சுண்டைக்காய் புளிக்குழம்பு; வயிற்றில் உள்ள பூச்சிகளை விரட்டியடிக்கும், ஆரோக்கியத்தை அதிகரிக்கும்!
சுண்டைக்காய் புளிக்குழம்பு செய்வது எப்படி?
சுண்டைக்காய் புளிக்குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
சுண்டைக்காய் – 100 கிராம்
(இதை கழுவி நசுக்கி தண்ணீரில் போட்டுவிட்டு உடனே எடுத்து, உடனே அடுப்பில் சேர்த்துவிடவேண்டும். சுண்டைக்காயின் விதைகள் அதிக சகப்புத்தன்மை கொடுக்கும் என்பதால், இதை நாம் சிறிது நீக்கவேண்டும். சுண்டக்காயில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இது உடலில் ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்தும் தன்மை கொண்டதால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. இதயத்துக்கு நல்லது. சுண்டைக்காயை கழுவி, நசுக்கி, மீண்டும் அலசிவிட்டு உடனே தாளிப்பில் சேர்த்து விடவேண்டும். இல்லாவிட்டால் அதன் நிறம் மாறிவிடும். எனவே நீங்கள் கவனமாக இருக்கவேண்டும். இந்தக்காய் கொஞ்சம் கசக்கம் தன்மை கொண்டது என்பதால் பெரும்பாலும் யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் இதுபோல் புளிக்குழம்பு செய்து சாப்பிட அந்த கசப்புச் சுவை காணாமல் போய்விடும்)
எண்ணெய் – 8 டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 30
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தக்காளி – 1 (மசித்தது, அரைத்தது அல்லது பொடியாக நறுக்கியது)
பூண்டு – 10 பல்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
குழம்பு மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
(குழம்பு மிளகாய்த் தூள் இல்லாவிட்டால் மிளகாய்த்தூள், மல்லித்தூள் பயன்படுத்திக்கொள்ளலாம்)
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை அளவு புளிக்கரைசல் – அரை லிட்டர்
(புளியை சூடான நீரில் ஊறவிட்டு, நன்றாக கரைத்து வடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்)
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து பொரிந்தவுடன் கறிவேப்பிலை தாளிக்கவேண்டும். அடுத்து சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கி எடுக்கவேண்டும். அடுத்து மசித்ததக்காளியை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.
மஞ்சள் தூள், குழம்பு மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து வதக்கி அதன் மேல் சுத்தம் செய்து வைத்துள்ள சுண்டக்காயையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். அடுதது புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு இறக்கினால் சூப்பர் சுவையான சுண்டைக்காய் புளிக்குழம்பு தயார்.
இதை சூடான சாதத்தில் சேர்த்து அப்பளம் அல்லது வத்தல் வைத்துக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும் அல்லது ஆம்லேட் செய்துகொள்ளலாம் அல்லது பருப்பு துவையலுடன் சேர்த்து சாப்பிடலாம்.
உங்கள் வீட்டில் சர்க்கரை நோயாளிகள் இருந்தால், இந்தக் குழம்பை அவர்களுக்கு அடிக்கடி செய்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். அத்தனை சுவையானது. அதுமட்மின்றி ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இந்த சுண்டைக்காய் குழம்பை நீங்கள் உங்கள் வீட்டில் அடிக்கடி செய்து சாப்பிடுங்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்