25-year-old: 25 வயதுடையோருக்கு சொல்லப்பட வேண்டிய மருத்துவ ஆலோசனைகள்
அழகு, உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் 25வயதுடையோருக்கு சொல்லும் மருத்துவ ஆலோசனைகள் பற்றிக் காண்போம்.

உண்மையைச் சொன்னால், 25 வயதைத் தொடுவது என்பது மனதிற்குப் புத்துணர்ச்சியைத் தரும் காலகட்டமாகும். குழந்தைப் பருவத்தில் நாம் இருக்கும்போது பொதுவெளியில் வயது வந்தவராக இருக்க முயற்சிக்கிறோம். ஆனால், பெரியவர்கள் ஆனபின், எப்போதும்போல் மழலை மனதுடன் இருக்க ஆசைப்படுகிறோம்.
உங்கள் வாழ்வில் சரியான பாய்ச்சலைத் தொடங்குவதற்குச் சிறந்த வயது 25 என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டியுள்ளது. நாம் நம் வாழ்வில் 20 வயதை எட்டும்போது பாதியை மகிழ்ச்சியாகவும் மீதியை சற்று சிடுமூச்சித்தனமாகவும் கையாண்டிருப்போம்.
25 வயதினை உடையோரை எவ்வாறு பயனுள்ளபடி உருவாக்கவேண்டும் என்பது குறித்து ஊட்டச்சத்து, அழகு மற்றும் உடற்பயிற்சி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்களுடன் நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். அவர்கள் 25 வயது நிரம்பியவர்கள், எவ்வாறு இருக்கவேண்டும் என்பது பற்றிய ஆலோசனையை வழங்கியுள்ளார்கள்.
முதலாவதாக மிக்கி மேத்தா என்னும் வாழ்க்கைப் பயிற்சியாளர் கூறியதாவது, ‘’காலை உணவுக்கு முன்பு மூச்சை இழுத்து, வெயிலில் நனைந்து, காற்றில் குளித்து, உங்களைச் சுற்றியுள்ள ஐம்புலன்களையும் உணர்ந்தால் உங்களது வாழ்வு மேம்படும். அப்போது, பூமியைக் காப்பாற்றுவதற்கும் பாதுகாப்பதற்கும் நாம் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில், இது நம்மையும் நமது எதிர்கால சந்ததியினரையும் நல்வழிப்படுத்தும்’’ என்றார்.
25 வயதுடையோர் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்து கவிதா தேவ்கன், ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் எழுத்தாளர் கூறுகையில், ‘’புதிய ஆடம்பர நவீன வாழ்வியல் முறையினைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, அடிப்படை சார்ந்த வாழ்வியல் முறையினைப் பின்பற்றுங்கள். ஏராளமான தாவர உணவை உட்கொள்ளுங்கள். ஃபாஸ்ட் புட் மற்றும் ஜங்க் ஃபுட்டில் கிடைக்கும் கலோரிகளுக்குப் பதிலாக ஊட்டச்சத்தில் கவனம் செலுத்துங்கள். எல்லா ஊட்டச்சத்து உணவுகளையும் சாப்பிடுங்கள். நல்ல உணவுகளை அதிகமாகவும், கெட்ட உணவுகளைக் குறைவாகவும் சாப்பிடுங்கள். வாரத்தின் துவக்கத்தில் அதிகமாக சாப்பிட்டதைப் பிற்பகுதியில் கட்டுப்படுத்தி உடல்நிலையைச் சமப்படுத்த உதவுங்கள்’’ என்றார்.
25 வயதுடையோர் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்து, உடற்பயிற்சி பயிற்சியாளர் வெஸ்னா ஜேக்கப் கூறுவதாவது, ‘’ஆல்கஹால் எடுக்கும் வழக்கம் இருந்தால், அதை விரைவில் நிறுத்துங்கள். தியானத்தைத் தொடங்க வயதாகும் வரை காத்திருக்க வேண்டாம். இப்போதே தொடங்குங்கள். வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் பொறுமையும் நிலைத்தன்மையும் முக்கியம். நீங்கள் எப்படி உங்களை வைத்துக்கொள்ள விரும்புகிறீர்களோ அப்படி உங்களை வைத்துக்கொள்ள உடற்பயிற்சிசெய்தால், நோய்வாய்ப்படும்போது உடல் எளிதில் குணமடையும். கருணை மற்றும் சுய அன்பு உங்கள் நோயைக் குணப்படுத்த உதவும் கருவிகள்’’ என்றார்.
25 வயதுடையோர் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்து தோல் மருத்துவர் கிரண் லோகியா கூறுகையில், ‘’ வெளியில் செல்லும்போது சன் பிளாக் கண்ணாடிகளைப் பயன்படுத்துங்கள்.
இரவில் முகத்தை நன்கு குளிர்ந்த நீரில் கழுவிவிட்டுப் படுங்கள். 25 வயதுடையோர் வைட்டமின் சி தொடர்புடைய மேற்பூச்சுகளை மட்டும் பூசலாம். அடிக்கடி பார்லர் சென்று ஃபேஷியல் செய்வதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக, ஆறு மாதத்திற்கு ஒரு முறை செல்லலாம். சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதைத் தவிர்க்கவும்’’ என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்