தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Health Benefits Of Eating Apple Daily

Health: இந்த ஒரு பழத்தை தினமும் சாப்பிட்டால் டாக்டரே தேவையில்யா? அட..இது தெரியாம போச்சே?

Kalyani Pandiyan S HT Tamil
Jan 20, 2024 02:47 PM IST

ஆப்பிளில் பெட்டின் என்ற நார்ச்சத்து இருக்கிறது. இது கரையக்கூடையது. இது நம் குடல்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அதேபோல ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களும் இந்த பழத்தை சாப்பிடலாம்

இதில் இவ்வளவு பயன்களா?
இதில் இவ்வளவு பயன்களா?

ட்ரெண்டிங் செய்திகள்

 

ஆப்பிள் பழத்தை பொருத்தவரை நீங்கள் அதன் விதையை கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. காரணம், அதில் நச்சுத்தன்மை இருக்கும்.அதையும் மீறி அந்த விதையை சாப்பிட்டாலும், அது ஜீரணம் ஆகாது.

அதேபோல ஆப்பிள் பளபளப்பாக தெரிய, அதன் தோல் மீது மெழுகு பூசப்பட்டிருக்கும். ஆகையால் அதை நீக்கிய பின்னரே, ஆப்பிளை நீங்கள் சாப்பிட வேண்டும்.

ஆப்பிளை பொறுத்தவரை ஆப்பிளில், மாலிக் ஆசிட் இருக்கிறது. இது நம் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேற்றல் செயல்முறையில் முக்கிய பங்கு ஆற்றுகிறது.

 இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டும் என்றால், வாயிலிருந்து உடம்பில் உள்ள அனைத்து பகுதிகளில் உள்ள நச்சை நீக்குவதற்கும் இந்த மாலிக் ஆசிட் பயன்படும். 

இந்த மாலிக் ஆசிட் நமது கல்லீரலுக்கு வரும் பிரச்சனைகளை தடுக்க வல்லது. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வாயில் வறட்சி, சாப்பாடு விழுங்குவதில் பிரச்சினை, எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளை இந்த ஆப்பிளில் உள்ள மாலிக் ஆசிட் தடுக்கும். 

 

இந்த மாலிக் ஆசிட் ஆப்பிள் மட்டுமல்ல, திராட்சை, தர்பூசணி ஜெர்ரி பழங்கள், கேரட் உள்ளிட்டவற்றிலும் இருக்கிறது. இந்த மாலிக் ஆசிட் சிறுநீரகத்தில் கற்கள் வராமலும் தடுக்கின்றன. 

 

இந்த மாலிக் ஆசிட் நம்முடைய தோல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. முடியின் உடைய ஆரோக்கியத்திற்கும் மாலிக் ஆசிட் மிகவும் நல்லது. ஆப்பிளில் மாலிக் ஆசிட்  7.7 சதவீதம்  இருக்கிறது. மாலிக் ஆசிட்டுக்கு அடுத்தபடியாக ஆப்பிளில் இருக்கக்கூடிய மிக முக்கியமான அமிலம் சக்சினிக் அமிலம். 

 

இந்த ஆசிட் மூலமாக வயிற்றில் அசிடிட்டி தொடர்பான பிரச்சினையானது குறையும். நாம் முகங்களுக்கு பயன்படுத்தும் கிரீம்களில் இந்த சக்சினிக் ஆசிட்டே  இருக்கிறது. மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் ஒரு விதமான எரிச்சல் உணர்வை இந்த சக்சினுக்கு ஆசிட் குறைக்கும். 

ஆப்பிளில் இருந்து கிடைக்கக்கூடிய மினரல் சத்துக்கள் நம்மை கேன்சர் நோய் தாக்குவதில் இருந்தும் பாதுகாக்கிறது. அதேபோல சர்க்கரை மற்றும் இதய நோய்கள் வராமலும் நம் உடம்பை இந்த ஆப்பிள் பாதுகாக்கிறது..

 200 கிராம் ஆப்பிளில்  104 கலோரி மாவுச்சத்து, 28 கிராம், நார்ச்சத்து, உடம்புக்கு தேவையான வைட்டமின்களில் 10 சதவீதம் கிடைத்தது விடுகிறது. 

அதே போல காப்பர் 6 சதவிகிதம், பொட்டாசியம் 5 சதவிகிதம், வைட்டமின் கே 4 சதவீதம் கிடைத்து விடுகிறது. 

ஆப்பிளில் பெட்டின் என்ற நார்ச்சத்து இருக்கிறது. இது கரையக்கூடையது. இது நம் குடல்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அதேபோல ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களும் இந்த பழத்தை சாப்பிடலாம் 

மேலும் இது மன அழுத்தத்தால் மூளையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள், ஞாபக சக்தி சம்பந்தமான பிரச்சினைகளை குறைக்கும்.

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்