுகின்றன. 

ஆயுர்வேத மருத்துவத்தில் மக்கானா

ஆயுர்வேதம் மற்றும் பண்டைய சீன மருத்துவத்தில் ஆண்களின் விந்தணு குறைப்பாட்டை சரி செய்யவும், சிறுநீரக பிரச்னைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இதில் எந்தளவுக்கு தீர்வு உள்ளது என்பது ஆய்வு பூர்வமாக நிரூபணம் செய்யப்படவில்லை என மருத்துவர் அருண் குமார் கூறுகிறார். 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.