Happy Hormone : காதலை அதிகரிக்கச் செய்யும் ஆக்ஸிடாசின்! இந்த ஹார்மோனை இயற்கையாக சுரக்க செய்யும் 10 வழிகள்!
Happy Hormone : காதலை அதிகரிக்கச் செய்யும் ஆக்ஸிடாசின், இந்த ஹார்மோனை இயற்கையாக சுரக்க செய்யும் 10 வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.
ஆக்ஸிடாசின், இந்த ஹார்மோன்தான் உங்களுக்கு வலுவான சமூக தொடர்புகளை ஏற்படுத்தித்தரும். ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தெடுக்கும். இந்த ஹார்மோனை அதிகரிக்கச் செய்யும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள். பிட்யூட்டிரி சுரப்பி சுரக்கச் செய்யும் இந்த மகிழ்ச் ஹார்மோனை இயற்கையாக சுரக்கச் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். உடலில் இந்த ஹார்மோன் குறைந்தால் அது மனஅமைதியை குலைக்கும். எனவே இதை எப்படி அதிகரிக்கச் செய்யலாம் பாருங்கள்.
தொடுதல்
அணைத்துக்கொள்வது, கட்டிப்பிடிப்பது மற்றும் கைகளை பிடித்துக்கொள்வது என அனைத்தும், தொடுதலில் வரும். இது உங்கள் உடலில் ஆக்ஸிடாசினை அதிகரிக்கச் செய்யும். நாம் அணைக்கும்போது, கைகளை பற்றும்போதும் நமக்கு பாதுகாப்பும், இதமும் கிடைக்கிறது. இந்த உடல் ரீதியான தொடர்பு, உங்கள் மூளைக்கு நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் மற்றும் அன்பு கிடைக்கிறது என்ற சமிக்ஞைகளை உங்கள் மூளைக்கு அனுப்புகிறது.
இதனால் உங்கள் ஆக்ஸிடாசின் அதிகரித்து உங்களின் மனஅழுத்தம் மற்றும் பதற்றம் குறைகிறது. இது உங்களை நேசிப்பவர்களுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்துகிறது. இந்த சிறிய செயல்கள், நமது ஒட்டுமொத்த மனநிலையை மாற்றும் சக்தி வாய்ந்தது.
பிடித்தவர்களுடன் நேரம் செலவிடுவது
உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பம் என மனதுக்கு பிடித்தவர்களுடன் நேரம் செலவிடுவது, உங்கள் உடலில் ஆக்ஸிடாசின் அளவை அதிகரிக்கிறது. நீங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளும்போது, அது உணர்வு ரீதியான நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.
எனவே நீங்கள் ஒன்றாக சேர்ந்து சமைப்பது, விளையாடுவது, இசை கேட்பது என சேர்ந்து நேரம் செலவிடும்பது பிணைப்பு அதிகரிகிக்கிறது. நல்ல நினைவுகளை உங்களுக்கு கொடுக்கிறது. இது உங்களுக்கு உணர்வு ரீதியாக உதவுகிறது.
அன்பு செயல்பாடுகள்
அன்பு காட்டுவது, பெறுபவருக்கு மட்டுமல்ல கொடுப்பவருக்கும் சுகம்தான். மற்றவர்களுக்கு உதவும்போது உங்கள் முளை ஆக்ஸிடாசினை வெளியிடுகிறது. இது உங்களுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் கொடுக்கிறது. நேர்மறையான சமூக தொடர்புகளை உருவாக்கி உங்களை ஒருங்கிணைந்து செயல்பட வைக்கிறது. இந்த உணர்வு ரீதியான செயல் நீண்டநாட்கள் மகிழ்ந்திருக்க உதவுகிறது.
பெட் தெரபி
உங்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுடன் இருப்பது, உங்களின் ஆக்ஸிடாசின் அளவை அதிகரிக்கிறது. நாய்கள் மற்றும் பூனைகள் கொடுக்கும் நிபந்தனையற்ற அன்பு, தனிமை உணர்வைப் போக்கி உங்களின் மனஅழுத்தத்தை குறைக்கிறது. நாய் மற்றும் பூனைகளுடன் விளையாடுவது, மீன்களை ரசிப்பது உங்கள் மனதை அமைதிப்படுத்தி, ஆக்ஸிடாசின் சுரப்பை அதிகரிக்கிறது. எளிய மகிழ்ச்சிகளால் மனஅழுத்தம் குறைந்து மனஅமைதி பெருகுகிறது.
மனநிறைவு மற்றும் தியானம்
இது உங்கள் குழந்தைகளை அவர்களின் உள்உணர்வுடன் இணைந்திருக்கச் செய்கிறது. உங்களின் மூச்சை உற்று கவனியுங்கள். கவலைகளை விட்டு ஒழியுங்கள். அமைதியான மனநிலையை உருவாக்குங்கள். அப்போது ஆக்ஸிடாசின் அதிகம் சுரக்கும். சுவாசப்பயிற்சி, யோகா ஆகியவை மனஅழுத்த ஹார்மோன்களை விரட்டியடிக்கும். மனஅமைதி உங்கள் திறனை அதிகரிக்கச் செய்யும்.
சிரிப்பு
உங்கள் உடலில் ஆக்ஸிடாசின் அளவை அதிகரிக்கச் செய்வதில் சிரிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் உங்கள் குடும்பம் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து நன்றாக சிரிக்கும்போது, உங்களின் பிணைப்பு வலுவடைகிறது.
மகிழ்ச்சியான சூழல் உருவாகிறது. நல்ல படம் பார்ப்பது, ஜோக்குகளை பகிர்ந்துகொள்வது, நல்ல நினைவுகளுடன் இருப்பது என உங்கள் மனநிலையை மாற்றும். சிரிக்கும்போது உருவாகும் ஆக்ஸிடாசின் உங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் வைத்திருக்கும்.
இசை
நமது உணர்வுகளை தொடும் தனித்திறன் இசைக்கு மட்டுமே உண்டு. இது உங்கள் உடலில் ஆக்ஸிடாசின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. எனவே உங்களுக்கு பிடித்த பாடலை கேட்கும்போது உங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது. பாடும்போது, குறிப்பாக குழுவாக சேர்ந்து பாடும்போது, மகிழ்ச்சி பொங்குகிறது. ஒட்டுமொத்த மகிழ்ச்சியை உருவாக்கி, உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது.
உடற்பயிற்சி
குழுவாக சேர்ந்து யோகா, தியானம், நடனம், விளையாட்டு என ஈடுபடுவது, உங்களை ஃபிட்டாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது. உங்கள் உடலில் ஆக்ஸிடாசின் அளவையும் அதிகரிக்கிறது.
இது சமூக பிணைப்பை உருவாக்குகிறது. உடற்பயிற்சியின்போது எண்டோர்ஃபின்கள் உருவாகிறது. அது ஆக்ஸிடாசின் அனவை அதிகரித்து, மனஅமைதியை ஏற்படுத்தி, மனஅழுத்தத்தை குறைக்கிறது.
உணவை பகிர்ந்து உண்பது
உணவை சேர்ந்து சமைத்து உண்ணும்போது, உங்கள் உடலில் ஆக்ஸிடாசின் அளவு அதிகரிக்கிறது. இதனால் நீங்கள் தரமான நேரத்தை செலவிடுகிறீர்கள்.
நன்றி
நன்றியுரைக்கும்போதும், பாராட்டும்போதும், உணர்வு ரீதியான நலன்களை அது பேணுகிறது. எனவே நீங்கள் யாருக்காவது நன்றியுரைக்கும்போதும், பாராட்டும்போதும், அது உங்கள் பிணைப்பை அதிகரிக்கிறது. இது இருவருக்கும் நல்லது. எனவே உங்கள் ஆக்ஸ்டாசின் அளவை அதிகரிக்க நன்றியும், பாராட்டும் அவசியம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்