தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Guntur Masala Powder : இந்த ஒரு மசாலாப் பொடி மட்டும் போதும்! சைவம் மற்றும் அசைவம் இரண்டு வறுவலிலும் அசத்தலாம்!

Guntur Masala Powder : இந்த ஒரு மசாலாப் பொடி மட்டும் போதும்! சைவம் மற்றும் அசைவம் இரண்டு வறுவலிலும் அசத்தலாம்!

Priyadarshini R HT Tamil
Apr 21, 2024 05:24 PM IST

Guntur Masala Powder : ஒரே ஒரு மசாலாப்பொடி அனைத்து வறுவல் மற்றும் குழம்புக்கும் ஏற்றது. அதை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Guntur Masala Powder : இந்த ஒரு மசாலாப் பொடி மட்டும் போதும்! சைவம் மற்றும் அசைவம் இரண்டு வறுவலிலும் அசத்தலாம்!
Guntur Masala Powder : இந்த ஒரு மசாலாப் பொடி மட்டும் போதும்! சைவம் மற்றும் அசைவம் இரண்டு வறுவலிலும் அசத்தலாம்!

ட்ரெண்டிங் செய்திகள்

பட்டை – 2

கிராம்பு – 10

பிரியாணி இலை – 3

கருப்பு ஏலக்காய் – 2

ஏலக்காய் – 4

ஸ்டார் சோம்பு – 3

ஜாதிக்காய் – சிறிது

மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்

சோம்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்

வெந்தயம் – அரை ஸ்பூன்

கசகசா – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

வர மிளகாய் – 4

கஷ்மீரி மிளகாய் – 4

முந்திரி – 6

செய்முறை

ஒரு கடாயை சூடாக்கி அதில், ஒரு கப் வரமல்லியை வறுக்கவேண்டும்.

பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, கருப்பு ஏலக்காய், ஏலக்காய், ஸ்டார் சோம்பு, ஜாதிக்காய் இவற்றையெல்லாம் ஒன்றாக சேர்த்து வறுக்க வேண்டும்.

மிளகு, சோம்பு, சீரகம், வெந்தம் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவேண்டும்.

கசகசாவை சேர்த்து வறுக்கவேண்டும். கறிவேப்பிலையை தனியாக வறுக்கவேண்டும்.

வர மிளகாய், கஷ்மீரி மிளகாயை வறுக்கவேண்டும். முந்திரியை கடைசியாக வறுத்து சேர்க்கவேண்டும்.

அனைத்தையும் ஆறவைத்து, ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

மணம் நிறைந்த குண்டூர் கறி மசாலா தயார்.

அனைத்து பொருட்களையும் வறுக்கும்போது, கடாயை குறைவான தீயில் வைத்துக்கொள்ள வேண்டும். பொருட்களை சரியான அளவில் வறுத்து எடுக்கவேண்டியது மிகவும் அவசியம். அப்போதுதான் மசாலாவின் சுவை மற்றும் மணம் இரண்டும் நன்றாக இருக்கும்.

இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

சைவம் மற்றும் அசைவம் என எதில் வறுவல் அல்லது கிரேவி செய்தாலும் இதை பயன்படுத்தலாம். அதன் சுவையை அதிகரிக்கும்.

இந்த மசாலாப்பொடியைப் பயன்படுத்தி உருளை வறுவல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – கால் கிலோ

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

எண்ணெய் – கால் கிண்ணம்

சோம்பு – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

இஞ்சி – பூண்டு விழுது – கால் ஸ்பூன்

மல்லித்தழை – ஒரு கைப்பிடி

செய்முறை

உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து வேகவைத்து தோல் நீக்கி, சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், சோம்பு, கறிவேப்பிலை, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்றான சேர்த்து வதக்கவேண்டும்.

அதில் இந்த குண்டூர் கறி மசாலாப்பொடி சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

கடைசியாக உருளைக்கிழங்கை சேர்த்து பிரட்டி எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு குண்டூர் கறிமசாலா தயார். உருளையை வேக வைக்காமல் நேரடியாக சேர்த்து வறுத்தால் சுவை இன்னும் அட்டகாசமாக இருக்கும்.

இதை சாம்பார், ரசம், தயிர் என எந்த சாதத்துக்கும் தொட்டுக்கொள்ள சுவை அள்ளும். குறிப்பாக தயிர் சாதத்துக்கு இந்த உருளைக்கிழங்கு வறுவல் அட்டகாசமான காம்போவாக இருக்கும்.

ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும், மீண்டும் ருசிக்கத்தூண்டும். பொதுவாக குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். அந்த வகையில், குழந்தைகள் விரும்பும் ஒன்றாக இந்த உருளைக்கிழங்கு இருக்கும்.

இதே முறையில் மற்ற காய்கறிகள் மற்றும் அசைவ உணவுகளை வறுக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்