தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Hair Fall : கொத்து கொத்தாக கொட்டும் முடி! என்ன செய்தாலும் நிற்கவில்லையா? இந்த சின்ன விஷயம் மட்டும் போதும்!

Hair Fall : கொத்து கொத்தாக கொட்டும் முடி! என்ன செய்தாலும் நிற்கவில்லையா? இந்த சின்ன விஷயம் மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
Jul 05, 2024 05:13 PM IST

Hair Fall : கொத்து கொத்தாக கொட்டும் முடி! என்ன செய்தாலும் நிற்கவில்லையா? இந்த சின்ன விஷயம் மட்டும் போதும்!

Hair Fall : கொத்து கொத்தாக கொட்டும் முடி! என்ன செய்தாலும் நிற்கவில்லையா? இந்த சின்ன விஷயம் மட்டும் போதும்!
Hair Fall : கொத்து கொத்தாக கொட்டும் முடி! என்ன செய்தாலும் நிற்கவில்லையா? இந்த சின்ன விஷயம் மட்டும் போதும்!

அதன் சாறில் அத்தனை நன்மைகள் உள்ளது. வெங்காயத்தின் சாறு உங்கள் தலைமுடி வளர்ச்சியை அதிகரிப்பதுடன், தலைமுடி உதிர்வைக் குறைக்கிறது. அது தரும் நன்மைகளை அறிவியல் பூர்வமாக தெரிந்துகொள்வோம்.

வெங்காயத்தில் உள்ள சல்ஃபர் என்ற உட்பொருள்தான் தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அமினோ அமிலங்களில் சல்ஃபர் காணப்படுகிறது. இது புரதம் மறறும் கெரடின்கள் உருவாகக் காரணமாகிறது. கெரட்டின் தலைமுடியின் முக்கிய பொருள் ஆகும். சல்ஃபர் அதிகம் உள்ள பொருட்கள் தலைமுடியை வலுவடையச் செய்கின்றன.

ட்ரெண்டிங் செய்திகள்

வெங்காயத்தில் உள்ள ஆன்டிபாக்டீரியல் உட்பொருட்கள், தலைமுடியின் வேர்க்கால்களில் உள்ள தொற்றுக்களை போக்க உதவுகிறது. இதனால் தலைமுடி இழப்பு குறைக்கிறது. இதில் அதிகளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஃப்ளேவனாய்ட்கள், தலைமுடியின் ஃபோலிக்கில்களை, ஃப்ரீ ராடிக்கல்களிடம் இருந்து காக்கிறது. இதனால் தலைமுடி சேதம் தவிர்க்கப்படுகிறது.

தலைமுடி வளர்ச்சிக்கு வெங்காயச்சாறின் நன்மைகள்

கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது

சல்ஃபர் கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது ஆரோக்கியமான தலைமுடிக்கு நல்லது. கொலாஜென் ஆரோக்கியமான சரும செல்களை உற்பத்தி செய்கிறது மற்றும் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது

வெங்காயத்தின் சாறை நேரடியாக தலையில் வைப்பது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க அது உதவியாக இருக்கிறது. தலைமுடி வளர்ச்சிக்கு தேவையான ஆக்ஸிஜனைக் கொடுக்கிறது.

வீக்கத்தை குறைக்கிறது

வெங்காயத்தின் சாறில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், தலைமுடியின் வேர்க்கால்களை வலுவாக்குகிறது. இதனால் வீக்கம் குறைந்து, எரிச்சல் போன்றவை ஏற்படாமல் இருக்கிறது. இது தலைமுடி வளர்ச்சியை சரிசெய்கிறது. இது தலைமுடிக்கு கூடுதல் வலுவாகும்.

பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள்

வெங்காயம், தலைமுடியின் வேர்க்கால்களில் உள்ள தொற்றுக்கள் மற்றும் பொடுகை எதிர்த்து போராடுகிறது. இதனால் தலைமுடி உதிர்வது குறைகிறது. ஆரோக்கியமான வேர்க்கால்களை உருவாக்கிவிட்டு, வலுவான தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட் பாதுகாப்பு

வெங்காயத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. அது தலைமுடியின் வேர்க்கால்களை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கிறது. இந்த அழுத்தம்தான் தலைமுடி உதிர்வு மற்றும் வயோதிகத்துக்கு காரணமாகிறது.

வெங்காயச்சாறு தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி?

வெங்காயத்தை வெட்டி, மிக்ஸிஜாரில் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து, பிழிந்து எடுத்துக்கொள்ளவேண்டும். வடிகட்டி, அதன் சாறை தலையில் நேரடியாக தடவலாம். ஆனால் உங்கள் சருமம் மிகவும் சென்சிட்டிவ் என்றால், உடன் லாவண்டர் எண்ணெய் அல்லது ரோஸ்மேரி எண்ணெய் சேர்த்து பயன்படுத்தலாம்.

இது உங்கள் தலைமுடிக்கு நல்ல மணத்தையும் தரும். வேர்க்கால்களில் தடவி மசாஜ் செய்யவேண்டும். உங்களுக்கு அதிக முடி உதிர்வு உள்ள இடத்தில் நன்றாக மசாஜ் செய்யவேண்டும். அது உங்கள் தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதை அரை மணி நேரம் அப்படியே விடவேண்டும். எத்தனை மணி நேரம் அல்லது ஓரிரவு கூட ஊறவிடலாம்.

பின்னர் மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் ஷாம்பூ கொண்டு அலச வேண்டும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதுபோல் செய்தால் உங்கள் தலைமுடி நல்ல அடர்த்தியாக வளர்வதை கண்கூடாக காண முடியும். தொடர்ந்து சில வாரங்கள் செய்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

டாபிக்ஸ்