தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Happy Kiss Day 2024 Say Happy Kiss Day To Your Loved Ones Like This

Happy Kiss Day 2024 : காதலில் முத்த தின வாழ்த்துக்களை உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு இப்படி கூறுங்களேன்!

Priyadarshini R HT Tamil
Feb 13, 2024 06:00 AM IST

Happy Kiss Day 2024 : காதலில் முத்த தின வாழ்த்துக்களை உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு இப்படி கூறுங்களேன்!

Happy Kiss Day 2024 : காதலில் முத்த தின வாழ்த்துக்களை உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு இப்படி கூறுங்களேன்!
Happy Kiss Day 2024 : காதலில் முத்த தின வாழ்த்துக்களை உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு இப்படி கூறுங்களேன்!

ட்ரெண்டிங் செய்திகள்

தொடர்ந்து சாக்லேட் தினம் பிப்ரவரி 9ம் தேதி கொண்டாடப்பட்டது. அடுத்து பிப்ரவர் 10ம் தேதி டெடி டே கொண்டாடப்பட்டது. பின்னர் வந்தது ப்ராமிஸ் டே எனப்படும் வாக்குறுதி நாள், பிப்ரவரி 11ம் தேதி கொண்டாடப்பட்டது. ஹக் டே பிப்ரவரி 12ம் தேதி கொண்டாடப்பட்டது.

காதலர் வாரத்தில் ஒவ்வொரு நாளும், ரோஜா, டெடி என பரிசுகளும், வாக்குறுதிகள் மற்றும் காதலை கூறியும் காதலர்கள் மகிழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் காதலர்களுக்கு சிறப்பு குறிப்புகளுடன் அன்பு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

காதலர் வாரத்தில் இன்று கிஸ் டே அதாவது முத்த தினம் கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 13ம் தேதி கொண்டாடப்படும் இந்த தினத்தில் காதலர்கள் எப்படி தங்களுக்குள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

அவர்களுக்கு நேரிலும், சமூக வலைதளங்களிலும் இந்த வாழ்த்துக்களை தெரிவித்து மகிழுங்கள்.

ஒரு நாள் கூட உன்னை முத்தமிடாமல் என்னால் இருக்க முடியாது. நீதான் எனது சூரிய ஒளி, வாழ்வின் மகிழ்ச்சி. ஹாப்பி கிஸ் டே!

நமது முதல் முத்தத்தை எண்ணும்போதெல்லாம், எனக்கு உடல் சிலிர்க்கிறது. அது எப்போதும் எதைவிடவும் மிகச்சிறந்தது. இனிய முத்த தின வாழ்த்துக்கள்.

எப்போது என் காதலை உன்னிடம் கூறும்போதும், நான் வார்த்தையின்றி தவிக்கும்போதும் உன்னை முத்தமிடுகின்றேன், நீ அதை உனது மனதில் இருந்து உணர முடிகிறது. இனிய முத்த தின வாழ்த்துக்கள்.

நாம் முதன்முதலில் முத்தமிட்டுக்கொண்ட நாள்தான் என் வாழ்வின் மகிழ்ச்சியான நாள். நான் எப்போதும் உன்னை காதலிப்பேன், கொண்டாடுவேன் என்று இந்த முத்த தினத்தில் உறுதியளிக்கிறேன். இனிய முத்த தின வாழ்த்துக்கள் அன்பே!

உன்னிடம் இருந்து கிடைக்கும் முத்தம் எனது நாளை வெளிச்சமாக்குகிறது. நான் எப்போதும் உன்னை காதலிப்பேன், கொண்டாடுவேன் என்று உறுதியளிக்கிறேன். நான் உன்னை காதலிக்கிறேன். ஹாப்பி கிஸ் டே, மை லவ்!

எனது கண்கள் எப்போதும் உன்னை பார்க்க ஆவலாக உள்ளது. எனது காதுகள் எப்போதும் உன் குரலை கேட்பதில் ஆர்வம் காட்டுகிறது. எனது உதடுகள் உன்னை முத்தமிடவே ஆசைப்படுகிறது. நான் உன்னை காதலிக்கிறேன். ஹாப்பி கிஸ் டே!

நீ கடின காலங்களை கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும், எனது முத்தத்தால் உனது கவலைகளை அணைத்தையும் மறக்கடிக்கச்செய்வேன். ஹாப்பு கிஸ் டே, மை லவ்!

உன்னை முத்தமிடாத ஒரு நாள் நிறைவுறாத நாளாகிறது. உனது முத்தங்கள் காதலின் வாக்குறுதிகள். அவை எனது இதயத்தை அன்பு, நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியால் நிறைக்கின்றன. ஹாப்பி கிஸ் டே!

நான் உன்னை முத்தமிட உறுதியளிக்கிறேன். இன்று, நாளை, என்றும் உன்னை காதலிப்பேன், கொண்டாடுவேன். எனது இறுதிவரை உன்னுடன் இருப்பேன். ஹாப்பி கிஸ் டே, என் அன்பே!

நமது முத்தங்கள், நிலாவை சூரியன் முத்தமிடுவது போன்ற உணர்வைக்கொடுக்கும். இது நம்பமுடியாதது, மாயம் செய்வது மற்றும் தூய்மையானதும். நான் உன்னை காதலிக்கிறேன். ஹாப்பி கிஸ் டே!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்