தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Hair Care : பட்டுபோல் மின்னும் நீண்ட கூந்தல் வேண்டுமா? இதோ வீட்டிலே தயாரிக்கலாம் ஷாம்பூ!

Hair Care : பட்டுபோல் மின்னும் நீண்ட கூந்தல் வேண்டுமா? இதோ வீட்டிலே தயாரிக்கலாம் ஷாம்பூ!

Priyadarshini R HT Tamil
May 05, 2024 01:50 PM IST

கெமிக்கல் கலக்காத ஷாம்பூ பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

Hair Care : பட்டுபோல் மின்னும் நீண்ட கூந்தல் வேண்டுமா? இதோ வீட்டிலே தயாரிக்கலாம் ஷாம்பூ!
Hair Care : பட்டுபோல் மின்னும் நீண்ட கூந்தல் வேண்டுமா? இதோ வீட்டிலே தயாரிக்கலாம் ஷாம்பூ!

ட்ரெண்டிங் செய்திகள்

நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

முடி கருகருவென்று பட்டுபோல் பளபளவென்றும், பெண்களுக்கு நீளமாகவும், அடர்த்தியாகவும் இருக்கும்.

தலையில் பேன், பொடுகு தொல்லை இருக்காது. இளநரை இருக்காது. முதுநரையும் தாமதமாகத்தான் வரும்.

இவற்றை தடுக்க நாம் வீட்டிலே இயற்கை முறையில் ஷாம்பூ தயாரித்து பயன்படுத்துவதோடு, ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியை செய்யவேண்டும். நிறைய தண்ணீர் பருகுவதுடன், குறிப்பாக அதிகளவில் முருங்கைக்கீரையை சாப்பிடவேண்டும்.

கெமிக்கல் கலந்த ஷாம்பூ பயன்படுத்தும்போது, தலைமுடியில் வறட்சி ஏற்படுகிறது. முடிஉதிர்வு, இளநரை, முதுநரை என ஏற்படுகிறது.

மேலும், ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கமும் இருந்தால் அவ்வளவுதான் நமது உடல் ஆரோக்கியம் கெடுவதுடன், தலைமுடியும் பாதிக்கப்படுகிறது.

இதனால் தலைமுடி உதிர்வதுடன், தலைமுடியின் நிறமும் மாறுகிறது. இதை சரிசெய்யும் வகையில் வீட்டிலே இயற்கையான முறையில் ஷாம்பூ தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

பச்சைப்பயறு – கால் கப்

(தலைமுடி வளர்ச்சிக்கு இதன் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உதவுகிறது)

வெந்தயம் – 2 ஸ்பூன்

(தலைமுடிக்கு நல்ல கன்டிஷ்னராக இருக்கும். தலைமுடியை வறட்சியடைய விடாது. முடிக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து, முடியை பளபளப்பாக வைத்திருக்கும்)

மிளகு – 10

(தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். ரத்த ஓட்டம் அதிகரித்தாலே முடி வளர்ச்சி அதிகரிக்கும், முடி உதிர்வு இருக்காது)

செய்முறை

இந்த மூன்றையும் அலசிவிட்டு, சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் சேர்த்து ஓரிரவு ஊறவேண்டும்.

இதை ஒரு நாள் வைத்து முளைக்கட்டியும் பயன்படுத்தலாம். கஞ்சி புளிக்கும்போது அதில் ஒரு வகை பாக்டீரியாக்கள் உருவாகும். அது தலைமுடி வளர்ச்சிக்கு நல்லது. தலையில் உள்ள அழுக்கு மற்றும் பொடுகை நீக்கும்.

இதை நன்றாக அரைத்து, தலையில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும். பின்னர் சீயக்காய், ஷாம்பூ என எதுவும் பயன்படுத்தாமல் இதை மட்டும் தலையில் தேய்த்து குளிக்கவேண்டும்.

முடி நல்ல பளபளவென்று நீண்ட கூந்தலாகவும் வளரும். முடி உதிர்வு முற்றிலும் நின்றுவிடும். தலைமுடி நல்ல கருகருவென வளரும். இளநரை மறையும். முதுநரையை தள்ளிப்போடும்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஹேர்பாக் உங்கள் தலைக்கும், உடலுக்கு நல்லது. எனவே இதை கட்டாயம் பயன்படுத்திப்பாருங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்