Gujarathi khichu : குஜராத்தின் கிச்சு; எப்படி செய்வது என்று பாருங்க! வித்யாசமான ரெசிபி, விரும்பி சாப்பிடுவார்கள்!
Gujarathi khichu : குஜராத்தின் கிச்சு, எப்படி செய்வது என்று பாருங்கள்.

குஜராத்தின் கிச்சு, நாம் வழக்கமாக தமிழகத்தின் உணவுகளை மட்டும்தான் ருசித்திருப்போம். ஆனால் இது ஒரு குஜராத்தின் வித்யாசமான ஒரு ரெசிபியாகும். இந்த ரெசிபியை செய்வது எளிது. நீங்கள் அதிகம் மெனக்கெட தேவையில்லை. இதற்கு தேவையான பொருட்களும் குறைவுதான். இதன் செய்முறை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை எப்படி செய்வது என்று தெரிந்துகொண்டு செய்து பார்த்து, சாப்பிட்டு மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு – ஒரு கப்
தண்ணீர் – 2 கப்
எள் (கருப்பு அல்லது வெள்ளை) – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்
இஞ்சி - ஒரு இன்ச் (பொடியாக துருவியது)
பச்சை மிளகாய் – 1 அல்லது 2
(உங்கள் கார அளவுக்கு ஏற்ப, பொடியாக நறுக்கியது)
மல்லித்தழை – சிறிதளவு
செய்முறை
ஒரு ஆழமான கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவேண்டும். அதில் உப்பு, பெருங்காயத்தூள் மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதை சூடாக்கி, அதில் சீரகம் மற்றும் எள் பொரிந்து, பச்சை மிளகாய், இடித்த இஞ்சி என அனைத்தும் சேர்த்து சில நிமிடங்கள் வதங்க வேண்டும்.
இப்போது அரிசி மாவை சேர்த்து நன்றாக கரண்டியில் கிளறவேண்டும். அதில் கட்டிகள் இருக்கக்கூடாது. இதை நீங்கள் மூடி வைத்து சில நிமிடங்கள் வேக விடவேண்டும். அவ்வப்போது திறந்து கிளறிவிட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.
சமைத்தவுடன், பொடித்த மல்லித்தழை சேர்த்துக்கிளறவேண்டும். இதை புதினா- மல்லிச்சட்னியுடன் சேர்த்து பரிமாற சுவை அள்ளும். இது நமது ஊரில் செய்யப்படும் உப்புமா போன்றதுதான். ஆனால் நாம் அந்த உப்புமாவை ரவை அல்லது அரிசி குருணையில் செய்வோம். ஆனால் இதை நாம் அரிசி மாவில் செய்கிறோம். இதுவும் சுவையானதாக இருக்கும்.
உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிடித்த சுவையில் இருக்கும். நீங்கள் ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் சுவைக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே குஜராத்தின் இந்த ரெசிபியை நீங்கள் ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்