Green Dosa: தோசை பிரியர்களே.. இந்த பச்சை தோசையை டிரை பண்ணுங்க.. ரெம்ப ரெம்ப ஹெல்த்தியானது.. எப்படி செய்யலாம் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Green Dosa: தோசை பிரியர்களே.. இந்த பச்சை தோசையை டிரை பண்ணுங்க.. ரெம்ப ரெம்ப ஹெல்த்தியானது.. எப்படி செய்யலாம் பாருங்க!

Green Dosa: தோசை பிரியர்களே.. இந்த பச்சை தோசையை டிரை பண்ணுங்க.. ரெம்ப ரெம்ப ஹெல்த்தியானது.. எப்படி செய்யலாம் பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 08, 2025 04:24 PM IST

Green Dosa: காலை உணவுக்கு ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள். பச்சை தோசையை ஒரு முறை சாப்பிடுங்கள். கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து செய்யப்படும் இந்த பச்சை தோசை மிகவும் சுவையாக இருக்கும்.

Green Dosa: தோசை பிரியர்களே.. இந்த பச்சை தோசையை டிரை பண்ணுங்க.. ரெம்ப ரெம்ப ஹெல்த்தியானது.. எப்படி செய்யலாம் பாருங்க!
Green Dosa: தோசை பிரியர்களே.. இந்த பச்சை தோசையை டிரை பண்ணுங்க.. ரெம்ப ரெம்ப ஹெல்த்தியானது.. எப்படி செய்யலாம் பாருங்க!

பச்சை தோசை செய்முறைக்கு தேவையான பொருட்கள்

கொத்தமல்லி - ஒரு கப்

புதினா - ஒரு கப்

கறிவேப்பிலை - அரை கப்

அரிசி - ஒரு கப்

உளுந்தம் பருப்பு - அரை கப்

வெந்தயம் - ஒரு ஸ்பூன்

வெங்காயம் - ஒன்று

சீரகம் - ஒரு ஸ்பூன்

மிளகாய் - நான்கு

உப்பு - சுவைக்க

எண்ணெய் - போதுமானது

பச்சை தோசை செய்முறை

1. அரிசி, உளுந்து மற்றும் வெந்தய விதைகளை நான்கைந்து மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

2. பிறகு அவற்றை கிரைண்டரில் சேர்த்து அரைக்க வேண்டும்.

3. இந்த கலவையை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும். குறைந்தது 8 மணி நேரம் மாவை புளிக்க வைக்க வேண்டும்.

4. இப்போது கொத்தமல்லி இலைகள், புதினா மற்றும் கறிவேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து மாவில் கலக்க வேண்டும்.

5. சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

6. பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி தனியாக வைக்க வேண்டும்ம்.

7. தோசை மாவுடன் சீரகத்தைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

8. இப்போது அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடாக்கி எண்ணெய் தடவ வேண்டும்.

9. மாவை தோசையாக ஊற்ற வேண்டும். மேலே வெங்காயம், பச்சை மிளகாயை தூவ வேண்டும்.

10. பின்னர் தோசையை திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் அவ்வளவுதான், சுவையான பச்சை தோசை தயார்

11. கொத்தமல்லி , புதினா மற்றும் கறிவேப்பிலை நிறைய போடுகிறோம். எனவே இது பச்சை நிறத்தில் வருகிறது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பச்சை தோசை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அதன் சுவையாக இருக்கும். இது குழந்தைகளுக்கு சிறந்த காலை உணவு என்று கூறப்படுகிறது. அதில் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, அரிசி, உளுந்து போடுகிறோம். இவை அனைத்தும் ஆரோக்கியமான உணவுகள். எனவே இவற்றை அனைவரும் சாப்பிடலாம். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த பச்சை தோசை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். யாருக்கு வேண்டுமானாலும் பிடிக்கும். கறிவேப்பிலையில் முடி உதிர்வை தடுக்கும் சக்தி உள்ளது. இப்படி நாம் இந்த தோசையில் சேர்க்கும், புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லியில் ஏராளமான சத்துக்கள் உள்ளதால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும். முடிந்த வரை இதுபோன்ற சத்தான உணவை வீட்டில் செய்து சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பு, சர்க்கரை போன்ற பல நோய்கள் நன்மை தீண்டுவதை தவிர்க்க இயலும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.