Happy Propose Day : காதலில் விழுந்துவிட்டீர்களா? அதை வெளிப்படுத்துவது எப்படி? இதோ யோசனைகள்!
Happy Propose Day : காதலில் விழுந்துவிட்டீர்களா? அதை வெளிப்படுத்துவது எப்படி? இதோ யோசனைகள்!
ஆண்டுதோறும் பிப்ரவரி 7ம் தேதி காதலர் வார கொண்டாட்டங்கள் துவங்குகின்றன. முதல் நாள் ரோஜா தினத்தில் அது துவங்குகிறது. ரோஸ் டே அதாவது ரோஜா தினம் உலகெங்கும் காதலர்கள் மனதில் ஒரு தனி இடம் பிடித்த நாள். ஏனெனில் ஒரு வார கொண்டாட்டத்தின் துவக்கம். ரோஜாவையும், அன்பையும் பரிமாறிக்கொள்ளும் நாள்.
அதனுடன் சென்டிமென்ட்களும், உணர்வுகளும் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. அடுத்த நாள் அதாவது காதலர் வாரத்தின் 2வது நாள் காதலை மொழியும் தினம். உங்கள் காதலன் அல்லது காதலியிடம் உங்கள் காதலை கூறும் நாள்.
இந்த வாரம் முழுவதும் காதலன் மற்றும் காதலி ஒருவருக்கொருவர் பரிசு கொடுகப்பது, ரொமான்டிக் டேட்டிங் செல்வது, ரோஜாப்பூக்கள் கொடுத்துக்கொள்வது என்று பல வழிகளில் கொண்டாடுகிறார்கள். காதலர் தினம் பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் பிப்ரவரி 7ம் தேதி முதலே ரோஜா தினத்துடன் காதலர் தினம் துவங்குகிறது.
தொடர்ந்து பிப்ரவரி 8ம் தேதி ப்ரபோஸ் டே கொண்டாடப்படுகிறது. அன்றுதான் தாங்கள் விரும்பும் நபரிடம் காதலை தெரிவிக்கிறார்கள். அவர்கள் விரும்புபவர்களிடம் வாழ்நாள் முழுவதும் எங்கள் துணையாக வருகிறீர்களா என்று கேட்கிறார்கள்.
காதலை ஏற்றுக்கொள்பவர்கள் டேட்டிங் செல்கிறார்கள் அல்லது ஆச்சரியங்களை கொடுக்கிறார்கள். ஒருவர் மற்றொருவரின் உணர்வுகளை மதித்து அவர்களிடம் தங்களை காதலை மொழிய வேண்டும்.
இருவருக்கும் காதல் உணர்வு தோன்றினால், ப்ரப்போஸ் டே தான் உங்கள் காதலை மொழிய சிறந்த தினம். உங்கள் காதலன் அல்லது காதலியிடம் இந்த நாளில் காதலை கூறுவது மிகவும் சிறப்பான ஒன்று.
உங்கள் உறவை முன்னோக்கி எடுத்துச்செல்லவேண்டிய நாள். இந்த நாளில் உங்கள் காதலன் அல்லது காதலிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துங்கள். அவர்களை வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என சமூகவலைதளங்களில் வாழ்த்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
உன்னை காதலிப்பது என்னை சிறந்த மனிதனாக்குகிறது. நான் உங்களுடன் சேர்ந்து வயோதிகத்தை அடைய விரும்புகிறேன். இனிய ப்ரபோஸ் தின வாழ்த்துக்கள்!
நான் நேற்று உன்னை காதலித்தேன், இன்று காதலிக்கிறேன், நாளையும் காதலிப்பேன். எப்போதும் காதலிப்பேன். இனிய ப்ரபோஸ் தினம்.
உன்னை பார்த்த நாள் முதல் நீதான் எனது ஆத்மாவுக்கு நெருக்கமானவள். எனது வாழ்வில் வந்ததற்கு நன்றி, அதை அழகாக்கியதற்கும் நன்றி. இனிய காதலை மொழியும் நாள் வாழ்த்துக்கள்.
எனது குறைபாடுகள் பாதுகாப்பற்றதன்மை ஆகிய அனைத்தையும் நீ பார்த்திருக்கிறாய், ஆனாலும் என்னுடன் நெருக்கமாக இருக்கிறாய். ஹாப்பி ப்ரபோஸ் டே.
எனது வாழ்வின் இசை நீ, அனைத்து அசிங்கமான பொருட்களையும் நீ அழகாக்குகிறாய். உனது சிரிப்பு சிம்பொனியைபோல் உள்ளது. அதை போதியளவு நான் எங்கிருந்தும் பெறமுடியாது. ஹாப்பி ப்ரபோஸ் டே மை லவ்!
வாழ்நாள் முழுவதும் தீராக்காதல் மற்றும் சேர்ந்திருப்பதை உனக்கு நான் இன்று உறுதியளிக்கிறேன். இனிய ப்ரபோஸ் தின நல்வாழ்த்துக்கள்.
நான் உன்னை எப்போதும் காதலிப்பேன். கொண்டாடுவேன். நான் உனது வாழ்வை மகிழ்ச்சியால் நிரப்புகிறேன். கடின காலங்களில் உன்னுடன் இருப்பேன். நான் உன்னை காதலிக்கிறேன். ஹாப்பி ப்ரபோஸ் டே!
நான் உன்னை எனது வாழ்க்கையில் வரவேற்கிறேன். இரு கரங்களை விரித்து உன்னை அனைத்துக்கொள்கிறேன். நீ எனது வாழ்வை அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றிவிட்டாய். ஹாப்பி ப்ரபோஸ் டே!
உனது வாழ்வின் மிச்ச காலத்தை நீ என்னுடன் கழிப்பாயா? ஒவ்வொரு நொடியையும் நாம் சிறப்பாக்கலாம் என்று நான் உறுதி கூறுகிறேன். இனிய ப்ரபோஸ் தின நல்வாழ்த்துக்கள்.
இன்று உங்கள் காதலன் அல்லது காதலியிடம் இதைக்கூறி அசத்திவிடுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்