தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Health Benefits Of Eating Cashew Nuts

Benefits of Cashews: உண்பதற்கு சுவையான முந்திாி பருப்பில் இத்தனை நன்மைகளா?

Karthikeyan S HT Tamil
Jan 04, 2024 03:43 PM IST

முத்தான முந்திரி பருப்பு சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

முந்திரி பருப்பு
முந்திரி பருப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

முந்தாி, கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்க உதவுகிறது, இது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. ஊறவைத்த பருப்புகளை உட்கொள்வது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

முந்திாி சாப்பிட்டால் நோய் எதிா்ப்பு சக்தி அதிகாிக்கும். இதில், உடலுக்கு தேவையான பைட்டோ கெமிக்கல் என்ற வேதிப்பொருள் அதிகளவில் உள்ளது. ஒலியிக் மற்றும் பால்மிட்டோலெயிக் அமிலங்களும் உள்ளன.

துத்தநாகம், தாமிரம் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை முந்திரியில் உள்ள சில கனிமங்கள் ஆகும். அவை வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க உதவுகின்றன. நோய் எதிர்ப்பு செல்கள் வளர மற்றும் செயல்பட தாதுக்கள் துத்தநாகம் மற்றும் தாமிரம் தேவைப்படுகிறது.

முந்திரி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் முந்திரியில் உள்ள வைட்டமின் 'கே' எலும்பு அடர்த்தியை பராமரிக்க உதவுகிறது மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைக்கிறது.

முந்திரியில் உள்ள மெக்னீஷியம் சத்து எலும்புகள் வலுவடைய உதவுகிறது. இந்த சத்து குறைபாடு ஏற்பட்டால் உயா் ரத்த அழுத்தம், தசை இறுக்கம், ஒற்றை தலைவலி பாதிப்புகள் வர வாய்ப்பு உண்டு. உடல் சோா்வுடன் காணப்படும். முந்திாியை அளவுடன் உண்டு ஆரோக்கியம் பேணுவோம்.

பொறுப்பு துறப்பு:

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்