கீரைகள் : ஆஸ்துமா முதல் மூட்டு வலி வரை எந்த நோய்க்கு எந்த கீரை ஏற்றது? – மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்!
கீரைகள் : மருந்தான இந்த கீரைகளை அனைவருமே சாப்பிடலாம். குறிப்பிட்ட உபாதைகளால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி எடுத்துக்கொள்வது அந்த உபாதைகளை குணப்படுத்த உதவும்.

உங்கள் உடலில் ஏற்படும் ஒவ்வொரு கோளாறுக்கும் ஒவ்வொரு கீரை மருந்தாகவும், உணவாகவும் பயன்படுகிறது. கீரை என்றால் உங்களுக்கு பிடிக்காதா? குழந்தைகள் கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட அடம்பிடிப்பார்கள். அவர்களையும் சிறு வயது முதலே கீரைகளை சாப்பிட வைப்பது நல்லது. மேலும் இங்கு எந்தெந்த பிரச்னைகளுக்கு எந்தெந்த கீரையை பயன்படுத்த வேண்டும் என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. அதை தெரிந்துகொண்டு வீட்டில் யாருக்கேனும் அந்த பிரச்னைகள் இருந்தால் அவர்களுக்கு இந்த கீரையை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினால் பிரச்னைகளும் குணமாகும். மேலும் மருந்தான இந்த கீரைகளை அனைவருமே சாப்பிடலாம். குறிப்பிட்ட உபாதைகளால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி எடுத்துக்கொள்வது அந்த உபாதைகளை குணப்படுத்த உதவும்.
டாக்டர் பிள்ளை தனது சமூக வலைதள பக்கங்களின் மூலம் மருத்துவ குறிப்புக்களை வழங்கி வருகிறார். அவர் அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரது ஒரு வீடியோவில் எந்த உபாதைக்கு எந்த கீரையை சாப்பிடவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது
எந்த வியாதிக்கு எந்த கீரை ஏற்றது?
ஒவ்வொரு நோய் அல்லது கோளாறுக்கும் ஒவ்வொரு கீரை பயன்படுத்தப்படுகிறது.
• பசியின்மை ஏற்பட்டால் அதற்கு அகத்திக்கீரையை எடுத்துக்கொள்ளலாம். அகத்திக்கீரையை சூப் வைத்து பருகினால் உங்களுக்கு நன்றாக பசி ஏற்படும்.
• மலச்சிக்கலைப் போக்க முளைக்கீரையை கூட்டு செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.
• சரும வியாதிகளுக்கு அரைக்கீரையை மசித்து சாப்பிட தோல் வியாதிகள் குணமாக உதவும்.
• உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் பருப்புக்கீரையை அடிக்கடி கடைந்து சாப்பிட உங்களுக்கு பலன் கிட்டும்.
• சிறுநீரகக் கோளாறுகளுக்கு சிறுகீரை. சிறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கீரையில் மசியல் செய்து சாப்பிட அந்த பிரச்னைகள் குணமாகும்.
• எலும்பு தொடர்பான தொல்லைகள், எலும்பு தேய்மானம், எலும்பு வலுமின்மை போன்ற பிரச்னைகளுக்கு முருங்கைக்கீரையை சாப்பிட உங்களின் எலும்புகள் வலுப்பெறும்.
• ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தூதுவளைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதில் சூப் அல்லது ரசம் வைத்து பருகவேண்டும். குளிர் காலங்களில் அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம். அனைவரும் சாப்பிடலாம்.
• அனீமியா எனப்படும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் பசலைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அப்போது அனீமியா குணமாகும்.
• சர்க்கரை நோயாளிகள் வெந்தயக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அவர்கள் இரவில் தினமும் சாப்பாத்தி சாப்பிட வெந்தயக் கீரையை அதில் சேர்த்து சாப்பிடலாம்.
• மூட்டு வலிக்கு முடக்கத்தான் கீரை. மூட்டு வலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் முடக்கத்தான் கீரை ரசம் அல்லது சூப் செய்து சாப்பிட மூட்டு வலி குணமாகும்.
எனவே இந்த கீரைகளை சாப்பிட்டு அதிகம் மருத்து, மாத்திரைகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்