வழக்கமான சிக்கன் குழம்பு சலித்து விட்டதா? அப்போ புதுசா சிக்கன் ஸ்ட்யு ட்ரை பண்ணி பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வழக்கமான சிக்கன் குழம்பு சலித்து விட்டதா? அப்போ புதுசா சிக்கன் ஸ்ட்யு ட்ரை பண்ணி பாருங்கள்!

வழக்கமான சிக்கன் குழம்பு சலித்து விட்டதா? அப்போ புதுசா சிக்கன் ஸ்ட்யு ட்ரை பண்ணி பாருங்கள்!

Suguna Devi P HT Tamil
Published May 07, 2025 05:16 PM IST

சிக்கனில் பல விதமான உணவுகள் செய்யப்பட்டு நாள் தோறும் சாப்பிடப்படுகிறது. வழக்கமான சிக்கன் ரெசிபிகள் இல்லாமல் புது விதமான ரெசிபி செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களா? அதற்கு தான் இந்த சுவையான சிக்கன் ஸ்ட்யு ரெசிபியை கொண்டு வந்து இருக்கிறோம்.

வழக்கமான சிக்கன் குழம்பு சலித்து விட்டதா? அப்போ புதுசா சிக்கன் ஸ்டூ ட்ரை பண்ணி பாருங்கள்!
வழக்கமான சிக்கன் குழம்பு சலித்து விட்டதா? அப்போ புதுசா சிக்கன் ஸ்டூ ட்ரை பண்ணி பாருங்கள்!

தேவையான பொருட்கள்

அரை கிலோ சிக்கன்

3 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

ஒரு பட்டை

4 கிராம்பு

4 ஏலக்காய்

2 பெரிய வெங்காயம்

5 பற்கள் பூண்டு

1 துண்டு இஞ்சி

10 முந்திரி பருப்பு

4 பச்சை மிளகாய்

1 உருளைக்கிழங்கு

1 கேரட்

அரை கப் தேங்காய் பால்

அரை டீஸ்பூன் கரம் மசாலா

1 கறிவேப்பிலை

1 டீஸ்பூன் மிளகு

தேவையான அளவு உப்பு

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேங்காயெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், சிறிய இலவங்கப்பட்டை, ஏலக்காய், சில கிராம்பு சேர்த்து நறுமணம் வரும் வரை வறுக்கவும். பின்னர் இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வறு பட்டதும், பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் ஒரு உருளைக்கிழங்கு பெரிய துண்டுகளாக நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு ஆகியவற்றை போட வேண்டும். மேலும் அதில் கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும். அதன் பிறகு சுத்தமாக கழுவிய சிக்கன் துண்டுகள் சேர்த்து, அனைத்து சுவைகளும் சரியாக கலந்து விடுமாறு கிளறவும்.

சிக்கன் நிறம் மாறியதும், உப்பு மற்றும் அரைத்த பூண்டு விழுது சேர்த்து நன்றாக கிளறவும். இப்போது தண்ணீர் கலந்த முதல் தேங்காய் பால் சேர்க்க வேண்டும். இதனை கலக்கி விட்டு 15 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும். இப்பொழுது சிக்கன் மற்றும் உருளைக்கிழங்கு நன்றாக வெந்துள்ளதா என்று பார்க்கவும். சிறிது உருளைக்கிழங்கை மசித்து விடவும், இது இன்னும் கிரீமியாக மாற்றும். தீயை குறைத்து கெட்டியான தேங்காய் பாலை சேர்க்கவும். மெதுவாக கலக்கி அரை டீஸ்பூன் கரம் மசாலா தூள் சேர்க்கவும். மிதமான தீயில் சமைத்து அடுப்பை அணைக்கவும். பின்னர் தாளிக்க, ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பிறகு, முந்திரி பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்கவும். இந்த சுவையான தாளிப்பை ஸ்டூவில் ஊற்றி, மூடி வைத்து 10 நிமிடங்கள் விடவும். சுவையான சிக்கன் ஸ்டயு தயார். இதனை வைத்து சூடான சாதம், இடியாப்பம், சப்பாத்தி என பல வகையான உணவுகளோடு சேர்த்து சாப்பிடலாம்.

Suguna Devi P

TwittereMail
சுகுணா தேவி பி, கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு ஊடகம், மொழிபெயர்ப்பு துறை மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தேசம், லைப்ஸ்டைல் சர்வதேசம், சினிமா உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஆங்கில இலக்கியத் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர், விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் 2018-2019 ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளார். மேலும் ஈடிவி பாரத் தமிழ், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான இதழ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.