Hair Growth Tips : கடுமையான முடி உதிர்வுக்கு தீர்வு! அடர்த்தியான நீள கூந்தல் வேண்டுமா? 2 வாரம் மட்டும் இதை செய்ங்க!
Hair Growth Tips : காலையில் தலையில் வைத்து 2 மணி நேரம் ஊறவிட்டு தலை அலசலாம். இல்லாவிட்டால், இரவில் தலையில் தடவிவிட்டு, காலையில் தலை அலசிக்கொண்டால், பலன் இன்னும் நன்றாக இருக்கும். மேலும் இரும்புச்சத்துக்கள் நிறைந்த உணவை அன்றாடம் எடுத்துக்கொள்வதும் உடலுக்கு நல்லது.
வாரத்தில் 3 முறை மட்டும் இந்த எண்ணெயை பயன்படுத்தினால் போதும் எந்த மாதிரியான கடும் முடி உதிர்வு பிரச்னையையும் கூட சரிசெய்யும். தலையில் உள்ள பொடுகு பிரச்னையையும் குணப்படுத்தும்.
முடி உதிர்வு அதிகம், முடி கருகருவென வளரவில்லை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வாகிறது. இந்த எண்ணெயை பயன்படுத்தும்போது அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். வறண்ட கூந்தல், ஸ்பிளிட் எண்ட் கூந்தல் உள்ளவர்களும் இந்த எண்ணெயை பயன்படுத்தினால், அவர்களுக்கு சிறப்பாக தீர்வு கிடைக்கும். ஆண்கள், பெண்கள் அனைவரும் பயன்படுத்தலாம்.
முருங்கை இலை – கைப்பிடியளவு
முருங்கை இலை இரும்புச்சத்து நிறைந்தது. கருகுரு நீண்ட கூந்தல் வளர்வதற்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். போதிய இரும்புச்சத்து உடலில் இல்லாவிட்டால் கூந்தல் வளராது. இன்றைய காலகட்டத்தில் நாம் ஆரோக்கிய வாழ்கை வாழவில்லை. அதனால்தான் நாம் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம்.
அதில் ஒன்றுதான் முடி உதிர்வு, இளநரை போன்ற பிரச்னைகள். முருங்கைக்கீரையை வாரத்தில் ஒருமுறை கட்டாயம் சாப்பிடவேண்டும் அல்லது முருங்கைக்கீரை பொடியை செய்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு ஸ்பூன் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது முடி தொடர்பான பிரச்னைகளுக்கு கட்டாயம் ஒரு தீர்வு கொடுக்கும்.
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
கறிவேப்பிலையும் இரும்புச்சத்துக்கள் நிறைந்தது. கூந்தலுக்கு நல்ல கருமை நிறத்தைக்கொடுக்கும். இளநரையை தடுக்கும். கூந்தல் நீளமாக வளர உதவும். வைட்டமின் சி பொடுகு, இறந்த செல்களை நீக்கிவிட்டு, முடியின் வேர்க்கால்களுக்கு நல்ல ஈரப்பதத்தைக் கொடுத்துவிட்டு, முடி நல்ல அடர்த்தியாக வளர உதவும். வறண்ட தலைமுடியை மிருதுவாக்கும்.
மிளகு – ஒரு ஸ்பூன்
மிளகு, பேன், பொடுகு நீக்கும். தலைமுடியின் வேர்க்கால்களுக்கு நல்ல ரத்த ஓட்டத்தைக் கொடுக்கும். தலைமுடி வேகமாக வளர உதவும். வாரத்தில் மூன்று முறை 3 மாதங்கள் இதை தொடர்ந்து பயன்படுத்தினால் போதும். இது தலைமுடியை நன்றாக வளர வைக்கும். மேலும் 2 வாரத்தில் தீர்வு தெரியும். எனவே கட்டாயம் இந்த எண்ணெயை செய்து பலன்பெறுங்கள்.
தேங்காய் எண்ணெய் – 200 மி.லி.
இந்த 3 பொருட்களையும் தண்ணீர் சேர்க்காமல், கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அரைத்த இந்த கலவையை அதில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். அது நன்றாக கொதித்து, அதன் சாறு எண்ணெயில் இறங்கி பசுமையாக இருக்கும். அந்த எண்ணெயை இறக்கி, ஆறவைத்து வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
ஈரமில்லாத ஒரு பாட்டிலில் ஊற்றி அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை மூன்று மாதம் வரை சேமிக்கலாம். உங்களுக்கு அதற்கு மேல் வைத்துக்கொண்டால், அதன் வீரியம் குறைந்துவிடும். எனவே தேவைக்கு ஏற்ப அவ்வப்போது அரைத்து ஃரெஷ்ஷாக பயன்படுத்துவது நல்லது. காய்ச்சும்போது அடுப்பு மிதான தீயில் இருக்க வேண்டும். எண்ணெய் பச்சை நிறத்தில் இருக்கும்போதே வடிகட்டிக்கொள்ளலாம்.
காலையில் தலையில் வைத்து 2 மணி நேரம் ஊறவிட்டு தலை அலசலாம். இல்லாவிட்டால், இரவில் தலையில் தடவிவிட்டு, காலையில் தலை அலசிக்கொண்டால், பலன் இன்னும் நன்றாக இருக்கும். எனவே இந்த குறிப்பை பின்பற்றி கட்டாயம் பயன்பெறுங்கள். மேலும் இரும்புச்சத்துக்கள் நிறைந்த உணவை அன்றாடம் எடுத்துக்கொள்வதும் உடலுக்கு நல்லது.
டாபிக்ஸ்