கூந்தல் வளர்ச்சி : ஊர், உற்றார், உறவினர் கண் படுமளவு நீண்ட கருங்கூந்தல் வேண்டுமா? இருபொருள் போதும்! மருத்துவர் குறிப்பு
கூந்தல் வளர்ச்சி : நீண்ட, பளபளப்பான கருங்கூந்தல் வேண்டுமா? எனில் உங்களுக்கு இந்த இருபொருள் மட்டும் போதும் என்று மருத்துவர் காமராஜ் கூறுகிறார். அது என்னவென்று பாருங்கள்.

பெண்களுக்கு சூப்பரான டிப்ஸ் இது, ஏனெனில் கருகரு நீண்ட கூந்தல் வளர்க்கவேண்டும் என்பது அனைத்து பெண்களின் விருப்பமாகும். பெண்களின் அழகை அதிகரித்து காட்டுவதில் நீள கூந்தல் முக்கிய பங்கு வகிக்கிறது.
திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதள பக்கங்கள் மூலம் சித்த மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். இதன் மூலம் அவர் சித்த மருத்துவம குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவர் தரும் எளிய குறிப்புகள் எண்ணற்ற நன்மைகளைக் கொடுப்பவையாக உள்ளன. அந்த வகையில் இன்று அவர் ஒரு குறிப்பை வழங்கியுள்ளார். அது பெண்களுக்கு மிகவும் சூப்பரான டிப்ஸ்.
அவர் கூறியிருப்பதாவது,
நீண்ட கூந்தலைப் பெற வேண்டும் என்ற விருப்பம் பெண்களுக்கு கட்டாயம் இருக்கும். அது நரைக்கக்கூடாது. நல்ல நீளமாக இருக்கவேண்டும். கொட்டக்கூடாது. அடத்தியாக இருக்கவேண்டும். கருகருவென்று பளபளப்பான இருக்கவேண்டும் என்பது அவர்களின் விருப்பமாகும். அதற்காக பெண்களுக்கு இந்த டிப்ஸ் உதவும்.
தேவையான பொருட்கள்
• கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
• வெந்தயம் – அரை கப்
செய்முறை
1. வெந்தயத்தை ஊறவைத்துக்கொள்ளவேண்டும். அடுத்து கறிவேப்பிலை மற்றும் வெந்தயத்தையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். அதை சிறிய வடைகளாக தட்டிக்கொள்ளவேண்டும்.
2. அந்த வடைகளை நிழலில் உலர்த்தவேண்டும். ஒரு வடை 10 கிராம் அளவுக்கு இருக்கவேண்டும். காட்டன் துணியில் ஃபேனில் உலர்த்துவது நலம். இந்த வடைகளில் ஒன்றை எடுத்து 100 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெயில் ஊறவிடவேண்டும். 15 நாள் அது ஊறட்டும். இந்த எண்ணெயை 15 நாட்கள் கழித்து தினமும் தலைக்கு தடவிக்கொண்டு வந்தால், உங்களுக்கு ஒரு நரை முடி கூட வராது. முடி உதிர்வு இருக்காது. முடி அடர்த்தியாக வளரும். கூந்தல் கருமையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். உங்கள் கூந்தலைப்பார்த்து ஊர் கண்ணே படும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்