Happy Hug Day 2024 : ஹக் தினத்தில் இதுபோல் வாழ்த்துக்களை தெரிவித்து உங்கள் காதலின் ஆழத்தை உணர்த்துங்கள்!-happy hug day 2024 express your deep love on hug day with this greeting - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Happy Hug Day 2024 : ஹக் தினத்தில் இதுபோல் வாழ்த்துக்களை தெரிவித்து உங்கள் காதலின் ஆழத்தை உணர்த்துங்கள்!

Happy Hug Day 2024 : ஹக் தினத்தில் இதுபோல் வாழ்த்துக்களை தெரிவித்து உங்கள் காதலின் ஆழத்தை உணர்த்துங்கள்!

Priyadarshini R HT Tamil
Feb 12, 2024 06:00 AM IST

Happy Hug Day 2024 : ஹக் தினத்தில் இதுபோல் வாழ்த்துக்களை தெரிவித்து உங்கள் காதலின் ஆழத்தை உணர்த்துங்கள்!

Happy Hug Day 2024 : ஹக் தினத்தில் இதுபோல் வாழ்த்துக்களை தெரிவித்து உங்கள் காதலின் ஆழத்தை உணர்த்துங்கள்!
Happy Hug Day 2024 : ஹக் தினத்தில் இதுபோல் வாழ்த்துக்களை தெரிவித்து உங்கள் காதலின் ஆழத்தை உணர்த்துங்கள்!

காதலர் வாரத்தில் ஒவ்வொரு நாளும், ரோஜா, டெடி என பரிசுகளும், வாக்குறுதிகள் மற்றும் காதலை கூறியும் காதலர்கள் மகிழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் காதலர்களுக்கு சிறப்பு குறிப்புகளுடன் அன்பு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. காதலர் வாரத்தில் இன்று ஹக் டே அதாவது அரவனைத்து ஆரத்தழுவும் தினம் கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 12ம் தேதி கொண்டாடப்படும் இந்த தினத்தில் காதலர்கள் எப்படி தங்களுக்குள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

நான் இப்பொழுதே உன்னை ஆரத்தழுவிக்கொண்டு, எனது அன்பை உன்னிடம் காட்டுவேன். நீ இப்போதும், எப்போதும் எனக்கு சிறப்பானவள். ஹாப்பி ஹக் டே!

நாம் இருவரும் ஒன்றாக இணைந்து இல்லாமல் இருக்கலாம். ஆனால் உனது இதமான அணைப்பு இப்போதும் என்னுடன் இருக்கிறது. என்னை பிடித்துக்கொண்டு ஆதரவாக இருக்கிறது. ஹாப்பி ஹக் டே!

நான் எனது அன்பை உனக்கு அனுப்புகிறேன். உன்னை நான் எனது இறுக்கத்திலே வைத்திருக்க நினைக்கிறேன். உனது கவலைகளில் இருந்து உன்னைவிடுவித்து உனக்கு சௌகர்யமாக வைத்துக்கொள்ள என்னுகிறேன். ஹாப்பி ஹக் டே, அன்பே!

ஒரு நீண்ட, இறுக்கமான மற்றும் இதமான அணைப்பு வாழ்வின் அணைத்து வலிகளுக்கும் சிறப்பான மருந்து. எனவேதான் நான், உன்னை இன்றும், என்றும் இறுக்கமாக அணைத்துக்கொள்கிறேன். ஹாப்பி ஹக் டே!

ஒரு அணைப்பு உனது மனதை இதமாக்குகிறது. உன்னை பாதுகாப்பாக பார்த்துக்கொள்கிறது. நான் எப்போதும் உன்னை என் கரங்களுக்கு வைத்திருக்க ஆசைப்படுகிறேன். ஹாப்பி ஹக் டே!

ஒரு அணைப்புக்கு அனைத்து சண்டைகளையும் முடிக்கும் சக்தி உள்ளது. உங்களின் கவலைகளை நீக்குகிறது. உங்களின் பதற்றத்தை குறைக்கிறது. அனைத்தையும் சரியாக்குகிறது. ஹாப்பி ஹக் டே!

எனக்கு எப்போதும் சாய்ந்துகொள்ள ஒரு தோள் இருக்கிறது. ஒரு அணைப்பு எப்போதும் என்னை அன்பில் நிறைக்கிறது. ஹாப்பி ஹக் டே அன்பே!

ஒரு தழுவல் என்னை தேற்றுகிறது. அது எனது காதல் போதை, அன்பே, நான் எப்போதும் உனது கரங்களில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஹாப்பி ஹக் டே!

ஒரு சிறப்பான நபரிடம் இருந்து கிடைக்கும் அன்பு எனக்கு அன்பானவர் என்னுடன் இருக்கிறார் என்று பொருள். அந்த சிறப்பான ஒருவர் நீ. நான் உனக்கு மகிழ்ச்சியான ஹக் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

உனது கரங்களே எனது பாதுகாப்பான இடம். உனது புன்னகையே எனது சூரிய ஒளி, எனது வாழ்வில் நீ இருப்பது, எனக்கு மகிழ்ச்சி மருந்து. ஹாப்பி ஹக் டே!

உங்களுக்காக சில ப்ரபோஸ் தின வாழ்த்துக்கள் இங்கே!

உன்னை காதலிப்பது என்னை சிறந்த மனிதனாக்குகிறது. நான் உன்னுடன் வாழ்வின் இறுதி நாட்கள் வரை கழிக்க விரும்புகிறேன்.

நான் நேற்று உன்னை காதலித்தேன், இன்று காதலிக்கிறேன், நாளையும் காதலிப்பேன். எப்போதும் காதலிப்பேன்.

உன்னை பார்த்த நாள் முதல் நீதான் எனது ஆத்மாவுக்கு நெருக்கமானவள். எனது வாழ்வில் வந்ததற்கும், அதை அழகாக்கியதற்கும் நன்றி.

எனது குறைகள் அனைத்தையும் அறிந்தவள் தீ, ஆனாலும் என்னை நேசிக்கிறாய். ஹாப்பி ப்ரபோஸ் டே!

என் வாழ்வின் இசை நீ, என்னை சுற்றியுள்ள அனைத்து பொருட்களையும் அழகாக்குகிறாய். சிம்பொனியை போன்ற உன் சிரிப்பை நான் எங்கிருந்தும் பெற முடியாது.

வாழ்நாள் முழுவதும் தீராக்காதலுடன் உன்னுடன் சேர்ந்திருப்பேன் என்று நான் இன்று உறுதியளிக்கிறேன்.

நான் உன்னை எப்போதும் காதலிப்பேன். கொண்டாடுவேன். நான் உனது வாழ்வை மகிழ்ச்சியால் நிரப்புவேன். கடின காலங்களில் உன்னுடன் இருப்பேன். நான் உன்னை காதலிக்கிறேன்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.