தலைமுடி பராமரிப்பு : நல்லெண்ணெயை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
தலைமுடி பராமரிப்பு குறிப்புகள் : நல்லெண்ணெயை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

நல்லெண்ணெய் என்பது எள் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயாகும். இது இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் பயிரிடப்பட்ட ஒரு பயிராகும். இதன் விதைகளை செக்கில் வைத்து பிழிந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். நல்லெண்ணெயில் அதிகளவில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இதில் மினரல்கள், மெக்னீசியம், கால்சியம் மற்றும் புரதச்சத்துக்களும் உள்ளது. இது தலைமுடி ஆரோக்கியத்துக்கு என்ன நன்மைகளைக் கொடுக்கிறது என்று பார்க்கலாம்.
புறஊதாக் கதிர்களிடம் இருந்து பாதுகாக்கிறது
நல்லெண்ணெய், சூரிய ஒளியில் இருந்து தலைமுடிக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. இது வேர்க்கால்களையும், தலைமுடியையும் பாதுகாக்கிறது. இது பாதுகாப்பு கவசத்தை தலைக்கு கொடுத்து 30 சதவீதம் புறஊதாக் கதிர்களிடம் இருந்து பாதுகாப்பு கொடுக்கிறது.
பொடுகை எதிர்த்துப் போராடுகிறது
இதன் ஆன்டிமைக்ரோபியல் உட்பொருட்கள் மற்றும் ஃபேட்டி ஆசிட்கள், தலைமுடியின் வேர்க்கால்களில் பொடுகு உருவாகாமல் தடுக்கிறது. மேலும் ஃப்ரி ராடிக்கல்களையும் தடுக்கிறது. இதனால் தலையில் பூஞ்ஜை மற்றும் பாக்டீரியா போன்ற தொற்றுக்கள் ஏற்படுவதில்லை.
வீக்கம்
கோடைக்காலங்களில் ஏற்படும் அதிகப்படியான வெப்பம், உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்துக்களை உறிஞ்சுகிறது. தலைமுடியின் வேர்க்கால்களை சேதப்படுத்துகிறது. ஆனால் நல்லெண்ணெய் தலைக்கு குளுமை அளிக்கிறது. இது உள்ளுக்குள் இருந்தும் உடலை குளுமையாக்கி, தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது.
வேர்க்கால்களுக்கு நீர்ச்சத்துக்களைக் கொடுக்கிறது
நல்லெண்ணெய் தலை முடியின் வேர்க்கால்களுக்கு உள்ளே ஊடுருவிச் சென்று, அந்த சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது. இது வறண்ட வேர்க்கால்களைப் போக்கி, உங்கள் தலைமுடிக்குத் தேவையான நீர்ச்சத்துக்களைக் கொடுக்கிறது.
சேதமான தலைமுடியை சரிசெய்கிறது
இது தலைக்கு உள்ளே ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்டது என்பதால், இது சரும சேதத்தை குணப்படுத்துகிறது. தலைமுடி வறட்சி மற்றும் சேதம் இரண்டையும் எவ்வித முயற்சியும் இன்றி குணப்படுத்துகிறது. இது உங்கள் தலைக்கு பாதுகாப்பு கவசம்போல் உதவுகிறது.
பளபளக்கும் தலைமுடி
இந்த எண்ணெயின் மென்மையாக்கும் உட்பொருட்கள், பளபளக்கும் மென்மையான கேசத்தைக் கொடுக்கிறது. இது சிக்கில்லாத, மிருதுவான கேசத்தைக் கொடுத்து, ஈரமில்லாமல் வைக்கிறது. இந்த தலைமுடியில் நீங்கள் என்ன ஸ்டைல் வேண்டுமானாலும் செய்யலாம்.
தலைமுடிக்கு இதமளிக்கிறது
நல்லெண்ணெயை தலைமுடி மற்றும் முடியின் வேர்க்கால்கள் ஆகியவற்றில் நீங்கள் நன்றாகத் தடவவேண்டும். வாரத்தில் இருமுறை இதை செய்யும்போது, அது உங்களுக்கு தலைமுடி உதிர்வைக் குறைக்கிறது. மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தைப் போக்குகிறது. உறக்கமின்மை மற்றும் தலைவலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது.
இரவு ஊறவிடலாமா?
நல்லெண்ணெயை தடவி வைத்து, ஓரிரவு நீங்கள் ஊறவிடலாம். நல்லெண்ணெயை தடவி, உங்கள் தலையை ஸ்கார்ஃப் வைத்து மூடிக்கொள்ளுங்கள். அப்போதுதான் எண்ணெய் தலையணையில் ஒட்டாமல் இருக்கும். அடுத்த நாள் காலையில் தலையை அலசிவிடவேண்டும். அப்போது உங்களுக்கு பளபளக்கும் சிக்கில்லாத தலைமுடி கிடைக்கும்.

டாபிக்ஸ்