தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  New Year Wishes Parents: ‘டேய் அப்பா… ஹேப்பி நியூயர் டா’.. உங்க பெற்றோருக்கு இப்படி புத்தாண்டு வாழ்த்து சொல்லுங்க!

New Year Wishes Parents: ‘டேய் அப்பா… ஹேப்பி நியூயர் டா’.. உங்க பெற்றோருக்கு இப்படி புத்தாண்டு வாழ்த்து சொல்லுங்க!

Kalyani Pandiyan S HT Tamil
Dec 15, 2023 06:00 PM IST

புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா அப்பா!. வரும் ஆண்டில் உங்கள் இருவருக்கும் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியம் அபரிவிதமாக கிடைக்க வேண்டும்.

அப்பா அம்மாவிற்கு புத்தாண்டு வாழ்த்துகளை எப்படி சொல்லலாம்?
அப்பா அம்மாவிற்கு புத்தாண்டு வாழ்த்துகளை எப்படி சொல்லலாம்?

ட்ரெண்டிங் செய்திகள்

புத்தாண்டு தினத்தில் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கும் நாம், நண்பர்கள், காதலி, பெஸ்டி என பலருக்கும் வாழ்த்து செய்திகளை அனுப்பினாலும், நம்முடைய முதல் வாழ்த்து செய்தி நம் பெற்றோருக்கு செல்வதே சால சிறந்தது.

காரணம், என்ன நடந்தாலும் உயிராய், உறவாய் மேடு பள்ளங்களை கைப்பிடித்து கடக்க உற்ற துணைகளாக இருப்பவர்கள் பெற்றோர்களே! 

அவர்களுக்கு கீழ்கண்டவாறு  வாழ்த்து செய்திகளை கூட நீங்கள் தெரிவிக்கலாம்.

அம்மா, அப்பா உங்களுக்கு இந்த வருடம் அழகானதாக மாற என்னுடைய வாழ்த்துகள். இந்த வருடம் நிச்சயமாக உங்களுக்கு சிறப்பான வருடமாக அமையும்.

புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா அப்பா!. வரும் ஆண்டில் உங்கள் இருவருக்கும் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியம் அபரிவிதமாக கிடைக்க வேண்டும்.

அன்பான பெற்றோருக்கு புத்தாண்டு வாழ்த்துகள். இந்த புத்தாண்டில் உங்களுக்கு நீண்ட ஆயுள் மற்றும் மகிழ்ச்சி கிடைக்க நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

புத்தாண்டு வாழ்த்துகள், அம்மா!. இந்த புத்தாண்டு உங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியையும், ஆசீர்வாதத்தையும் கொடுக்கும் என்று நம்புகிறேன். உங்களது வாழ்க்கையே எனக்கு உத்வேகம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் அப்பா! இந்த புத்தாண்டு உங்களுக்கு அளவிட முடியாத ஆச்சரியங்களையும், மகிழ்ச்சியையும் தர வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன்.

என் அருமையான பெற்றோருக்கு புத்தாண்டு வாழ்த்துகள். என்னுடைய வாழ்க்கையில், எப்போதும் எனக்கு முதல் உத்வேகமாகவும், உறுதுணையாகவும் இருப்பதற்கு நன்றி. இருவருக்கும் என்னுடைய அளவு கடந்த அன்பை கொடுக்க கடமை பட்டு இருக்கிறேன்.

WhatsApp channel

டாபிக்ஸ்