Hair Care Tips: கூந்தல் பராமரிப்பு: நரை முடியை பராமரிக்க டிப்ஸ்
உங்கள் நரை முடியை கவர்ச்சிகரமானதாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்ற நிபுணர்களின் சில சிறந்த உதவிக்குறிப்புகளைப் பாருங்கள்.
வாழ்க்கையில் தவிர்க்க முடியாத சில விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று வயது ஆவது.
நமக்கு நரை முடி வரும்போதுதான், அனைவருக்கும் வயதாவது தவிர்க்கமுடியாதது எனத் தெரிகிறது. எனவே, உங்கள் தலைமுடியை கருப்பு அல்லது சாம்பல் நிறமாக மாற்றிக்கொள்வது முக்கியம்.
உலகெங்கிலும் மன அழுத்தம் உள்ள பெண்களுக்கு நரை முடி மற்றும் சாம்பல் நிற முடி எளிதில் வருகிறது. ஆனால், சமீப காலத்தில் நரைமுடி வயதானவர்களுக்கு மட்டும் வருவதில்லை. இளைஞர்களுக்கும் இளம்சிறார்களுக்கும் இளம்பெண்களுக்கும் கூட நரைமுடி வருகிறது. பெண்கள் மத்தியில் இயற்கையாகவே முடி நரைப்பது புதிய வழக்கமாகிவிட்டதால், அதை அவர்களும் வெளியில் காட்டத் தயக்கம் காட்டுவதில்லை. வெளிப்படையாக நரை தெரிவதை பெண்கள் மறைக்க விரும்புவதில்லை.
சான்றளிக்கப்பட்ட சிகை அலங்கார நிபுணரும் மானெடெய்னின் இணை நிறுவனருமான யூபா கானின் கூற்றுப்படி, "கொரோனா ஊரடங்குக்குப் பிறகு, பல பெண்கள் டை அடிக்க முடியாததால், அக்காலத்தில் வெளிப்படையாக நரை முடியுடன் இருந்தனர். மேலும் வீட்டில் வேறுசில வண்ணங்களைக்கூட முயற்சிக்க விரும்பவில்லை. மேலும் வயதானது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொண்டாடப்படுகிறது’’ என்றார்.
இந்துஸ்தான் டைம்ஸ் லைஃப்ஸ்டைல் பக்கத்துக்கான உரையாடலில், நரை முடியைப் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும், அழகாகவும் பராமரிக்க உதவிக்குறிப்புகளை யூபா கான் பரிந்துரைக்கிறார். அவையாவன:-
1. வெவ்வேறு வகையில் முடிகளை வெட்டி பரிசோதனையைச் செய்யுங்கள்:- நமது முடி சாம்பல் நிறமாக இருக்கும்போது, உங்கள் ஹேர்கட் வடிவம் மற்றும் அமைப்பு மிகவும் முக்கியமானதாகத் தொடங்குகிறது. எனவே, உங்கள் இயற்கையான அமைப்பை அழகாக காட்டும் சில ஹேர்கட் வடிவங்களை முயற்சியுங்கள். அதனை உங்கள் ஒப்பனையாளருடன் இணைந்து செயல்படுத்துங்கள்.
2. உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கவும்:- துரதிர்ஷ்டவசமாக, நரை முடி தானாகவே வராது. இது பெரும்பாலும் சில முடி உதிர்தல் மற்றும் முடி மெலிந்து போவதுடன் தொடர்புடையது. எனவே, முடியின் வளர்ச்சியைத் தூண்டும் மற்றும் உங்களுக்கு சிறப்பாகச் செயல்படும் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது முக்கியம். சரியான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உண்பதை உறுதிப்படுத்துவது முன்னெப்போதையும் விட முக்கியமானது.
3. சரியான முடி பராமரிப்பு தயாரிப்புகளைப் பெறுங்கள்: எப்போதும் ஈரப்பதம் சார்ந்த ஷாம்பு / கண்டிஷனர் மற்றும் மாஸ்க் பயன்படுத்தவும்.
4. உங்கள் தலைமுடியை வெயிலில் இருந்து பாதுகாக்கவும்:- இது ஒரு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், நரை முடி வெயிலில் மிகவும் எளிதாக அதிகரிக்கிறது. அதை சற்று மஞ்சள் நிறமாக மாற்றுகிறது. இது சரிசெய்ய மாதங்கள் ஆகலாம். எனவே உங்கள் தலைமுடியை வெளியில் செல்லும்போது, ஒரு தொப்பியால் மூடிக்கொள்வதோ, பின்னல்போட்டு அதன்மேல் சால் போட்டுக்கொள்வதோ முக்கியம்.
5. சூடான ஸ்டைலிங் கருவிகளைத் தவிர்க்கவும்: தலைமுடியில் சூடான கருவிகளைப் பயன்படுத்தும் போது நரை முடி மிக எளிதாக அதிகரிக்கிறது. எனவே, ஸ்டைலிங் கருவிகளில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதை உறுதிசெய்து கொள்ளவேண்டும். தலைமுடியில், எந்தப் பகுதியிலும் அதிக நேரம் செலவிட வேண்டாம். மேலும், எந்தவொரு சூடான கருவிகளையும் தலையில் பயன்படுத்துவதற்கு முன்பு, மித வெப்பத்தை மட்டும் பயன்படுத்த மறக்காதீர்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்