Sundakkai Benefits: கசப்பான சுண்டைக்காய்..மிரளவைக்கும் இனிப்பான நன்மைகள் என்னென்ன?
சுண்டைக்காயில் ஏராளமான மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளன. அது என்ன என்று இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
காய்கறி வகைகளில் மிகவும் சிறியதாக இருப்பது சுண்டைக்காய். கசப்பான சுண்டைக்காயில் நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக நம் உடலுக்கு தேவையான புரதம், இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அஜீரணம், மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்க்க உதவி செய்யும்.
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னையை சீராக்க பெரும் உதவியாக இருக்கிறது சுண்டைக்காய். இதற்கு காரணம் சுண்டைக்காயை சாப்பிடும் போது ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் என்றும் நீர்க்கட்டி, தைராய்டு போன்ற பிரச்னைகளால் ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளை சீர்செய்யும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், உடலில் உள்ள கிருமிகளை அழிப்பதில் இருந்து கொழுப்பைக் கரைப்பது வரை பெரிய வேலைகளை செய்யக்கூடிய பெரும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. வைட்டமின்கள் ஏ,சி,இ போன்ற சத்துக்களை எக்கச்சக்கமாக கொண்டுள்ளது சுண்டைக்காய். இவை தவிர நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய தேவையான வைட்டமின் சி-யை அதிகமாகக் கொண்டுள்ளது. ஆரஞ்சு, கொய்யா, பப்பாளிக்கு நிகரான வைட்டமின்-சி இதில் அதிகமுள்ளது.
சுண்டைக்காயில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. அனைவரும் வியப்படையும் வண்ணம் சுண்டைக்காயை சாப்பிட்டு வர காய்ச்சல் குணமாகும். இதிலிருக்கும் ஆன்டிவைரல் பண்புகள் உடல் வெப்பநிலையை குறைக்கும் தன்மை கொண்டது. காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக் கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன், காயங்களையும், புண்களையும் விரைந்து ஆற வைக்கும்.
சுண்டைக்காய் வத்தலை சீரகம், மிளகு, உப்பு சேர்த்து பொடி செய்து சூடான சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் படிப்படியாக குணமாகும் என்றும் சொல்லப்படுகிறது. பார்வைத் திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் திறனை அதிகப்படுத்தவும் இது உதவும். உடலின் நச்சுக்களை வெளியேற்றும் சக்தியையும் கொண்டது சுண்டைக்காய்.
உணவில் வாரம் இரு முறையாவது சுண்டைக்காய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் பூச்சிகள் வெளியேற்றப்படும். வயிற்றுப்புண் பிரச்னை தீரும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், மார்புச்சளி, தொண்டைக்கட்டு, ஆஸ்துமா, காசநோய் போன்ற பிரச்னைகளுக்கு சுண்டைக்காய் நல்ல நிவாரணம் தருகிறது. இத்தனை மருத்துவ நன்மைகளை கொண்டுள்ள சுண்டைக்காயை அவ்வப்போது நமது உணவில் சேர்த்துக்கொள்வோம்.. அது தரும் நன்மைகளையும் பெறலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
பொறுப்பு துறப்பு:
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.
டாபிக்ஸ்