தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Guava Leaves : வெறும் வயிற்றில் கொய்யா இலைகளை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்.. சர்க்கரை முதல் எடை குறைப்பு வரை!

Guava leaves : வெறும் வயிற்றில் கொய்யா இலைகளை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்.. சர்க்கரை முதல் எடை குறைப்பு வரை!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 02, 2024 04:31 PM IST

Guava leaves Benefits : கொய்யா இலைகளை மென்று சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. வெறும் வயிற்றில் கொய்யா இலை சாப்பிடுவது நன்மை பயக்கும். கொய்யா இலைகளில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், மினரல்கள், பொட்டாசியம், தாமிரம் மற்றும் மாங்கனீஸ் ஆகியவை நிறைந்துள்ளன.

கொய்யா இலைகளை  சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் இதோ.. சர்க்கரை பிரச்சனை முதல்  எடை குறைவு வரை!
கொய்யா இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் இதோ.. சர்க்கரை பிரச்சனை முதல் எடை குறைவு வரை! (Freepik)

Guava leaves Benefits : பழங்களில் மிகவும் முக்கியமான பழம் கொய்யா. உணவில் கொய்யாவை சேர்த்துக் கொள்வது அவசியம். குறிப்பாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக கொய்யாவை சாப்பிட வேண்டும். இது ஏழைகளின் பழம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அதன் விலை மிகவும் குறைவு. கொய்யா பழம் மட்டுமல்ல, கொய்யா இலைகளையும் சாப்பிட வேண்டும். கொய்யா இலைகள் ஆண்டு முழுவதும் கிடைக்கும். இந்த இலைகளை சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

கொய்யாவைப் போலவே, அதன் இலைகளையும் மென்று சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. கொய்யா இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது குறிப்பாக நன்மை பயக்கும். கொய்யா இலைகளில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், மினரல்கள், பொட்டாசியம், தாமிரம் மற்றும் மாங்கனீஸ் ஆகியவை நிறைந்துள்ளன. கொய்யா இலைகளை காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வந்தால் பல நோய்களில் இருந்து விடுபடலாம். கொய்யா இலைகளை மென்று சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.