தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Guava Chutney Recipe: Make Healthy Guava Chutney For Your Kids

Guava Chutney Recipe: உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கொய்யாக்கா சட்னி.. இப்படி செய்து கொடுங்கள்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 16, 2024 07:00 AM IST

பொதுவாக கொய்யா காயை நாம் அப்படியே சாப்பிடுவோம். இல்லை என்றால் உப்பு மிளகாய் தூள் சேர்த்து சாப்பிடுவோம். ஆனால் இப்படி சட்னி செய்து சாப்பட்டு இருக்கிறீர்களா ருசி அருமையாக இருக்கும்

கொய்யா சட்னி
கொய்யா சட்னி

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

எண்ணெய்

கொய்யாகாய்

கடலை பருப்பு

உளுந்தம்பருப்பு

மிளகாய் வத்தல்

உப்பு

புளி

இஞ்சி

கறிவேப்பிலை

பூண்டு

சின்ன வெங்காயம்

சீரகம்

தேங்காய்

கடுகு உளுந்தம்பருப்பு

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் இரண்டு ஸ்பூன் கடலை பருப்பு, இரண்டு ஸ்பூன் உளுந்து சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பருப்பு வறுந்து வந்த பின் அதில் 5 மிளகாய் வந்தலை சேர்த்து வறுக்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் சீரகத்தையும் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு சிறிய துண்டு இஞ்சியையும் சேர்த்து வதக்க வேண்டும். 20 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் குட்டி நெல்லிக்காய் அளவு புளியையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

5 பூண்டையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதில் இரண்டு ஸ்பூன் தேங்காய துருவலையும் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய கொய்யா காயையும் சேர்த்து லேசாக வதக்கி பின் ஆற விட வேண்டும் . அதில் ஒரு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.வதக்கிய பொருட்கள் நன்றாக ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த பொருட்களை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும் . பின்னர் அதில் ஒரு ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு சேர்க்க வேண்டும் .கடுகு வெடித்த பிறகு இரு மூன்று சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதில் கால் ஸ்பூன் பெருங்காய தூளையும் சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து தாளிப்பை சட்னியில் சேர்த்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் ருசியான கொய்யாக்கா சட்னி ரெடி. ருசி அருமையாக இருக்கும். ருசி மட்டும் இல்ல உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமான சட்னி. இந்த சட்னி இட்லி தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பு: இந்த சட்னிக்கு அதிகம் பழுக்காத கொய்யா நல்ல ருசி தரும்.
கொய்யாவின் நன்மைகள்

வெறும் 100 கிராம் கொய்யாவில் சுமார் 300 மில்லி கிராம் அஸ்கார்பிக் அமிலம் உள்ளது. மேலும் பைட்டோ நியூட்ரான்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடன்டுகள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இதனால் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது கொய்யா. கொய்யா செரிமானத்திற்கும் உதவுகிறது. எடை குறைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும். இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவது மூல நோய்க்கு மிகவும் நல்லது. அதன் பல பொருட்கள் பற்கள், தோல் மற்றும் முடிக்கு நன்மை பயக்கும். எப்போதும் ஒரே மாதிரி சாப்பிடுவதற்கு பதிலாக இப்படி சட்னியாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். 

WhatsApp channel

டாபிக்ஸ்