தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Gut Health : குடலில் குவிந்துள்ள கொழுப்புக்களை அடித்து வெளியேற்ற உதவும் பானம்! 15 நாளில் பலன்!

Gut Health : குடலில் குவிந்துள்ள கொழுப்புக்களை அடித்து வெளியேற்ற உதவும் பானம்! 15 நாளில் பலன்!

Priyadarshini R HT Tamil
Jul 01, 2024 11:15 AM IST

Gut Health : குடலில் குவிந்துள்ள கொழுப்புக்களை அடித்து வெளியேற்ற உதவும் இந்த பானத்தை 15 நாட்கள் பருகினாலே போதும். பலன் உறுதியாகக் கிடைக்கும்.

Gut Health : குடலில் குவிந்துள்ள கொழுப்புக்களை அடித்து வெளியேற்ற உதவும் பானம்! 15 நாளில் பலன்!
Gut Health : குடலில் குவிந்துள்ள கொழுப்புக்களை அடித்து வெளியேற்ற உதவும் பானம்! 15 நாளில் பலன்!

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

உடல் பருமன்

உடலில் கொழுப்பு அதிகரிக்கும்போது உடல் எடை அதிகரிக்கிறது. உடல் பருமனை நாம் அழகு பிரச்னையாக மட்டும் பார்க்கக்கூடாது. இது மருத்துவ பிரச்னையும் ஆகும். இது பல நோய்கள் மற்றும் உடல் உபாதைகளை அதிகரிக்கிறது.

இது இதய நோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, கல்லீரல் கோளாறுகள், உறக்கப் பிரச்னைகள் மற்றும் சிலவகை புற்றுநோய்களையும் இது ஏற்படுத்துகிறது.

சிலருக்கு உடல் எடையை குறைப்பது மிக சவாலான ஒன்றாக இருக்கலாம். உடல், சூழல், உணவு, உடற்பயிற்சியின்மை, மரபு என உடல் பருமனுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. 

குடலில் சேரும் கொழுப்புகளாலும் உடல் எடை அதிகரிக்கிறது. அது உடல் எடையை அதிகரிப்பதுடன் மட்டுமின்றி உங்களுக்கு தொப்பை ஏற்படவும் காரணமாகிறது.

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் கொஞ்சம் அளவு எடையைக் குறைத்தாலும் அது உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, வாழ்வியல் மாற்றங்கள் ஆகிய யாவும் உங்களுக்கு உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடல் பருமனுக்கு சிகிச்சையளிப்பதில் மருந்து மாத்திரைகளும் இடம் பெறுகின்றன.

ஆனால் இயற்கை வழிகளிலும் உடல் எடையை குறைக்க முடியும். அதற்கு சில பானங்கள் உதவுகின்றன. அவை உங்கள் உடல் எடையை குறைப்பதுடன், உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கின்றன. அதில் ஒன்றை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

அன்னாசிப்பழம் – ஒரு கப் (சுத்தம் செய்து நறுக்கியது)

வெள்ளரி – 1

இஞ்சி – ஒரு இன்ச்

எலுமிச்சை சாறு – ஒரு பழத்தின் சாறு

தண்ணீர் – 250 மில்லி லிட்டர்

செய்முறை

அன்னாசிப் பழம், வெள்ளரி, இஞ்சி, எலுமிச்சை சாறு மற்றும் 250 மில்லி லிட்டர் தண்ணீரும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். பின்னர் அதை வடிகட்டி 15 நாட்கள் பருகவேண்டும்.

அப்படி பருகும்போது இது குடலில் உள்ள கொழுப்புகளை மொத்தமாக கரைத்து வெளியேற்றிவிடுகிறது. இதனால் உங்கள் உடலின் எடையும் கணிசமாக குறைவதைக் காணலாம்.

15 நாளில் 7 கிலோ உடல் எடையைக் குறைக்க முடியும். ஆனால், இதற்கு தேவையான உடற்பயிற்சி மற்றும் டயட்டை நீங்கள் பின்பற்றவேண்டும். 

மருத்து, மாத்திரைகள் என பக்கவிளைவுகளை ஏற்படுத்திக்கொள்ளாமல் இதுபோன்ற இயற்கை முறைகளை பின்பற்றும்போது, அது பக்கவிளைவுகளும் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பலன்பெறுங்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.