தலைமுடி பராமரிப்பு.. வெங்காயம், அரிசி நீர் போதும்.. பைசா செலவில்லாமல் முடி வளர்ச்சிக்கு உதவும் அற்புத பேஸ்ட்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தலைமுடி பராமரிப்பு.. வெங்காயம், அரிசி நீர் போதும்.. பைசா செலவில்லாமல் முடி வளர்ச்சிக்கு உதவும் அற்புத பேஸ்ட்

தலைமுடி பராமரிப்பு.. வெங்காயம், அரிசி நீர் போதும்.. பைசா செலவில்லாமல் முடி வளர்ச்சிக்கு உதவும் அற்புத பேஸ்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jun 18, 2025 02:15 PM IST

கூந்தல் பராமரிப்புக்காக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், வீட்டிலேயே ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல் உங்கள் தலைமுடியை எளிதாக நன்கு பராமரிக்கலாம். இதற்கு, அரிசி நீர் மற்றும் வெங்காய விழுது மட்டும் போதும்.

தலைமுடி பராமரிப்பு.. வெங்காயம், அரிசி நீர் போதும்.. பைசா செலவில்லாமல் முடி வளர்ச்சிக்கு உதவும் அற்புத பேஸ்ட்
தலைமுடி பராமரிப்பு.. வெங்காயம், அரிசி நீர் போதும்.. பைசா செலவில்லாமல் முடி வளர்ச்சிக்கு உதவும் அற்புத பேஸ்ட்

கூந்தல் உதிர்வைத் தடுக்க சந்தையில் பல வகையான ஷாம்புகள், சீரம்கள், எண்ணெய்கள் மற்றும் மருந்துகள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இருப்பினும், அவற்றால் சில பக்க விளைவுகள் ஏற்படலாம்.

கூந்தல் உதிர்தலை தடுக்கவும், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கவும் ஒரு எளிய வழியைப் பார்க்கலாம். இதற்காக என பல ரூபாய் செலவழிப்பதை தவிர்த்து, நம்மிடம் இருக்கும் பொருள்களை பயன்படுத்தி கூந்தல் வளர்ச்சியை பராமரிக்கலாம். வெங்காயம் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் நல்ல மூலப்பொருளாக திகழ்கிறது. அதேபோல் அரிசி நீரும் கூந்தல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லதாக உள்ளது.

அரிசி நீர், வெங்காயம் தலைமுடி பராமரிப்பு நன்மைகள்

அரிசியில் அதிக அளவு இனோசிட்டால் உள்ளது. இது கூந்தல் வளர்ச்சிக்கு அவசியமான கார்போஹைட்ரேட் ஆகும். இது கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. சேதமடைந்த முடியை வலுப்படுத்த இனோசிட்டால் உள்ளடக்கம் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் அரிசி நீரில் நிறைந்திருக்கும் அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் முடியை வலுப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி தேவைான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.

வெங்காயத்தில் உள்ள கந்தகம், கொலாஜன் உற்பத்திக்கு நன்மை பயக்கும். கொலாஜன் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. அரிசி நீர் மற்றும் வெங்காயத்தைப் பயன்படுத்தி முடியில் தடவக்கூடிய ஒரு எளிதான பேஸ்ட்டை உருவாக்கி முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.

வெங்காயம் - அரிசி நீர் பேஸ்ட் செய்யும் முறை

முதலில், ஒரு பாத்திரத்தில் அரிசியை எடுத்து தண்ணீரை ஊற்றி ஊற வைக்கவும். இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை ஊற வைத்த பிறகு, அரிசியில் இருந்து தண்ணீரைப் பிரிக்கவும். அரை வெங்காயத்தை பொடியதாக நறுக்கி இந்த தண்ணீரில் சேர்க்கவும். அதனுடன் ஒரு அங்குலம் உரிக்கப்பட்ட இஞ்சியையும் சேர்க்கவும்.

இந்த கலவையை அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்னர், அடுப்பை அணைத்து, கலவையை குளிர்விக்க விடவும். இந்த கலவை குளிர்ந்த பிறகு, ஒரு மிக்ஸி ஜாடியை எடுத்து மென்மையான பேஸ்டாக அரைக்கவும்.

இந்த பேஸ்ட்டை உங்கள் தலை மற்றும் முடியில் நன்றாக தடவி 30 நிமிடங்கள் விடவும். பின்னர் உங்கள் தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் கழுவவும் அல்லது குளிக்கவும். இதை வாரத்துக்கு இரண்டு முறை தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் உங்கள் முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.