வழக்கமான இனிப்பு உணவு சலித்து விட்டதா? அப்போ பஞ்சாபி பாஸ்தா பாயாசம் செய்யலாமே! இதோ எளிமையான ரெசிபி!
பஞ்சாபில் பிரபலமாக இருக்கும் பஞ்சாபி பாஸ்தா பாயாசம் தான் மிகவும் சுவையான ஒரு இனிப்பு உணவாக கருதப்படுகிறது. இதனை எளிமையாக வீட்டிலேயே செய்யலாம். இந்த செய்முறையை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ளது முழுமையாக படியுங்கள்.

நமது வீட்டில் கொண்டாட்டம் என்றால் இனிப்பு உணவு தான் முதன்மையானதாக இருக்கும். அனைத்து விதமான திருவிழாக்களிலும் புதுவகையான இனிப்பு உணவுகளை நாம் செய்து சாப்பிடுகிறோம். அந்த அளவிற்கு நமக்கு இனிப்பு உணவின் மீது அதிக பிரியம் இருந்து வருகிறது. இந்த நிலையில் நாம் வழக்கமாக வீட்டிலே செய்யும் இனிப்பு உணவுகள் சிலருக்கு சலித்து போகி இருக்கலாம். அதற்கு காரணம் அடிக்கடி ஒரே மாதிரியான இனிப்பு உணவை சாப்பிடுவதாக இருக்கும். இது போன்ற சமயங்களில் மற்ற மாநிலங்களில் செய்யப்படும் இனிப்பு உணவுகளை முயற்சி செய்து பார்க்கலாம். உங்களுக்கு அப்படி ஒரு இனிப்பை தான் நாங்கள் இங்கு கொண்டு வந்திருக்கிறோம். பஞ்சாபில் பிரபலமாக இருக்கும் பஞ்சாபி பாஸ்தா பாயாசம் தான் மிகவும் சுவையான ஒரு இனிப்பு உணவாக கருதப்படுகிறது. இதனை எளிமையாக வீட்டிலேயே செய்யலாம். இந்த செய்முறையை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ளது முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
1 கப் பாஸ்தா
3 கப் பால்
அரை கப் சர்க்கரை
5 ஸ்பூன் நெய்
கால் கப் துருவிய தேங்காய்
6 முதல் 8 முந்திரிப் பருப்பு
3 முதல் 5 ஏலக்காய் துண்டுகள்
செய்முறை
பஞ்சாபி பாஸ்தா பாயாசம் செய்வதற்கு முதலில் பாஸ்தாவை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காயையும் நான்கு அல்லது ஐந்து முந்திரி பருப்புகளையும் சேர்த்து ஒன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து உருக விட வேண்டும். நெய் உருகிய பின்னர் அதில் முந்திரிப்பருப்பை சேர்த்து வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே கடாயில் பாலை ஊற்றி கொதிக்க விடவும். பால் நன்றாக காய்ந்ததும் அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காயை சேர்க்க வேண்டும். சர்க்கரை நன்கு கரைந்து அந்த பால் கெட்டியாக ஆகாமல் இருக்கும் பக்கத்தில் அதில் நாம் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்க வேண்டும். பின்னர் வேகவைத்த பாஸ்தாவை இதில் சேர்க்க வேண்டும். பத்து நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட வேண்டும். அப்போதுதான் பாயாசம் நன்கு சுவையாக இருக்கும். அதிக கெட்டியாகிவிட்டால் கூடுதலாக பால் அல்லது சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாயாசம் பதத்திற்கு கொண்டுவர வேண்டும். இப்பொழுது இறக்கினால் சுவையான பஞ்சாபி பாஸ்தா பாயாசம் ரெடி. இதனை நீங்களே உங்கள் வீட்டில் எளிமையாக செய்ய முடியும். குழந்தைகளுக்கு இது போன்று வித்தியாசமாக செய்து தரும் போது விரும்பி சாப்பிடுவார்கள். சர்க்கரை உள்ள பெரியவர்களுக்கு சர்க்கரை அளவை குறைத்து போட்டு செய்து கொடுக்கலாம்.

டாபிக்ஸ்