Hair Care : கருகருவென நீளமான கூந்தல் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? இயற்கை தரும் இதமான ஆற்றல்!
Hair Care : கருகருவென நீளமான கூந்தல் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? இயற்கை தரும் இதமான ஆற்றல்!

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
தலையில் முடி உதிர்வது, பொடுகு, இளநரை போன்ற பிரச்னைகள் படுத்தி எடுக்கிறது எனில் அதை நாம் தலையாய பிரச்னையாக எடுத்துக்கொள்ளவேண்டும். சாதாரண பிரச்னையாக்கிவிடக்கூடாது. இதை நீங்கள் எப்போதும் நினைவில்கொள்ளவேண்டும்.
தலைமுடி ஆரோக்கியமாகவும், பளபளப்புடனும் ஜொலித்தால் உங்களின் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எனவே முடி உதிர்வு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாக கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பை பயன்படுத்தி பலன்பெறுங்கள். தலைமுடி பிரச்னைகளுக்கு இயற்கையில் தீர்வு கிடைக்கும். இதை தலைமுடியில் பிரச்னைகள் இருந்தால் மட்டுமல்ல, சாதாரணமாக அனைவருமே பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
ஃப்ளாக்ஸ் விதைகள் – ஒரு ஸ்பூன்
அரிசி – 2 ஸ்பூன்
கருஞ்சீரகம் – ஒரு ஸ்பூன்
மருதாணிப் பொடி – அரை கப்
பட்டை – ஒரு துண்டு
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவைக்க வேண்டும். அதில் ஃப்ளாக்ஸ் விதைகள், அரிசி, கருஞ்சீரகம், பட்டை, கறிவேப்பிலை ஆகிய பொருட்களை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.
அவற்றின் சாறுகள் இறங்கி தண்ணீரின் நிறம் மாறியவுடன், அதை வடிகட்டி, மருதாணியில் சேர்த்து நன்றாக ஊறவைக்கவேண்டும். ஒரு மணி நேரம் கழித்து இதை தலையில் தடவி 4 மணி நேரம் காயவிடவேண்டும்.
பின்னர் ஒரு மிருதுவான ஷாம்பூ கொண்டு தலைமுடியை அலசவேண்டும். கூந்தல் பளபளக்கும், அதனுடன் நரை முடிகள் எட்டிப்பார்க்காது. கூந்தலும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும்.
இதில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளுமே கூந்தல் ஆரோக்கியத்துக்கு நல்லது. முடி உதிர்வு, பொடுகு போன்ற தலையில் ஏற்படும் பிரச்னைகளும் தீர்க்கப்படும்.
இதுபோல் வாரம் ஒருமுறை செய்யவேண்டும். உங்கள் கூந்தலுக்கு இயற்கை ஆரோக்கியமும், அழகும் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்